search icon
என் மலர்tooltip icon

    கணினி

    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.
    • குறுகிய கால சலுகையாக பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சோனி இந்தியா நிறுவனம் கேமர்களுக்கு நற்செய்தியை அறிவித்து இருக்கிறது. இன்று (ஜூலை 25) துவங்கி பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 5 விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வுக்கு முன் இந்த கன்சோல்களின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    சோனி பிளே ஸ்டேஷன் 5 சலுகை விவரங்கள்:

    பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 47 ஆயிரத்து 490 என்று மாறி இருக்கிறது. இந்த விலை குறைப்பு டிஸ்க் எடிஷனுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 வைத்திருப்போருக்கு அசத்தல் கேம்களை இந்த ஆண்டு வழங்க இருக்கிறது.

    அந்த வகையில், ஹாக்வர்ட்ஸ் லெகசி, பைனல் பேன்டசி XVI, மார்வல் ஸ்பைடர் மேன் 2, அசாசின்ஸ் கிரீட் மிரேஜ் மற்றும் ஆலன் வேக் 2 உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    சோனி இந்தியாவின் சிறப்பு சலுகை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை ரிடெயில் ஸ்டோர், ஆன்லைன் சேனல்கள், அமேசான், ப்ளிப்கார்ட், ஷாப்அட்எஸ்சி, ரிலையன்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் பெற்றிட முடியும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை லேப்டாப் சீரிஸ் தான் ஜியோபுக்.
    • அளவில் சிறியதாகவும், சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஜியோபுக் லேப்டாப் கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்-இன் 2nd Gen மாடல் அறிமுகம் பற்றிய அதிகாரப்பர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் குறைந்த விலை லேப்டாப் மாடலை 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. தோற்றத்தில் புதிய லேப்டாப் அதிக மாற்றங்கள் இன்றி, ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது.

    புதிய லேப்டாப் மாடலுக்காக அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டீசர்களில் புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய லேப்டாப் எடை 990 கிராம் என்று தெரியவந்துள்ளது. முந்தைய ஜியோபுக் மாடலின் எடை 1.2 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. புதிய ஜியோபுக் மாடலில் ஜியோஒஎஸ், ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஜியோபுக் மாடலின் அறிமுக விலை ரூ. 15 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான விலை ஆகும். இதில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இரண்டு USB போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

     

    முந்தைய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய 2nd Gen ஜியோபுக் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    • புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களில் 60Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் டிவி மற்றும் பேட்ச்வால் பிளஸ் வழங்கப்படுகிறது.

    சியோமி இந்தியா நிறுவனம் புதிய சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கூகுள் டிவி சேவை வழங்கப்படுகிறது.

    புதிய டிவிக்கள் 32 இன்ச் HD, 40 இன்ச் FHD மற்றும் 43 இன்ச் FHD மாடல்கள் ஆகும். மெல்லிய மெட்டாலிக் டிசைன், பெசல் லெஸ் டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. கூகுள் டிவி மற்றும் கூகுள் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை சீரான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகின்றன.

    இத்துடன் 20 வாட் டால்பி ஆடியோ மற்றும் DTS விர்ச்சுவல் X சரவுன்ட் சவுன்ட் வழங்கப்படுகிறது. புதிய பேட்ச்வால் பிளஸ் சேவை பொழுதுபோக்கிற்காக உள்நாடு மட்டுமின்றி சர்வதேச தரவுகளை வழங்குகின்றன. பேட்ச்வால் பிளஸ் சேவையில் மொத்தம் 200-க்கும் அதிக லைவ் சேனல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் யூடியூப் இன்டகிரேஷன், யூடியூப் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் குவாட் கோர் ஏ35 சிப்செட், 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி வரையிலான மெமரி, டூயல் பேன்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 2 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், AV மற்றும் இயர்போன் போர்ட், ரிமோட் கன்ட்ரோல், வழங்கப்படுகிறது.

    சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ்:

    32 இன்ச் HD 1366x768 பிக்சல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

    40 இன்ச் FHD 1920x1080 பிக்சல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

    43 இன்ச் FHD 1920x1080 பிக்சல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

    மெட்டல் மற்றும் பெசல் லெஸ் டிசைன்

    178 டிகிரி வியூவிங் ஆங்கில், விவிட் பிக்சர் என்ஜின்

    60Hz ரிப்ரெஷ் ரேட்

    20 வாட் ஸ்பீக்கர்கள்

    டால்பி ஆடியோ, DTS:HD | DTS விர்ச்சுவல் X

    ஆட்டோ லோ லேடன்சி மோட்

    டால்பி அட்மோஸ் பாஸ் த்ரூ

    கூகுள் டிவி, க்ரோம்காஸ்ட் பில்ட்-இன், ஹே கூகுள் மற்றும் பிளே ஸ்டோர்

    கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்

    பேட்ச்வால் பிளஸ், Mi ஹோம் இன்டகிரேஷன்

    ப்ளூடூத் 5.0, வைபை

    2x HMDI, 2x USB, 1x ஈத்தர்நெட், AV, 3.5mm ஆடியோ ஜாக்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32 இன்ச் HD ரூ. 14 ஆயிரத்து 999, அறிமுக சலுகையாக ரூ. 13 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும்

    சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40 இன்ச் FHD ரூ. 22 ஆயிரத்து 999

    சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 43 இன்ச் FHD ரூ. 24 ஆயிரத்து 999

    புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர், ப்ளிப்கார்ட் வலைதளம் மற்றும் ரிடெயில் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விற்பனை ஜூலை 25-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.

    • Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி-க்களில் ஏரோ-ஸ்பேஸ் தர மெட்டல் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது.
    • புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 85 இன்ச் மற்றும் 95 இன்ச் என இருவித ஸ்கிரீன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    Vu நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய Vu ஸ்மார்ட் டிவிக்களின் விலையும், சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் Vu மாஸ்டர்பீஸ் QLED என்று அழைக்கப்படுகின்றன.

    புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 85 இன்ச் மற்றும் 95 இன்ச் என இருவித ஸ்கிரீன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் குவான்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் 4K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 10-பிட் கலர் டெப்த் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR 10+, HLG மற்றும் MEMC வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த டிவிக்களில் 4K தரவுகளை அப்-ஸ்கேலிங் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் AMD ஃபிரீ-சின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி-க்களில் ஏரோ-ஸ்பேஸ் தர மெட்டல் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது. ஆடியோவை பொருத்தவரை நான்கு மாஸ்டர் ஸ்பீக்கர்கள், ஒரு சப்-வூஃபர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை 204 வாட் சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, டால்பி டிஜிட்டல் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. Vu மாஸ்டர்பீஸ் QLED ஸ்மார்ட் டிவிக்கள் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றன.

    இத்துடன் கூகுள் டிவி ஒஎஸ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, டூயல் பேன்ட் வைபை, நான்கு HDMI, இரண்டு USB போர்ட்கள் மற்றும் ஈத்தர்நெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 95 இன்ச் மாடல் விலை ரூ. 6 லட்சம் என்றும் 85 இன்ச் மாடல் விலை ரூ. 3 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை Vu அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் நடைபெறுகிறது.

    • ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
    • ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மெக்கானிக்கல் கீபோர்டு, ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 2023 வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது.

    அலுமினியம்-கிராஃப்ட் செய்யப்பட்டு மிகக் குறைந்த எடை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் ஹாட்-ஸ்வாப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டைப்பிங்கின் போது தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்குகின்றன.

     

    கீக்ரோன் உடனான கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது. இதற்காக இந்த கீபோர்டில் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு இந்த கீபோர்டினை ஐந்து மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

     

    புதிய ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் டார்க் கிரே மற்றும் லைட் கிரே என்று இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விறப்னை ஒன்பிளஸ் வலைதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி துவங்க இருக்கிறது.

    • லெனோவோ நிறுவனத்தின் டேப் M10 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப் M10 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன், டேப் பென் பிளஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 7700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லெனோவோ டேப் M10 5ஜி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கான வீடியோ ஸ்டிரீமிங் வழங்குகிறது.

