search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம்.
    • சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம்.

    பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.

    வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது.

    எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

    கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி.

    எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம்.

    இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும்.

    ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை.
    • புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்...

    1. படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிரதோஷம் படிப்படியாக குறையும். இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம், படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.

    2. அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

    3. வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

    4. ஆசான், வேதம் படித்தவர, நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது குருவின் ஆசிகள் கிடைக்கும்.

    5. சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.

    6. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

    7. திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள் ), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.

    8. ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.

    9. பாம்புகளை கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன் - இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு-கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும். ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமம் தான், தெரிந்தே சேர்வது நமக்கு தரித்தரம் )

    10. பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

    • வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான்.
    • வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது.

    செவ்வாய்க்கிழமைகளில் முருகக்கடவுளை வணங்குவது செவ்வாய் தோஷத்தையெல்லாம் போக்கவல்லது என்கிறார்கள். முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்து கொண்டால், இதுவரை உள்ள பாவங்களெல்லாம் பறந்தோடும் என்பதும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகும் என்பதும் ஐதீகம்.

    அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி, செந்நிற மலர்கள் சூட்டி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தால் பட்ட துயரெல்லாம் பஞ்சாய் பறந்தோடும்.

    வாழ்வில் இதுவரை இல்லாத, கிடைக்காத, தாமதப்பட்டு வந்த முன்னேற்றமெல்லாம் வரிசையாக கிடைக்கும். வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான். எனவே, முருகனை மனதார தொடர்ந்து பிரார்த்தனை செய்தால் சொந்த வீட்டில் உங்களை அமரச் செய்து அழகு பார்ப்பார்.

    • குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை.

    குலதெய்வம் குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு தீராத துன்பங்களோ துயரங்களோ ஒருபோதும் வராது.

    இது தவிர ஒரு சின்ன பரிகாரம். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வ வழிபாடு செய்து முடித்துவிட்டு, குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப தலைவனின் கையால் ஒரு கைப்பிடி மண், குடும்பத் தலைவியின் கையால் ஒரு கைப்பிடி மண், இரண்டையும் எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.

    இதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சுத்தபத்தமாக பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதில் சிறிதளவு மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளுங்கள் போதும். ஒரு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி அந்த சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு போட்டு, கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

    யார் கைக்கும் படாமல் இந்த மண் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். கொஞ்சம் உயரமாக வீட்டிற்கு உள் பக்கத்தில் ஆணி அடித்து அதில் இதை மாட்டி வைத்தால் கூட போதும். தினம் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து விடுங்கள். அவ்வளவுதான். வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.

    இப்படி குலதெய்வ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் குலதெய்வமே குடியிருக்கும். உங்களுடைய முன்னோர்கள் காலடித்தடம் பட்ட மண் அது. இனி உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியர்கள் செல்லக்கூடிய இடம்தான் அது. அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.

    விதியின் கட்டாயத்தில் நம் குடும்பத்திற்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து துயரத்திலிருந்து காப்பாற்றுவது நம்முடைய குலதெய்வம் தான். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி 'நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்'. என்று குலதெய்வத்தை தினம் தினம் நினைவுகூர்ந்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காக்கும். குலதெய்வத்தின் பெயரை ஒரு நாளும் உச்சரிக்காமல் இருக்காதீங்க.

    பெண்கள் மட்டும் தான் இப்படி குலதெய்வத்தை நினைவு கூற வேண்டும் என்று அவசியம் கிடையாது. அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் தினமும் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு, அவரவர் வேலையை தொடங்கினால், அந்த நாள் நல்லபடியாக செல்லும்.

    • அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார்.
    • முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.

    அம்மனின் 64 சக்தி பீடங்களில் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலும் ஒன்று. விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என 4 பேரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாட கோவில்களில் இதுவும் ஒன்று.

    தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு 'திரி சதை' செய்து வேண்டி கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.

    சிங்கார வேலவனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு "சத்ரு சம்ஹார திரி சதை" அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது ஐதீகம்.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    இந்த கோவில் தமிழகத்தில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    • ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு.

    மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.

    நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.

    ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.

    அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.

    மந்திரம்

    "ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி

    வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம

    தநூகரன புவாய நமோ நம".

    அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.

    • இறைவழிபாடு செய்வது குடும்பத்திற்கு ரொம்பவும் நல்லது.
    • துன்பத்தை கடுகளவு ஆக்கிவிடும் வழிபாடு தான் இந்த ஞாயிறு வழிபாடு.

    நம்மில் நிறைய பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவழிபாடு செய்வதை தவிர்த்து விடுவோம். காரணம் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அசைவ சாப்பாடு இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். எது எப்படியாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள். அந்த நாளில் இறைவழிபாடு செய்வது குடும்பத்திற்கு ரொம்பவும் நல்லது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் பெரிய அளவில் கஷ்டங்கள் வராமல் தவிர்க்கலாம். தோல்வியை கண்டு நீங்கள் பயப்பட மாட்டீங்க. வெற்றி மேல் வெற்றியை அடைவதற்கு உண்டான வழிகள் கண்முன்னே தெரியும். மலை அளவு துன்பத்தைக் கூட, கடுகளவு ஆக்கிவிடும் வழிபாடு தான் இந்த ஞாயிறு வழிபாடு. சிறப்பு மிக்க ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

    ஞாயிறு மாலை ராகு கால நேரம் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. இந்த ராகு கால சமயத்தில் இந்த விளக்கை (கோதுமை )ஏற்ற வேண்டும்.

    கோதுமையை தரையில் சிறிதளவு பரப்பி விட்டு அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு துணி, தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். உங்களுக்கு வாழ்வில் இருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக இந்த தீபத்தை ஏற்றி அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து குறைந்தது 15 நிமிடமாவது சூரிய பகவானையும் எம்பெருமானையும் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய இந்த வழிபாடு நாய் படாத பாடுபடும் உங்கள் வாழ்க்கையை நாசுக்காக மாற்றி விடும் என்றால் பாருங்கள். விடாமல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். திங்கள்கிழமை பசுவுக்கு அகத்தி கீரையை, டவுடு, புண்ணாக்கு கொடுங்கள். இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு உங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

    கடன் பிரச்சனை உள்ளது, வீட்டில் சுபகாரிய தடை உள்ளது, ஜாதக கட்டத்தில் நேரம் சரியில்லை, பெரிய பெரிய பரிகாரங்கள் செய்ய சொன்னார்கள், ஆனால் அதற்கான நேரமும் இல்லை, பணமும் இல்லை என்பவர்கள் இந்த வழிபாடு செய்யாமல். நவகிரகங்களால் இருக்கக்கூடிய கோளாறுகளை சரி செய்யவும் இந்த ஞாயிறு ராகுகால வழிபாடு வழிவகுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

    சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்தமான கோதுமையில் விளக்கு ஏற்றலாம். ஏனென்றால் சூரிய பகவானுடைய தானியம் கோதுமை. பக்தர்கள் பதவி உயர்வு கிடைக்க, தலை மற்றும் கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களை போக்குபவர் சூரிய பகவான். கோதுமையினால் விளக்கு ஏற்றி வேண்டிய வரங்களை பெறலாம்.

    • நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம்.
    • சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி.

    நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

    இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர்.

    பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

    சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

    வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

    -பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    • நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
    • தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது.

    நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலங்களிலிருந்து, இன்றைய காலம் வரை தீபமேற்றி வழிபாடு செய்யும் பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடைபிடித்து வருகின்றார்கள். தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. எல்லா தீப வழிபாட்டிற்கும் முதன்மையாக இருப்பது அந்த அக்னிதேவன் தான். நம்மிடம் இருக்கும் கஷ்டங்களை விளக்கக் கூடிய சக்தி இந்த விளக்கிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீபவழிபாட்டில் முதன்மையாக சொல்லப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த அகண்ட தீப வழிபாடு. இந்த தீபத்தினை நந்தா தீபம், ஜோதி தீபம், அணையா தீபம் என்று கூட சொல்லுவார்கள்.

