search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

    பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பராக் தன் பங்கிற்கு 34 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்தடுத்து வந்த துருவ் ஜூரெல், அஸ்வின் மற்றும் ஹெட்மையர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், துவக்கத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். இவருடன் போவெல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் ஹர்ஷித் ரானா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் அரோரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சதம் அடித்தார்.
    • ஆவேஷ் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

    பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி சதம் அடித்த சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்களை குவித்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்தல் செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப் சால்ட் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 49 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.

    தொடர்ந்து விளையாடிய அவர் 56 பந்தில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

    • ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.
    • புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே போட்டியில் தோல்வியை தழுவி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.

    இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே தோல்வியை தழுவியுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

    • சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 19.2 ஓவரில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி களம் இறங்கினார். அவர் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 206 ரன்களை குவித்தது. இதுதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    இந்நிலையில், போட்டியின் போது டோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்களில் கிளாசனை முந்தியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 287 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் சதமும் ஹென்ரிச் கிளாசென் அரை சதமும் விளாசினர்.

    ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் போட்டியின் 17-வது ஓவரில் அவர் அடித்த சிக்சர் ஒன்று 106 மீ தூரம் வரை சென்றது. இதன் மூலமாக இந்த சீசனில் அதிக தூரம் சிக்சர் அடித்து வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக வெங்கடேஷ் ஐயர் அடித்த சிக்சர் 106 மீ தூரம் சென்றது. நிக்கோலஸ் பூரன் 106 மீ மற்றும் இஷான் கிஷான் 103 மீ தூரம் வரை சிக்சர் அடித்திருந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்தி களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

    அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் ஒன்று அதிக தூரம் வரை சென்று சாதனையை உருவாக்கியுள்ளது. 106 மீ அதிகபட்சமாக இருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 108 மீ நீண்ட தூரம் சிக்சர் அடித்து கிளாசெனின் சாதனையை முறியடித்துள்ளார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    • பந்து வீச்சில் ஆர்சிபி அணியின் 4 பவுலர்கள் அரைசதம் விளாசினர்.
    • அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 68 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

    பெங்களூருவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் பவுலிங் சரியில்லை என்று அவருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும், ரீஸ் டாப்லி 68 ரன்களும், வைஷாக் விஜயகுமார் 64 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும் வாரி வழங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்வதை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே மனமுடைந்து நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மோசமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசியதை கண்ட விராட் கோலி ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே திட்டித் தீர்த்தார். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.

    இதனை கண்ட ரசிகர்கள் பீல்டிங் நின்றால் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த வீரரை இப்படி கண்கலங்கும் வகையில் நிற்க வைத்து வீட்டீர்களே என ஆர்சிபி பவுலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

    ஆர்சிபி ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் விராட் கோலிக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று.
    • பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். டி20 கிரிக்கெட் ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம்.

    ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விசயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன் ரேட்டினை மனதில் வைத்து தான் எந்த இடத்திலும் ரன்களை குறைய விடாமல் விளையாடினோம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இருந்தாலும் எங்கள் பேட்டர்கள் கடைசி வரை நின்று விடாமுயற்சியுடன் வெற்றிக்கு போராடியது மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு டு பிளெசிஸ் கூறினார்.

    • 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 10- வது சுற்று நேற்று நடந்தது.
    • டி. குகேஷ் இந்த சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியை எதிர் கொண்டார்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 10- வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியை எதிர் கொண்டார். 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்ட மும் டிராவில் முடிந்து இருந்தது.

    10 சுற்றுகள் முடிவில் குகேசும், இயன் நெபோம்னி யாச்சியும் தலா 6 புள்ளி களுடன் முன்னிலையில் உள்ளனர். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ளன.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 10-வது ரவுண்டில் சக நாட்டவரான விதித் குஜராத்தியுடன் மோதினார். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்ற ஆட்டங்களில் ஹிகாரு நகமுரா , பேபி யானோ (இருவரும் அமெ ரிக்கா) வெற்றி பெற்றனர். அவர்கள் முறையே நிஜாத் அப்சோவ் (அ ஜர்பைஜான்), அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) ஆகியோரை தோற்கடித்தனர்.

