search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
    காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

    நாளை காலை 9 மணிக்கு அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெறுகிறது. உலக அமைதிக்காகவும், மக்கள் ஒற்றுமையாக வாழவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், நோய் நொடிகள் அகன்று போகவும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற கொடிய நோய்கள் உலகத்தை விட்டு அகன்று போவதற்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நேர்ச்சை வழங்கப்படுகிறது.
    திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறை கொடியுடன் யானை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி ஆண்டு பெருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நடந்தது.

    நேற்று மதியம் பிறை கொடி தாங்கிய யானை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் சிங்காரி மேளத்துடன் பள்ளிவாசல் முன்பு இருந்து தொடங்கி திட்டுவிளை சுற்றுவட்டார வீதிகள் வழியாக வந்தது. இறுதியில் பள்ளிவாசல் முன்பு ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேருரை நடந்தது. இதில் திட்டுவிளை முஸ்லிம் ஜமாத் முக்தவல்லி மைதீன் பிள்ளை தலைமை தாங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை திட்டுவிளை ஜமாத் முக்தவல்லி மைதீன் பிள்ளை மற்றும் தலைவர் முகமது அசன், பீர்முகமது, பக்கீர் பாவா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள், ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகம் இணைந்து செய்திருந்தனர்.
    வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது.
    திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவில் வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல், நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    இன்று (திங்கட்கிழமை) பிறைக் கொடி ஏந்திய யானை ஊர்வலமும், தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரையும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா விழா கமிட்டியினர் மற்றும் திட்டுவிளை யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.
    நோயாளிகளை நலம் விசாரிப்பது குறித்து இஸ்லாம் அதிகம் ஆர்வமூட்டுகிறது, அதிகம் தூண்டுகிறது. நோயாளிகளை கருணையுடன் அணுகவேண்டும். அவர்களின் நோய் நீங்கிட இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.

    நோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக நடத்தக் கூடாது. மனித நேயத்துடன் பார்க்க வேண்டும். நோயாளிகளை அணுகுவது மனம் சார்ந்து இருக்க வேண்டும். பணம், பதவி, இனம், மொழி, நிறம், சாதி, மதம் சார்ந்து இருந்துவிடக் கூடாது.

    இது குறித்த நபி மொழிகள் வருமாறு:

    ‘நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களை செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவை: 1) நோயாளிகளை நலம் விசாரிப்பது, 2) இறந்தவரின் இறுதியாத்திரையில் பின் தொடர்ந்து செல்வது, 3) தும்மியவருக்கு ‘உமக்கு இறைவன் கருணைபுரிவானாக’ என்று பிரார்த்திப்பது, 4) ஸலாம் எனும் வாழ்த்துக்கு பதில் கூறுவது, 5) அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது, 6) விருந்தின் அழைப்பை ஏற்றுக் கொள்வது, 7) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது’. (அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் யாரேனும் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றாலோ (அல்லது) யாரேனும் ஒரு நோயாளி, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாலோ, நபியவர்கள் அவருக்காக பிரார்த்திப்பார்கள். நபியின் பிரார்த்தனையின் பயனால் நோயாளியும் நோயிலிருந்து நிவாரணம் அடைந்து விடுவார். நோயாளியின் விஷயத்தில் நபிகளாரின் பார்வையும், அவர்களின் நடத்தையும் இப்படித்தான் அமைந்திருந்தது.

    ஆயிஷா (ரலி) கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், ‘மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே, நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை’ என இவ்வாறு பிரார்த்திப்பார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘நீங்கள் நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ அவ்வாறு ஆகட்டும்! என கூறுகின்றனர் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: உம்மு சல்மா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘ஒரு முஸ்லிம் தம் முஸ்லிம் சகோதரனைக் காலையில் நலம் விசாரிக்கச் செல்லும்போது மாலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: திர்மிதி)

    ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அல்லதை பேசக்கூடாது. அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும். அவர் நோயாளியை பயமுறுத்தவோ, அவநம்பிக்கையை ஏற்படுத்தவோ முயலக்கூடாது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திர கந்தூரி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடி ஏற்றுவது 28-ந்தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெறுகிறது. இதற்கு திட்டுவிளை யு.எல்.எஸ்.எம்.டி. முஸ்லிம் ஜமாத் முத்தவல்லி மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். திட்டுவிளை ஜூம்மா பள்ளிவாசல் துணை பேஸ் இமாம் ஷேக்ஹஸன் அலியார் ஸமதானி ஆலிம் வரவேற்று பேசுகிறார். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் முகமது ஹனீபா, அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திட்டுவிளை ஜூம்மா பள்ளிவாசல் துணை பேஷ் இமாம் முகமது இப்ராகிம் பைஜி ஆலிம் தொடக்க உரையாற்றுகிறார். இதில் பேராசிரியர் பஷீர் அகமது உஸ்மான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது 3-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா விழா கமிட்டியினர் மற்றும் யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா நேற்று இரவு நடைபெற்றது. இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டுதோறும் ரஜப் பிறை மாதத்தில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான சந்தனகூடு திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சந்தனக்கூடுவிழா நேற்று இரவு நடைபெற்றது.

    விழாவையொட்டி பெரியரத வீதியில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் சுமார் 25 அடி உயரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றது.இந்த நிலையில் செம்பில் வாசனை கமழும் சந்தனம் நிரப்பப்பட்டு தயாரானது.

    இதனை அடுத்து சந்தனக்கூடு பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது.இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.சந்தனகூடு ஊர்வலத்தை தொடர்ந்து மலையிலுள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து தர்காவில் சந்தனம் பூசப்பட்டது.அங்கு முஸ்லிம்கள் பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர். இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
    களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலையில் கொடி ஊர்வலம் இடம்பெற்றது.

    இஸ்லாமிய இளைஞர்களின் சிலம்பாட்டத்துடன், யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டது.

    2-ம் நாள் மாலையில் தீப அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டுவிழாவையொட்டி ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
    தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலையில் ஒவ்வொரு ஆண்டும் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமது முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு 9 மணி முதல் காலை வரை விடிய, விடிய நடந்தது.

    இந்த நிகழ்ச்சியின்போது ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர்.

    இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முகமது அசோசியேஷன் தலைவர் அப்துல் ஜாபர், துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் ரபிக் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    உடன்குடி களம்புதுத்தெரு செய்குனாசெய்கு ஐதுரூஸ் புலவர் ஓலியுல்லா அப்பாவின் 194-வது கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    உடன்குடி களம்புதுத்தெரு செய்குனாசெய்கு ஐதுரூஸ் புலவர் ஓலியுல்லா அப்பாவின் 194-வது கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது.

    இதையொட்டி நடைபெற்ற விழாவிற்கு களம்புதுத்தெரு முஹியித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் ரயிசுத்தீன் தலைமை வகித்தார். முகம்மது அலி அப்துல் அஜீஸ், ரியாஸ், முஸ்தபா, ஷாஜகான், புகாரி, நிசார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரஸத்துல் காதிரிய்யா அல்முபீன் மதரஸா பள்ளி மாணவ, மாணவியர்களின் மார்க்க சொற்பொழிவுகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பரிசுகளை சக்கரியா, செய்யது சுலைமான், முகம்மது, சர்புதீன், பீர்முகம்மது வழங்கினர்.இரவு 9 மணிக்கு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவிற்கு மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஜஹ்பர் சாதிக் தலைமை வகித்தார். அப்துல் அஜீஸ் கிராஆத் ஓதினார்.இமாம்கள் ஹமீது சுல்தான், ரயிசுத்தீன், அம்ஜத்கான் ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.

    இரவு 11 மணிக்கு மவுலூது ஷரீப் நடைபெற்றது. பிப்.14 ஆம் தேதி காலையில் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பரக்கத்துல்லா, மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மஹபூப் நன்றி கூறினார்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம், நேற்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.

