search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் கிடைக்கும்.
    குழந்தைகளை சூரிய உதய காலத்தில் நீராடச் செய்து, அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக் குறி (திருநீறு அல்லது திருமண்) இடச் செய்து, மூன்று முறை திரியம்பகம் -  மாம்ருதாத் மந்திரத்தைச்  சொல்லச் சொல்லி, பிறகு துளசி தீர்த்தத்தைப் பருகக் கொடுக்க வேண்டும்.

    அடுத்ததாக... ஸ்ரீஞானசரஸ்வதி மற்றும் ஸ்ரீயாக்ஞவல்கியரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, பூஜையறையில் கிழக்குமுகமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் 'ஸ்ரீவித்யா கணபதயே நம’ என்று மூன்று  முறைச் சொல்லி அருகம்புல் சமர்ப்பித்து பிள்ளையாரை வழிபட வேண்டும்.

    பின்னர் கலைவாணி குறித்த துதிப்பாடல்கள் சொல்லி வழிபடுவதுடன், 'ஸ்ரீயாக்ஞவல்கியர் வித்யா துதி’யையும், மூன்று  முறைச் சொல்லி வணங்கவேண்டும். பிறகு, தூப-தீப காட்டி, தேங்காய் - பழம் தாம்பூலம் மற்றும் பால் சாதம் சமர்ப்பித்து, மீண்டும் கற்பூர ஆரத்தி காட்டவேன்டும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

    ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி

    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
    ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.

    ஸ்துதி

    ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
    ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:
    விஸர்க்க பிந்து மாத்ரேஷ§ யததிஷ்டான மேவஹா
    ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:
    வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
    யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே
    கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
    ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:
    ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
    ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:
    க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
    ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்
    யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
    ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
    பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
    இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே
    (ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)

    பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும்,
    கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேரட்டும்.
    ஜூவாலா மாலினி நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.
    இந்த நித்யா தேவி, நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில், நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜனை அகலமும், முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையை உருவாக்கியவள். அக்னியையே மாலையாக அணிந்தவள். இந்த அம்பிகையின் வித்யை, அறுபது அட்சரங்களைக் கொண்டது.

    வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜூவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கி அருள்பாலிக்கிறாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும், முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சூழ்ந்துள்ளனர். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை சதுர்த்தசி, தேய்பிறை துவிதியை.

    மந்திரம்:-

    ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே

    மஹாஜ்வாலாயை தீமஹி

    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
    ஓம் ஸ்ரீம் ஹரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை
    கமல தாரிண்யை தனாகர்ஷிண்யை ஸ்வாஹா!

    இதை தினமும் தொழில் தொடங்கும் முன்பு 108 முறை சொன்னால் செல்வம் பெருகும்.
    நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
    அட்சய திருதியை அன்று குபேரர் போற்றியை உச்சரிப்பது மிகுந்த பலனைத்தரும்.