    பெண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா சகோதரி வைஷாலி பல்கேரியாவை சேர்ந்த நூர்சியுல் சலிமோ வாவை 10-வது சுற்றில் எதிர் கொண்டார். இதில் வைஷாலி வெற்றி பெற்றார். அவரை 2-வது முறையாக வீழ்த்தியுள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங் கனை ஹம்பி சீன வீராங்கனை டான் ஜோங்கியுடன் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

    10 சுற்றுகள் முடிவில் ஹம்பி 4.5 புள்ளியுடன் 5-வது இடத்திலும், வைஷாலி 3.5 புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    • என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 30 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஐதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளனர்.

    இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பெங்களூரு அணி வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி தான் மோதிய 7 ஆட்டத்தில் 6 தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினாமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

    • இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
    • ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன் இலக்கை கொல்கத்தா 15.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதில் விக்கெட் கீப்பர் பில்சால்ட் 89 ரன்கள் நொறுக்கினார். அந்த அணியில் சால்ட், சுனில் நரின், ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் நல்ல நிலைக்கு திரும்பி விட்டார். சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். இந்த சீசனில் உள்ளூரில் ஆடியுள்ள 2 ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளை தோற்கடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார்களா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் என்று நட்சத்திர வீரர்களுடன் ராஜஸ்தான் வலுவாகவே உள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ராஜஸ்தானும், 14-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டில் வருமாறு:-

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் அல்லது ரமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், தனுஷ் கோடியன் அல்லது பட்லர், சஞ்சு சாம்சன் (ேகப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ெஹட்மயர், ரோமன் பவெல், குல்தீப் சென் அல்லது ேகஷவ் மகராஜ், டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இரு அணிகளும் சேர்ந்து இப்போட்டியில் மொத்தம் 549 ரன்கள் அடித்தன.
    • இப்போடியில் ஐதராபாத் 22, பெங்களூரு 16 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்சர்கள் அடித்தனர்.

    ஐபிஎல் 2024 டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 எடுத்தார்.அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்து போராடினார்கள்.

    ஆனாலும் இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் பெங்களூரு 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. இப்போட்டியில் 287 ரன்களை குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அவர்களின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது ஐதராபாத்.

    அதே போல 262 ரன்கள் அடித்த பெங்களூரு ஐபிஎல் தொடரில் சேசிங்கில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் இரு அணிகளும் சேர்ந்து இப்போட்டியில் மொத்தம் 549 ரன்கள் அடித்தன. இதன் வாயிலாக அதிக ரன்கள் குவிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையை இப்போட்டி படைத்துள்ளது.

    அந்தப் பட்டியல்:

    1. 549 ரன்கள் : ஐதராபாத் - பெங்களூரு, பெங்களூரு, 2024*

    2. 523 ரன்கள் : ஐதராபாத் - மும்பை, ஐதராபாத் 2024

    3. 517 ரன்கள் : வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா, சென்சூரியன், 2023

    மேலும் இப்போடியில் ஐதராபாத் 22, பெங்களூரு 16 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்சர்கள் அடித்தனர். இதன் வாயிலாக அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையை இப்போட்டி சமன் செய்தது. இதற்கு முன் இதே சீசனில் ஹைதெராபாத் - மும்பை அணிகள் மோதிய போட்டியிலும் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

    அத்துடன் இந்த போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 43 பவுண்டரிகள் 38 சிக்சர்கள் என மொத்தமாக 81 பவுண்டரிகள் அடித்தன. இதன் வாயிலாக அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற உலக சாதனையையும் இப்போட்டி சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 சென்சூரியனில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியிலும் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.

    ×