    நந்தா விளக்கு தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.

    சாதாரணமாக ஒரு வீட்டில் அணையா தீபம் எரிந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. நல்ல தேவதைகள் வீடு தேடி வர, இந்த அணையா தீபம் துணை நிற்கும். சரி இந்த அகண்ட தீபத்தினை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்றுவது என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோமா?

    அகண்ட தீபம், ஜோதி தீபம், நந்தா தீபம் என்று கேட்டாலே கொஞ்சம் பெரிய அளவில் விளக்குகள் உங்களுக்கு கடைகளில் கிடைக்கும். வீட்டில் அணையா தீபம் ஏற்றிவைக்க வேண்டும் என்றால், அதில் திரி நடுவில் எரிய வேண்டும். அதாவது ஜோதி வடிவத்தில்! சாதாரண விளக்கில் திரியை பக்கவாட்டில் தான் போடுவோம். ஆனால் அணையா தீபத்திற்கு திரி நடுவே எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

    இந்த தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். அணையா தீபம் என்பதால் எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவைப்படும். அதேசமயம் பஞ்சு திரி, நூல் திரி இப்படிப்பட்ட திரிகளை இந்த தீபத்திற்கு பயன்படுத்த கூடாது. கடைகளில் விற்கும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் காட்டன் துணியை வாங்கி, வெட்டி திரி போல் திரித்து, அதை இந்த அகண்ட தீபத்தில் போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

    24 மணி நேரமும் அணையாமல் தீபம் எரிய வேண்டும் என்பதால் இந்த விளக்கை கொஞ்சம் பெரிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் நீங்கள் ஏற்று போகும் அந்த நாள் நல்ல முகூர்த்த நாளாக (வளர்பிறை) இருக்க வேண்டும். முதலில் இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும்.

    ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லிவிடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு எவ்வளவு தான் கெட்ட நேரம் இருந்தாலும், அதையும் தாண்டி உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற கூடிய வேலைகளை இந்த அகண்ட தீபம் பார்த்துக் கொள்ளும்.

    குழந்தை வரம் வேண்டுமா? பிறவி முக்தி அடைய வேண்டுமா? திருமணம் கைகூட வேண்டுமா? மனை வாங்க வேண்டுமா? பெருக வேண்டுமா? எண்ணிய காரியம் கைக்கூட வேண்டுமா? இந்த தீபத்தை தொடர்ந்த ஏற்று. உன் கோரிக்கை நிறைவேறும் வரை கடவுளின் காலை விடாதே. இதுவே இந்த தீபத்தின் சிறப்பு

    இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அதை அணையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிறிய தீயில் இந்த தீபத்தை ஒளிர வைத்தால் போதும். எண்ணெய் குறைவாக எடுத்துக் கொள்ளும். எதிர்பாராத சூழ்நிலையில் இந்த தீபம் அணைந்து விட்டால் அது தவறு கிடையாது. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அந்த தீபத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை நீக்கிவிட்டு, மீண்டும் தீபத்தை பொருத்திவிட வேண்டும்.

    திரையில் இருந்து எடுத்த அந்த கருப்பு நிற சாம்பலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு தினம்தோறும் நெற்றியில் இட்டுக்கொண்டால் துஷ்ட சக்தி அண்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றளவும் நிறைய கோவில்கள், பெரிய பெரிய சமாதிகள், பல வீடுகளில் இந்த அகண்ட தீபம் எரிந்து கொண்டுதான் வருகின்றது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

    அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும்.

    எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள்.