    1. அளகாபுரி அரசே போற்றி!
    2. ஆனந்தம் தரும் அருளே போற்றி!
    3. இன்பவளம் அளிப்பாய் போற்றி!
    4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி!
    5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி!
    6. ஊக்கம் அளிப்பவனே போற்றி!
    7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி!
    8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி!
    9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி!
    10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி!
    11. ஓங்கார பக்தனே போற்றி!
    12. கருத்தில் நிறைந்தவனே போற்றி!
    13. கனகராஜனே போற்றி!
    14. கனகரத்தினமே போற்றி!
    15. காசு மாலை அணிந்தவனே போற்றி!
    16. கிந்நரர்கள் தலைவனே போற்றி!
    17. கீர்த்தி அளிப்பவனேபோற்றி!
    18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி!
    19. குருவாரப் பிரியனே போற்றி!
    20. குணம் தரும் குபேரா போற்றி!
    21. குறை தீர்க்கும் குபேரா போற்றி!
    22. கும்பத்தில் உறைபவனே போற்றி!
    23. குண்டலம் அணிந்தவனே போற்றி!
    24. குபேர லோக நாயகனே போற்றி!
    25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி!
    26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி!
    27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி!
    28. கோடி நிதி அளிப்பவனே போற்றி!
    29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி!
    30. சங்கரர் தோழனே போற்றி!
    31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி!
    32. சமயத்தில் அருள்பவனே போற்றி!
    33. சத்திய சொரூபனே போற்றி!
    34. சாந்த சொரூபனே போற்றி!
    35. சித்ரலேகா பிரியனே போற்றி!
    36. சித்ரலேகா மணாளனே போற்றி!
    37. சிந்தையில் உறைபவனே போற்றி!
    38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி!
    39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி!
    40. சிவபூஜை பிரியனே போற்றி!
    41. சிவ பக்த நாயகனே போற்றி!
    42. சிவ மகா பக்தனே போற்றி!
    43. சுந்தரர் பிரியனே போற்றி!
    44. சுந்தர நாயகனே போற்றி!
    45. சூர்பனகா சகோதரனே போற்றி!
    46. செந்தாமரைப் பிரியனே போற்றி!
    47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி!
    48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி!
    49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி!
    50. சொக்கநாதர் பிரியனே போற்றி!
    51. சௌந்தர்ய ராஜனே போற்றி!
    52. ஞான குபேரனே போற்றி!
    53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி!
    54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி!
    55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி!
    56. திருவிழி அழகனே போற்றி!
    57. திருவுரு அழகனே போற்றி!
    58. திருவிளக்கில் உறைவாய் போற்றி!
    59. திருநீறு அணிபவனே போற்றி!
    60. தீயவை அகற்றுவாய் போற்றி!
    61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி!
    62. தூயமனம் படைத்தவனே போற்றி!
    63. தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி!
    64. தேவராஜனே போற்றி!
    65. பதுமநிதி பெற்றவனே போற்றி!
    66. பரவச நாயகனே போற்றி!
    67. பச்சை நிறப் பிரியனே போற்றி!
    68. பவுர்ணமி நாயகனே போற்றி!
    69. புண்ணிய ஆத்மனே போற்றி!
    70. புண்ணியம் அளிப்பவனே போற்றி!
    71. புண்ணிய புத்திரனே போற்றி!
    72. பொன்னிற முடையோனே போற்றி!
    73. பொன் நகை அணிபவனே போற்றி!
    74. புன்னகை அரசே போற்றி!
    75. ெபாறுமை கொடுப்பவனே போற்றி!
    76. போகம்பல அளிப்பவனே போற்றி!
    77. மங்கல முடையோனே போற்றி!
    78. மங்களம் அளிப்பவனே போற்றி!
    79. மங்களத்தில் உறைவாய் போற்றி!
    80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி!
    81. முத்து மாலை அணிபவனே போற்றி!
    82. மோகன நாயகனே போற்றி!
    83. வறுமை தீர்ப்பவனே போற்றி!
    84. வரம் பல அருள்பவனே போற்றி!
    85. விஜயம் தரும் விவேகனே போற்றி!
    86. வேதம் போற்றும் வித்தகா போற்றி!
    87. வைர மாலை அணிபவனே போற்றி!
    88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி!
    89. நடராஜர் பிரியனே போற்றி!
    90. நவதான்யம் அளிப்பவனே போற்றி!
    91. நவரத்தினப் பிரியனே போற்றி!
    92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி!
    93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி!
    94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி!
    95. ராவணன் சோதரனே போற்றி!
    96. வடதிசை அதிபதியே போற்றி!
    97. ரிஷி புத்திரனே போற்றி!
    98. ருத்திரப் பிரியனே போற்றி!
    99. இருள் நீக்கும் இன்பனே போற்றி!
    100. வெண்குதிரை வாகனனே போற்றி!
    101. கைலாயப் பிரியனே போற்றி!
    102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி!
    103. மணிமகுடம் தரித்தவனே போற்றி!
    104. மாட்சிப் பொருளோனே போற்றி!
    105. யந்திரத்தில் உறைந்தவனேபோற்றி!
    106. யௌவன நாயகனே போற்றி!
    107. வல்லமை பெற்றவனே போற்றி!
    108. குபேரா போற்றி! போற்றி!
    வீரராகவப்பெருமாளை, திருமங்கை ஆழ்வார், “எவ்வுள் கிடந்தான்”என்றும் திருமழிசை ஆழ்வார், “எவ்வுள் பெருமலை” என்றும் தமது பதிகங்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.
    தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
    வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
    அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
    விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

    பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
    நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
    தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
    வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
    கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
    ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
    வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

    இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
    களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
    துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
    விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

    அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
    பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
    வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
    வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
    சித்திரை மாத சிவராத்திரியான இன்று ஈசனின் அருளை முழுமையாகப் பெற, சிவபெருமானை நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம்.
    மாதம்தோறும் வரும் சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சிவராத்திரி அன்று சிவ பெருமானை மனதார வழிபடும்போது நோய் நொடியற்ற வாழ்க்கையையும், சுபிட்சமான வாழ்க்கையையும் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். சிவராத்திரி அன்று சிவனை நினைத்து மனதார உச்சரிக்க வேண்டிய மந்திரம் உங்களுக்காக இதோ.

    ‘ஓம் சிவசிவ சங்கரா போற்றி!’

    இந்த மந்திரத்தை உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. காலையில் 108 முறை உச்சரிக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பிறகு 8 மணிக்குள் இந்த மந்திரத்தை மீண்டும் ஒரு முறை 108 முறை உச்சரித்து உங்களது சிவராத்திரி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

    அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள சுலபமான மந்திரம் இது. நம்பிக்கையோடு உச்சரித்துப் பாருங்கள். வளமான வாழ்க்கையை பெறுங்கள்.
    பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
    சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்து விட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை எல்லாமே பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவி உள்ளன. அதுபோல ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.