     

    லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:

    10.61 இன்ச் LCD ஸ்கிரீன், 1200x2000 பிக்சல் ரெசல்யூஷன்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    4 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம்

    6 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம்

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    13MP செல்ஃபி கேமரா

    8MP பிரைமரி கேமரா

    7700 எம்ஏஹெச் பேட்டரி

    ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    3.5mm ஆடியோ ஜாக்

    டூயல் ஸ்பீக்கர்கள்

    டால்பி அட்மோஸ்

    மைக்ரோபோன்

    டேப் பென் பிளஸ் சப்போர்ட்

    இந்திய சந்தையில் லெனோவோ டேப் M10 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன.
    • கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஏஒசி நிறுவனம் தொழில்முறை கேமர்களை குறிவைத்து, CU34G3S வளைந்த கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏஒசி ஏகான் ப்ரோ 27 இன்ச் QHD 170Hz கேமிங் மானிட்டரை தொடர்ந்து, புதிய மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கேமிங் மானிட்டர் 3440x1440 ரெசல்யூஷன், அகலமான குவாட் ஹெச்டி 165Hz ரிப்ரெஷ் ரேட், 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 34 இன்ச் அகலமான குவாட் ஹெச்டி வளைந்த டிஸ்ப்ளே, 21:9, VA டிஸ்ப்ளே தலைசிறந்த நிறங்களை அனைத்து கோணங்களில் இருந்து பார்க்கும் போதும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

     

    இத்துடன் ஏஎம்டி ஃபிரீசின்க் பிரீமியம் டியர்-ஃபிரீ இமர்ஷன் தொழில்நுட்பம் தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இதன் மெல்லிய டிசைன் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு, ஃபிரேம்லெஸ் கேமிங் மானிட்டர் சிறப்பான விஷூவல் அனுபவத்தை வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    பயனர்கள் தங்களது லேப்டாப், கேமிங் கன்சோல் அல்லது கேமிங் சிபியு உள்ளிட்டவைகளை எளிதில் இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது மியூசிக், கேமிங், பொழுதுபோக்கு உள்ளிட்ட பயன்பாடுகளின் போது, தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டர் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் வலைதளத்தில் தற்போது இந்த மானிட்டர் ரூ. 41 ஆயிரத்து 090 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

    • டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொஷிபா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M650 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய M650 மாடலில் எலிகன்ட் டிசைன், மெல்லிய பெசல் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட மெட்டல் கட்டமைப்பு உள்ளது.

    4K மினி எல்இடி டிஸ்ப்ளே, குவான்டம் டாட் கலர், ஃபுல் அரே லோக்கல் டிம்மிங் ப்ரோ கொண்டிருக்கும் M650 மாடல் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகரான, தலைசிறந்த நிறங்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR10+ அடாப்டிவ் HDR தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள REGZA என்ஜின் ZR காட்சிகளின் அடிப்படையில் அவற்றின் தரத்தை ரியல்-டைமில் மேம்படுத்தும்.

     

    கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டயலாக் என்ஹான்சர், 360 சவுன்ட் அப்-ஸ்கேலிங், REGZA பவர் ஆடியோ ப்ரோ வழங்கப்பட்டு இருக்கிறது. இவை சக்திவாய்ந்த பேஸ் மற்றும் அதிக தெளிவான குரல்களை கேட்க வழி செய்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு HDMI, ப்ளூடூத் ஆடியோ, டூயல் பேன்ட் வைபை மற்றும் யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த டிவி வாய்ஸ் கன்ட்ரோல் வசதி- அலெக்சா, விடா வாய்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் ஜூலை 15 முதல் ஜூலை 21-ம் தேதி வரை அமேசான் தளத்தில் சிறப்பு சலுகையாக அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    அதன்படி இந்த தேதிகளில் 55 இன்ச் M650 4K டிவி ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் M650 4K மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த டிவியுடன் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    • இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்குகிறது.
    • ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்பி நிறுவனம் தனது என்வி சீரிஸ் லேப்டாப் மாடல்களில் புதிய வெர்ஷனை இணைத்துள்ளது. புதிய ஹெச்பி என்வி X360 15 லேப்டாப், இன்டெல் மற்றும் ஏஎம்டி என இருவித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த லேப்டப்-இல் உள்ள டிஸ்ப்ளே, கணினிகளுக்காக முதல் முறை சான்று பெற்றுள்ளன.