    ஜல தீபத்தின் முக்கியத்துவம் முன்னோர்களுக்கு தெரிந்ததால்தான் அந்த காலத்தில் நதிகளில் மற்றும் குளங்களில் முக்கியமான நாட்கள் அன்று ஜலதீபத்தை ஏற்ற எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும் சில கோவில்கள் இந்த பழக்கம் மறக்காமல் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த தீபத்தை ஏற்றி கஷ்டத்தில் இருந்தவர்கள் பலபேர் சுபிட்சம் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்

    • குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சனை தீரும்.
    • எந்த கிழமையில் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    தீராதக் கடன் தொலையில் தவிப்பவர்களுக்கு தினமும் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் அதாவது நீங்கள் ஒருவருக்கு பத்தாயிரம்ரூபாய் தர வேண்டும் என்றால் அதில் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றால் அந்தத் தொகையை நீங்கள் இந்த குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைக்கப்படும். இது அனுபவபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    இந்தக் குளிகை நேரத்தில் கடன் அடைக்கலாம், சுப காரியங்களை செய்யலாம். சவ அடக்கம் செய்யக்கூடாது. கடன் வாங்க கூடாது. காரணம் இந்த நேரத்தில் நீங்கள் இது போன்ற காரியங்களை செய்தால் அது மறுபடி, மறுபடி நடக்கும். எனவே மன உளைச்சல் தரும் கடன் தொல்லை இருப்பவர்கள் இந்த தினமும் வரும் குளிகை நேரத்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

    குளிகை நேரம்

    ஞாயிற்றுக்கிழமை : மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    திங்கட்கிழமை : மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

    செவ்வாய்க்கிழமை : மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. முடிந்தவரையில் செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்கவேண்டும். ஆனால் செவ்வாய்க் கிழமையில் மட்டும் எந்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.

    புதன்கிழமை : காலை 10.30 மணிமுதல் 12 மணிவரை

    வியாழக்கிழமை : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    வெள்ளிக்கிழமை : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சனிக்கிழமை : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம்.
    • நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம்.

    நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம். நம்முடைய முன்னோர்களாகிய இவர்கள் தெய்வமாக மாறி பின் ஒவ்வொரு சந்ததியினரையும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள். அவர்களை வழிநடத்தி சென்று நன்மை செய்கிறார்கள். எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். அந்த குலதெய்வம் அறியாதவர்கள் என்ன வழிபாட்டு முறையை செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவேண்டும்.

    மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தலைவாழை இலை போட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு, பலகாரம், காதோல கருகமணி, காரவகை, பொரிகடலை மற்றும் சர்க்கரை அல்லது வெண் பொங்கல் வைத்து படையல் போடவேண்டும்.

    செம்பு நிறைய தண்ணீர்வைத்து மாவிலை வைத்து மேலே தேங்காய் வைக்கவேண்டும். தேங்காய் வைத்த செம்பை சுற்றி பிள்ளையார் துண்டினை சுற்றிவிடவும்.

    மஞ்சள் தூள் மூலம் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்குமம் பொட்டிடவேண்டும். இதன் மீது ஜவ்வாது, புனுகு சந்தனம், பச்சைக்கற்பூரம் தெளிக்க வேண்டும். இவைகளை செய்து முடித்தபிறகு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டாக வெட்டி குங்குமம் தடவி நான்கு பக்கம் வைக்கவேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வரும் மந்திரம் சொல்லவேண்டும்.

    ஓம்ஸ்ரீம் அம்உம் வம்லம்சிங்

    ஐயும் கிலியும் சவ்வும்ஜம்ஜம்

    பம் யம் ரம் மஹா குலதெய்வமே

    எங்கு நீ இருந்தாலும் உன் ரூபத்தை என் கண்முன் காட்டு. எதிரிகள் உன்னை கட்டிஇருந்தாலும் கட்டை உடைத்து குலம் காக்க ஓடிவா முப்பாட்டன், பாட்டன், தந்தைவழி குலதெய்வமே குலம் காக்க ஓடிவா

    சர்வதனமே சர்வஜனமே வா வா

    குலதெய்வமே வசிவசி ஹீம்பட் சுவாகா

    இதை 48 முறை சொல்லி பிறகு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கி பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

    இதை மூன்று பெளர்ணமி நாட்களில் செய்துவர குலதெய்வம் ஏதோ வழியில் கனவில் கூட தெரியவரும் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

    • அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.
    • குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

    பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். மூம்மூர்த்திகளின் வடிவமான அரச மரத்தை பூஜை செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

    சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

    மற்ற நாட்களைவிட , சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

    கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். எல்லா நாட்களிலும் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாம். நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

    ×