    1. ஓம் சமார்த்த சத்குரு ஸ்ரீ சாயிநாதாய நமஹ
    2.ஓம் குருதேவ தத்தாத்ரேயாய சாயிநாதாய நமஹ
    3. ஓம் விஷ்வப் பிரணாய சாயிநாதாய நமஹ
    4. ஓம் விக்னநிவாராகாய சாயிநாதாய நமஹ
    5. ஓம் ரோக நிவாராகாய சாயிநாதாய நமஹ
    6. ஓம் மஹாபய நிவாராகாய சாயிநாதாய நமஹ
    7. ஓம் சாபவிமோச்சகாய சாயிநாதாய நமஹ
    8. ஓம் அபயப் பிரதாய சாயிநாதாய நமஹ
    9. ஓம் சகல தேவத ஸ்வரூபாய சாயிநாதாய நமஹ
    10. ஓம் சாரங்கதா வாத்சலாய சாயிநாதாய நமஹ
    11. ஓம் ஆயுள் ஆரோக்ய ஐசுவரிய பிரதாய சாயிநாதாய நமஹ

    இப்படி பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. தினமும் பாபா படம் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.
    ‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
    திருமாலை வழிபடும் சமயத்தினர், ‘வைணவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    அந்த மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.

    ஹரே ராமா ஹரே ராமா

    ராம ராம ஹரே ஹரே

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

    கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

    இந்த மந்திரத்தில் உள்ள ‘கிருஷ்ணா, ராமா’ என்ற இரண்டு வார்த்தைகளும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும். மேலும் அவை ‘மிக உன்னதமான, ஆனந்தமான’ என்றும் பொருள்படும். ‘ஹரா’ என்பதற்கு சக்தி என்று பொருள். இந்த ‘ஹரா’ என்பதே நாளடைவில் ‘ஹரே’ என்று மாறியதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், பக்தர்களின் வேண்டுதல்கள், இறைவனை சென்றடைய வழியேற்படுகிறது.
    சிலரது கையில் பணம் தங்கவே தங்காது. சிலருக்கு பணம் வரவே வராது. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடைபெற்று, செல்வ செழிப்போடு வாழ, பணம் புரள, இந்த அற்புதமான மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
    ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்
    ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
    நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
    சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
    பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
    ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.

    இந்த அற்புதமான மந்திரத்தை கணபதி மந்திரம் என்று கூறுவார்கள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலம் நமது வாழ்வில் உள்ள அனைத்து பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கி, கடன்கள் எல்லாம் நீங்கி, செழிப்பாய் இருப்பீர்.
    இந்த ஸ்தோத்திரம் தினமும் சொல்லி சீதாராமரை வழிபாடு செய்து வந்தால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.
    அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுர நாயிகாம்
    ராகவாணாம் அலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம்
    ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்
    ஸுர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்
    புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
    வஸிஷ்டா நுமதாசாரம் ஸதாநந்தமதாநுகாம்
    கௌஸல்யாகர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
    புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்
    சந்த்ரகாந்தாந நாம்போஜம் சந்த்ரபிம்போமாநநாம்
    மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்
    சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ரபுஜஸ்தலீம்
    சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்ருதபாணிகாம்
    ஸரணாகதகோப்தாரம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
    காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம்
    திவ்யஸிம் ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்
    அநுக்ஷணம் கடாக்ஷப்யாம் அந்யோந்யேக்ஷண காங்க்ஷிணௌ
    அந்யோந்யஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ
    இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்
    அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
    தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:
    ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விஸேஷத:
    க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமந்அவாப் நுயாத்
    ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூரணம்

    அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக..
    வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
    ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

    கருத்து:

    எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

    தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
    ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

    கருத்து:

    பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

    ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
    கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

    கருத்து:

    மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

    தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
    தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

    கருத்து:

    சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

    வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
    தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

    கருத்து:

    வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

    ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
    சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

    கருத்து:

    பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
    கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன.
    1. ஓம் அனுமனே போற்றி
    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
    3. ஓம் அறக்காவலனே போற்றி
    4. ஓம் அவதார புருஷனே போற்றி
    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி
    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி
    17. ஓம் ஒப்பிலானே போற்றி
    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    19. ஓம் கதாயுதனே போற்றி
    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
    22. ஓம் கர்மயோகியே போற்றி
    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    29. ஓம் கூப்பிய கரனே போற்றி
    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
    39. ஓம் சூராதி சூரனே போற்றி
    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    44. ஓம் சோக நாசகனே போற்றி
    45. ஓம் தவயோகியே போற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி
    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    49. ஓம் தீதழிப்பவனே போற்றி
    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி
    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி
    57. ஓம் பக்தி வடிவனே போற்றி
    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    லட்சுமி தேவி நமது இல்லத்தில் குடியேற!!

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி
    67. ஓம் புலனை வென்றவனே போற்றி
    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    69. ஓம் புண்ணியனே போற்றி
    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி
    72. ஓம் மனோவேகனே போற்றி
    73. ஓம் மாவீரனே போற்றி
    74. ஓம் மாருதியே போற்றி
    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    79. ஓம் ராமதாசனே போற்றி
    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி
    82. ஓம் ராம சோதரனே போற்றி
    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    93. ஓம் லங்கா தகனனே போற்றி
    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி
    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி
    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    ×