    புதிய ஹெச்பி என்வி X360 15 மாடலின் டாப் வேரியண்டில் IMX என்ஹான்ஸ்டு சான்று பெற்று இருக்கிறது. சந்தையில் இதுபோன்ற சான்று பெற்ற முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே, ஆஸ்பெக்ட் ரேஷியோவை நீட்டித்து வழங்குகிறது.

     

    இத்துடன் IMAX தியட்ரிக்கல் சவுன்ட் மிக்ஸ் வசதி உள்ளது. இது டிடிஎஸ் X தொழில்நுட்பத்தின் விசேஷ டியூனிங்கை பயன்படுத்தி, சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் டிஸ்ப்ளே கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் டச் மற்றும் பென் இன்புட் வசதிகளை கொண்டுள்ளது.

    தற்போது இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்கி வருகிறது. எனினும், ஹெச்பி இந்தியா ஒடிடி தளத்துடன் கூட்டணி தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது பயனர்கள் சிஸ்டத்தை விட்டு தூரமாக நடந்து சென்றதை கண்டறிந்து, தானாக லாக் செய்து விடும். பிறகு, பயனர்கள் லேப்டாப் அருகில் வருவதை உணர்ந்து, அதனை தானாக அன்லாக் செய்து விடும். ஹெச்பி பிரெசன்ஸ் 2.0 அம்சம் கொண்டு வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஹெச்பி என்வி X360 15 அம்சங்கள்:

    15.6 இன்ச் FHD+ OLED, 500-நிட்ஸ் HDR, IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே

    5MP IR கேமரா, டூயல் மைக்ரோபோன்

    பேங் &ஆல்ஃபுசன் டூயல் ஸ்பீக்கர்கள்

    வைபை 6E, ப்ளூடூத் 5.3

    4-செல் 55 வாட் ஹவர் லி-அயன் பாலிமர் பேட்டரி

    65 வாட் அல்லது 90 வாட் அடாப்டர்

    இன்டெல் கோர் i5-1335U i7-1355U பிராசஸர்

    ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அல்லது NVIDIA GeForce RTX3050 GPU

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR5 ரேம்

    2 தன்டர்போல்ட் 4 போர்ட்கள்

    ஏஎம்டி வேரியண்ட்

    ஏம்டி ரைசன் 5 7530U அல்லது ஏஎம்டி ரைசன் 7 7730U பிராசஸர்

    ஏஎம்டி ரேடியான் கிராஃபிக்ஸ்

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்

    10Gbps யுஎஸ்பி சி போர்ட்

    விலை விவரங்கள்:

    ஹெச்பி என்வி X360 15 2-இன்-1 லேப்டாப் விலை ரூ. 78 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் மற்றும் ஹெச்பி வொர்ல்டு ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இந்த லேப்டாப் நைட்ஃபால் பிளாக் மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹெச்பி என்வி லேப்டாப் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • அமேசான் பிரைம் டே சேல்-க்காக புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    • வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

    வெஸ்டிங்ஹவுஸ் பிரான்டு இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. W2 சீரிசில் இடம்பெற்று இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இத்துடன் குவாண்டம் சீரிசில் 4K GTV மாடல்கள் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன.

    அமேசான் உடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிரைம் டே சேல்-இன் போது விற்பனை செய்யப்பட உள்ளன. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15-ம் தேதி துவங்க இருக்கிறது.

    வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி-க்கள்

    முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு டிவி HD மாடல்கள் ரியல்டெக் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை 2x 36வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மூலம் வழங்குகின்றன. இத்துடன் காட்சிகளில் மூழ்க செய்யும் வகையிலான சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இதில் 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளன.

