search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், மாலை 5 மணிக்கு 59.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 53.56 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.54 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 63.25 சதவீதமும், மகாராஷ்டிராவில் 54.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
    • அவர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றார் மம்தா பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பா.ஜ.க.வின் ரகசிய பங்காளிகள்.

    மாநில போலீசாரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்?

    மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா?

    மத்திய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

    இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெறமுடியாது.

    ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது.

    நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் (பா.ஜ.க) உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.

    • வாக்கு இயந்திரம் வாகனத்துடன் படகில் எடுத்துச் சென்றபோது திடீரென வெள்ளம் அதிகரித்தது.
    • படகு கவிழ்ந்த நிலையில் வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்தியா முழுவதும் இன்று 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் லகிம்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

    சதியா என்ற இடத்தில் உள்ள அமர்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்கு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் மாற்றும் மெஷின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் ஆற்றைக்கடந்து வரவேண்டும். அதிகாரிகள் வாக்கு இயந்திரத்திடன் சொகுசு வாகனத்தில் ஆற்றங்கரையோரத்திற்கு வந்தனர். அந்த வாகனத்தை படகு ஒன்று ஏற்றிச் சென்றது. ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரிக்க படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த வாகனமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    உடனடியாக அதிகாரிகள் மற்றும் வாக்கு இயந்திரம் பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் வாக்கு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
    • வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின.

    இம்பால்:

    நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

    21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரி உடனே வாக்குப்பதிவை நிறுத்தினார். கிழக்கு இம்பாலில் 2 வாக்குச்சாவடியும், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடியும் என மொத்தம் 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின. பிற்பகல் 3 மணி அவரை அங்கு 63 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணிப்பூரில் காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும், மிரட்டல் சம்பவமும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    60 சட்டமன்ற இடங்களில் 32 இடங்களை கொண்ட இன்னர் மணிப்பூர் என அழைக்கப்படும் இடத்தில் 71.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அவுட்டர் மணிப்பூர் பகுதியான 28 சட்டமன்ற இடங்களில் 15-ல் 61.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    நாகா மற்றும் குகி மக்கள் வசித்து வரும் சண்டேல் பகுதியில் 85.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 45.62 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 47.44 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 53.40 சதவீதமும், மகாராஷ்டிராவில் 44.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • டிடி நியூஸ் தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது.
    • அரசின் செய்தி சேனல் நிறம் மாற்றியதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

    இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.

    • நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது- ராகுல் காந்தி.
    • அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது- பினராயி விஜயன்

    மத்திய அமைப்புகள் இன்னும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை அல்லது கைது செய்யவில்லை என ராகுல் காந்தி கேட்டிருந்த நிலையில், இடதுசாரி தலைவர்கள் ஜெயிலை பார்த்து பயப்படவில்லை என பதில் அளித்துள்ளார்.

    "நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது. அமலாக்கத்துறை தன்னிடம் 55 மணி நேரம் விசாரணை நடத்தியது, தன்னுடைய மக்களவை எம்.பி. பதவி, வீடுகள் பறிக்கப்பட்டது. தற்போது இரண்டு முதல் மந்திரிகள் ஜெயிலில் உள்ளனர். ஆனால் கேரள மாநில முதல்வருக்கு இது போன்று நடக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

    "உங்களுடைய பாட்டி (இந்திராகாந்தி) எங்களின் பெரும்பாலானோரை ஒன்றரை வருடத்திற்கு மேல் சிறையில் அடைத்திருந்தார். அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. ஜெயில்கள் பற்றி எங்களுக்கு பயம் இல்லை. ஆகவே விசாரணை, ஜெயில் போன்ற விசங்கள் மூலமாக எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை" என பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

    • கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பாலில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் அமளியில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய இரண்டு மக்களவை தேர்தலில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது வந்தது.

    இந்த நிலையில் கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் வைத்திருந்த பேப்பர்கள் தூக்கி வீசப்பட்டன். நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரி, உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்தினார்.

    இதேபோன்று கிழக்கு இம்பாலில் இரண்டு வாக்குச்சாவடிகள், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத சமூக விரோதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    • மலிகாய்யா கட்டேதார் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
    • சாரதா மோகன் ஷெட்டி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

    கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    கட்டேதார் கலபுரகி மாவட்டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா மாநில முன்னாள் மந்திரியும் ஆவார்.

    கலபுரகி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் சொந்த மாவட்டம் ஆகும். கார்கே 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். கார்கேயின் மருமகன் ராதாகிருஷ்ணா டோட்டாமணி கலபுரகி (குல்பர்கா) தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த மாதம் தொடக்கத்தில் கட்டேதார் சகோதரர் நிதின் வெங்கையா கட்டேதார் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் மலிகய்யா கட்டேதார் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அஃப்ஜல்புர் தொகுதியில் எம்.ஒய். பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலிகய்யா கட்டேதார் 3-வது இடம் பிடித்தார். அவரது சகோதரர் நிதின் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார்.

    மலிகாய்யா முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பின்னர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது சகோதரர் பா.ஜனதா கட்சியில் இணைந்த விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரை விமர்சித்திருந்தார்.

    கார்கேயின் மகனும், கர்நாடகா மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே, கட்டேதார் காங்கிரஸ் கட்சியில் இணைய முக்கிய காரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.

    சாரதா மோகன் ஷெட்டி உத்தாரா கன்னடா மாவட்டத்தின் கும்தா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 2013 மற்றும் 2018-ல் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இருவரையும் வரவேற்றுள்ளனர்.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 39.51 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 37.33 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 37 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 44.43 சதவீதமும், மகாராஷ்டிராவில் 32.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.

    இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    உத்தரகாண்டில் 24.83 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 30.5 சதவீதமும், மகாராஷ்டிராவில் 19.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    ×