    இதில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மவுலானாவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.
    நெல்லை மேலப்பாளையம் செய்யது அப்துர் ரஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 160-வது வருட கந்தூரி விழா வருகிற 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது.
    நெல்லை மேலப்பாளையம் செய்யது அப்துர் ரஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 160-வது வருட கந்தூரி விழா வருகிற 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது. 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யானையின் மீது வைத்து கொடி ஊர்வலம் நடக்கிறது.

    இந்த ஊர்வலம் ஞானியாரப்பா பெரிய தெரு, ஞானியாரப்பா சின்னத்தெரு, அக்பர் தெரு, தெற்கு ரகுமானியபுரம், வடக்கு ரகுமானியபுரம், சாயன் தரகன் தெரு, ஆசூரா மேலத்தெரு, கீழத்தெரு, தெற்கு தைக்கா தெரு வழியாக வந்து தர்காவில் கொடி ஏற்றப்படும். பின்னர் இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்தீபு சரீபு ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா அக்தார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம், வஞ்சனை என்று கெட்ட செயல்கள் குடிகொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கும்?
    ஒவ்வொரு மனிதர்களும் வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல, நற்பண்புகளையும் பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தின் சிறப்பே நற்குணம் தான்.

    ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய குணநலன்களை இஸ்லாம் விரிவாக விவரிக்கிறது.

    இத்தகைய குணங்கள் இருந்தாலே அவன் முஸ்லிம் என்று, நற்பண்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது இஸ்லாம்.

    தன்னுடைய வருகையின் நோக்கத்தைக் குறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறார்: ‘நற்குணங்களைப் பரிபூரணம் செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ (மாலிக்).

    ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம், வஞ்சனை என்று கெட்ட செயல்கள் குடிகொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கும்?

    அல்லது, ஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் வெறுப்புடனும், பொறாமையுடனும் நடந்து கொண்டால் அந்த குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் எவ்வாறு கிடைக்கும்?

    ஆக, இங்கே நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் ஆண்டவனின் அருளுக்கும் நற்குணங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதே.

    இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளின் நோக்கமே நற்குணங்கள் தான் என்பதை அருள்மறை குர் ஆனைப் புரட்டினால் புரிந்துகொள்ளலாம்.

    நோக்கங்களைச் சரியாக புரிந்து கொள்ளாவிடில் வணக்கங்கள் அனைத்தும் வெறும் உடற்பயிற்சிகளாகவே மாறிவிடும்.

    ‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல!’.

    மூன்று தடவை இவ்வாறு இறைவனின் தூதர் கூறவும் நபித்தோழர்கள் கேட்டனர்: ‘அல்லாஹ்வின் தூதரே! யாரைக் குறித்து இவ்வாறு கூறுகின்றீர்கள்?’.

    அதற்கு அண்ணலார் கூறினார்: ‘எவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்’. (முஸ்லிம், அஹ்மத்)

    மேலும், நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘வெட்கமும் இறை நம்பிக்கையும் இரண்டு கொம்புகள். ஒன்று போனால் மற்றொன்றும் போய்விடும்’. (தபரானி, ஹாகிம்)

    முழுமையாக இறை நம்பிக்கை கொண்ட ஒருவர், ஒருநாளும் வெட்கம் கெட்ட செயலை செய்ய மாட்டார் என்பதையே அண்ணல் நபி இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.

    நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை, மறுமையிலும் நன்மையே. இதன் சிறப்புக்களைக் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    ‘மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே’. (அபூதாவூத், திர்மதி)

    ‘நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’. (அபூதாவூத், அஹ்மத்)

    ‘நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே!’. (திர்மதி, அஹ்மத்)

    ‘சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்’ (திர்மதி, இப்னு மாஜா)

    ‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (அபூதாவூத், அஹ்மத்).

    இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு நன்மைகள் தரும் நற்குணத்தில் சிறந்துவிளங்கி இறைவனின் அருளை நாம் அனைவரும் பெறுவோம், ஆமீன்.

    குளச்சல் நூஹ் மஹ்ழரி.
    ×