     

    வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆன்ட்ராய்டு டிவி அம்சங்கள்:

    பெசல் லெஸ் டிசைன்

    32-இன்ச் HD, 40-இன்ச் FHD மற்றும் 43-இன்ச் FHD

    ரியல்டெக் பிராசஸர்

    1 ஜிபி ரேம்

    8 ஜிபி ரோம்

    2x 36வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம்

    வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட், ஒடிடி தளங்களுக்கான ஹாட்கீ பட்டன்கள்

    3xHDMI போர்ட்கள், 2xUSB போர்ட்கள்

    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்

     

    வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள்:

    பெசல்-லெஸ் மற்றும் ஏர்-ஸ்லிம் டிசைன்

    50-இன்ச் மற்றும் 55-இன்ச் 4K ஸ்கிரீன்

    4K டில்ப்ளே மற்றும் HDR 10+

    MT9062 பிராசஸர்

    2 ஜிபி ரேம்

    16 ஜிபி மெமரி

    2x 48 வாட் டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

    3x HDMI போர்ட்கள், 2x USB போர்ட்கள்

    ப்ளூடூத் மற்றும் வைபை கனெக்டிவிட்டி

    வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட்

    கூகுள் டிவி ஒஎஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    வெஸ்டிங்ஹவுஸ் 32-இன்ச் HD டிவி விலை ரூ. 10 ஆயிரத்து 499

    வெஸ்டிங்ஹவுஸ் 40-இன்ச் FHD டிவி விலை ரூ. 16 ஆயிரத்து 999

    வெஸ்டிங்ஹவுஸ் 43-இன்ச் FHD டிவி விலை ரூ. 17 ஆயிரத்து 999

    வெஸ்டிங்ஹவுஸ் 50-இன்ச் 4K டிவி விலை ரூ. 27 ஆயிரத்து 999

    வெஸ்டிங்ஹவுஸ் 55-இன்ச் 4K டிவி விலை ரூ. 32 ஆயிரத்து 999

    அமேசான் பிரைம் டே சேல்-இன் போது இந்த டிவி மாடல்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த விற்பனை ஜூலை 14-ம் தேதி துவங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • புதிய ஐமேக் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் வரை இருக்கும் என்று தகவல்.
    • ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் அளவில் பெரிய ஐமேக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கிட்டத்தட்ட 32 இன்ச் அளவு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    புளூம்பர்க்-இன் மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஐமேக் மாடல்கள் அதன் ஆரம்பக்கட்ட பணிகளில் உள்ளதாகவும், இவை 2024 அல்லது 2025 வரை அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

     

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 30 இன்ச் வரையிலான டிஸ்ப்ளே கொண்ட பெரிய ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் டாப் என்ட் ப்ரோ டிஸ்ப்ளே XDR மானிட்டர் போன்றே, இதன் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் வரை இருக்கும் என்று தற்போதைய தகவல்களில் அவர் தெரிவித்துள்ளார்.

    2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ப்ரோ டிஸ்ப்ளே XDR விலை 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே அதிகபட்சம் ரெட்டினா தரம் கொண்ட தரவுகளை 6K ரெசல்யுஷனில் ஒளிபரப்பும் திறன் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் இன்டெல் சார்ந்து இயங்கிய 27 இன்ச் மேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் விற்பனை சமீபத்தில் நிறுவத்தப்பட்டது. மேலும் பெரிய ஸ்கிரீன் கொண்ட ஐமேக் மாடல்களை அறிமுகம் செய்வது பற்றியும் ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    • சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
    • கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா வேரியண்ட்கள் உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஜூலை 26-ம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z மடிக்கக்கூடிய சாதனங்கள், கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. இது ஐரோப்பிய சந்தைக்கான விலை ஆகும். கேலக்ஸி டேப் S9 சீரிசில் ஸ்டான்டர்டு, பிளஸ் மற்றும் அல்ட்ரா என மூன்று வேரியண்ட்கள் உள்ளன.

     

    விலை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி) 929 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1049 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 பிளஸ் ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1149 யூரோக்கள்

    சாம்சங் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா ( 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி) 1369 யூரோக்கள்

    இந்த விலை விவரங்கள் வைபை மாடலுக்கானது ஆகும். இவற்றில் வரிகள் சேர்க்கப்பட்டு விட்டன. சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், குவாட் ஸ்பீக்கர் செட்டப், ஆப்டிக்கல் கைரேகை சென்சார், AMOLED 2x WQVGA+ டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது. கேலக்ஸி டேப் S9, S9 பிளஸ் மற்றும் S9 அல்ட்ரா மாடல்களில் முறையே 8400, 10,090 மற்றும் 11,200 எம்ஏஹெச் பேட்டரி யூனிட்கள் வழங்கப்படுகிறது.

    ×