search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சூரத் தொகுதியில் முகேஷ தலால் உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்குள்ள சூரத் தொகுதிக்கான தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அவரது வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது.

    இந்நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூரத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சூரத் பாராளுமன்ற தேர்தலை மேட்ச் ஃபிக்ஸ் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஏனெனில், மக்கள் மத்தியில் உள்ள கோபத்தைக் கண்டு அக்கட்சி பயந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    • தைவானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இதனால் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.

    தைபே:

    தைவான் தலைநகர் தைபேயில் நேற்று நள்ளிரவு 11.35 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தைபே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    ஏற்கனவே கடந்த 3-ம் தேதி தைவானின் ஹூவாலியன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவித்தது.
    • இந்த வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இடா நகர்:

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 19-ம் தேதி நடந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தலுடன், சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    இதில் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மேலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்திருந்தன. இவ்வாறு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிகளில் 24ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று சித்ரா பவுர்ணமி.
    • மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 10 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி மறுநாள் விடியற்காலை 5.54 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: சித்திரை இரவு 11 மணி வரை. பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சித்ரா பவுர்ணமி. வாஸ்து நாள் (காலை 8.54 மணி முதல் 9.30 மணி வரை வாஸ்து செய்வது நன்று). மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று, இசைஞானியார் நாயனார் குருபூஜை- உத்தர கோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி தேரோட்டம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுபம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-பரிவு

    கடகம்-உயர்வு

    சிம்மம்-மேன்மை

    கன்னி-உழைப்பு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- களிப்பு

    மகரம்-சுகம்

    கும்பம்-வரவு

    மீனம்-இன்பம்

    • வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார்.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மதுரை:

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

    வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஊடுருவல்காரர்களுக்கு உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ?
    • இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    ராஜஸ்தானில் நேற்று பரப்புரை செய்த பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புக் கருத்துகளை பேசிய நிலையில், இன்று உ.பி. அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி," அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ? என கேட்டிருந்தார்.

    நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:-

    இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது.

    ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
    • தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்று வேண்டுகோள்.

    ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டாளர்கள் இரண்டு பிரபலமான இந்திய மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருள் இருப்பதாக தடை விதித்துள்ளது.

    இதை அடுத்து, நாட்டில் உள்ள எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகளின் அனைத்து உற்பத்தி பிரிவுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதில்,"நாட்டின் அனைத்து உணவு ஆணையர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மசாலாப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு நாட்களில், நாட்டின் அனைத்து மசாலா உற்பத்தி ஆலைகளில் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்படும்.

    எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் மட்டுமின்றி, அனைத்து மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் மாதிரிகள் எடுக்கப்படும். இன்னும் 20 நாட்களில் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வரும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    தடை குறித்து ஹாங்காங், சிங்கப்பூர் கூறுவது என்ன ?

    ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டாளர்கள், "அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அளவுகளில்" எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறப்படும் இந்த இரண்டு மசாலா பிராண்டுகளின் நான்கு பொருட்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மக்களை எச்சரித்துள்ளனர். எத்திலீன் ஆக்சைடு புற்றுநோய்க்கான சர்வதேச அமைப்பால் 'குரூப் 1 கார்சினோஜென்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    எம்டிஎச்-ன் மூன்று மசாலா பொருட்கள் -- மெட்ராஸ் கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), சாம்பார் மசாலா (கலவை மசாலா தூள்), மற்றும் கறி பொடி (கலவை மசாலா தூள்) -- எவரெஸ்டின் மீன் கறி மசாலாவுடன் "ஒரு பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு" உள்ளது.

    எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட்ஸ் இரண்டும் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மசாலா வாரியத்திடம், தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவும் சேர்க்கப்படக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.

    • இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது
    • சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணி கதைக்களமாக உருவாகவுள்ளது.சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17 ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 24, பேட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தில் நடிக்க காஸ்டிங் கால் போஸ்டரை கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 8 வயது முதல் 80 வயது வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆண் மற்றும் பெண் வரம்பில்லை எனவும் மொழி தடையில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் நடிப்பை பிரதிபலிக்கும் விதமாக 1 முதல் 3 நிமிட வீடியோவை பெயர் மற்றும் பிற விவரங்களை மென்ஷன் செய்து 7550011050 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என அந்த போஸ்டரில் குறிப்பிட்டள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    • எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டி.

    கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட நிலையில், ஈஸ்வரப்பா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஹாவேரி தொகுதியில் தனது மகனுக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, கட்சியின் மாநில தலைவரையும், எடியூரப்பாவையும் ஈஸ்வரப்பா கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×