iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி.தினகரன் ஆதரவு
  • உரிமை மீறல் விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் 7 பேருக்கு மன்னிப்பு வழங்கினார் சபாநாயகர்
  • ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பிறகே மாநில கலந்தாய்வு: சுகாதாரத்துறை தகவல்
  • தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்கும்: சுகாதாரத்துறை தகவல்
  • கீழடி விவாகாரத்தில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்
  • பிஎஸ்எல்வி சி-38 வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு
  • 27ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார்
  • ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி.தினகரன் ஆதரவு | உரிமை மீறல் விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் 7 பேருக்கு மன்னிப்பு வழங்கினார் சபாநாயகர் | ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார் | அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பிறகே மாநில கலந்தாய்வு: சுகாதாரத்துறை தகவல் | தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்கும்: சுகாதாரத்துறை தகவல் | கீழடி விவாகாரத்தில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் | பிஎஸ்எல்வி சி-38 வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு | 27ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார் | ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

சிம்மம்

இன்றைய ராசி பலன்கள்

அரசியல்வாதிகளால் அனு கூலம் கிடைக்கும் நாள். வீட்டிற் குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

 

வார பலன்கள்

ஜூன் 19-6-2017 முதல் 25-6-2017 வரை:-

முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து வி‌ஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். பூர்வீக சொத்து வி‌ஷயங்களில் நன்மைகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான வி‌ஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும் சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. இரும்பு ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு இந்தவாரம் லாபங்கள் உண்டு. யாரையும் நம்ப வேண்டாம். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, எவரையும் நம்பி பணம் தருவதோ கூடாது.

பத்தாம் வீட்டோன் வலுப்பெறுவதால் இந்த வாரம் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் இந்த வாரம் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி          செல்:8870998888

தமிழ் மாத ஜோதிடம்

15.6.17 முதல் 13.7.17 வரை

யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் ஆனிமாதம் முழுவதும் சிம்ம ராசிக்கு சுபநிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் உள்ள மாதமாக இருக்கும். குருவின் பலத்தால் வருமானம் குறையாது. பணவரவும் நன்றாக இருக்கும் என்பதால் எந்தக் குறையும் இல்லாமல் இந்த மாதத்தை சமாளிக்க உங்களால் முடியும். மாதமுற்பகுதியில் எதிர்பாராத பணவரவுகளும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு.


குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும்.


ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி
செல்:8870998888

ஆண்டு பலன் - 2017

பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் ஆண்டு ஆரம்பத்தில் சிம்மராசிக்கு மந்தமான பலன்களை கொடுத்தாலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல நன்மைகள் நடக்கும் என்பது உறுதி.

பெரும்பாலான சிம்மராசிக்காரர்கள் சென்ற வருடம் பிற்பகுதியில் இருந்து சோதனைகளை அனுபவித்து விட்டீர்கள். உங்கள் ராசிக்கு ஆகாத பகைக்கிரகமான சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களாக அர்த்தாஷ்டமச் சனியாக நான்காமிடத்தில் அமர்ந்து தனது கொடிய பார்வையால் உங்களின் ராசியைப் பார்த்து உங்களுடைய உடல், மனம், பொருளாதாரம் மூன்றையும் பாதித்து விட்டார்.

தவிர குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த கதையாக சென்ற வருடம் ராகுவும் வந்து ராசியில் அமர்ந்தது உங்களை இன்னும் உடல், மற்றும் மனப்பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி விட்டது.

இரண்டு பெரும் பாவக்கிரகங்கள் ராசியோடு சம்பந்தப்பட்டதால் பெரும்பாலானான சிம்ம ராசிக்காரர்களுக்கு சென்ற வருடம் சோதனையாகவே இருந்து வந்தது. இந்த அமைப்பில் தப்பிப் பிழைத்தது பிறந்த ஜாதக வலுவுள்ள மிகச் சிலர் மட்டும்தான். ராசிக்கு சனிபார்வை, ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தம் என்பதால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிம்மத்தினர் சிக்கல்களை எதிர் கொண்டீர்கள். பிறக்க இருக்கின்ற புது வருடம் ஆரம்பம் முதல் பிரச்னைகள் படிப்படியாக தீர துவங்கி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து அனைத்தும் மாறி மிகவும் நல்ல பலன்களை சந்திப்பீர்கள் என்பது உறுதி.

வருடத்தின் நடுப்பகுதியான ஆகஸ்டு மாதம் 18 ம் நாள் உங்கள் ராசியில் இருக்கும் ராகு விலகப் போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும். அதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும். ஒரு மிகப்பெரிய இருட்டு உங்களிடமிருந்து விலகுவதால் உங்கள் உடலும் மனமும் தேஜஸ் எனப்படும் ஒளியை மீண்டும் பெறும்.

வருட மத்தியில் நடக்க இருக்கும் ராகு,கேது பெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும். புது வருடத்தின் இன்னொரு முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக சனியினால் அதிக பாதிப்பை அடைந்த ராசிகளில் சிம்மமும் ஒன்று.

சனியினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் வருடக் கடைசியில் சிக்கல்கள் மெதுமெதுவாகத் தீருவதையும் தொழில் பிரச்னைகள், வருமானக்குறைவு, கடன்தொல்லைகள், போன்றவற்றால் வேதனைகளை அனுபவித்தவர்கள் அவை விலகுவதற்கான வழிமுறைகள் கண்ணுக்கு தெரிவதையும் காண்பீர்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் கடந்த ஆண்டு இருந்ததைப் போன்ற வேலை விஷய துயரங்கள், பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி.

இதுவரை திருமணமாகாத இளையவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நல்லபடியாக முடியும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள் இனிமேல் அவை நீங்கி மன ஒற்றுமை ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் காண்பார்கள்.

தந்தை மூலம் லாபமும், தந்தை வழி சொத்துக் கிடைத்தலும், பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்கள் விலகுவதும் பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்து வந்த தடைகள் நீங்குவதுமான நல்ல பலன்கள் நடைபெறும்.

தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித் தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.

தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள், மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். அரசியலில் ஏற்றங்கள் உண்டு. வரும் தேர்தலில் ஜெயிக்க முடியும்.

செய்யும் தொழிலில் இனிமேல் ஏற்றமும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. குறைந்த வியாபாரம் நிறைந்த லாபம் என்ற முறையில் கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் வீட்டிற்கு செல்ல முடியும்.

சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தடங்கலாகி இருக்கும் அக்காவின் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள். அண்ணன், அக்கா மூலம் சந்தோஷமும் ஆதரவும் உண்டு.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த வருடம் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். பாகப்பிரிவினை சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எடுப்பதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நன்மைகள் இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வருடம் இது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

பத்திரிகை துறையில் இருப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் புது வருடத்தில் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஹே விளம்பி வருட பலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு இதுவரை இருந்து வந்த பின்னடைவுகளை போக்குகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.

அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பெரும் சங்கடங்களை எதிர் கொண்ட சிம்மராசிக்காரர்கள் அவற்றிலிருந்து மீண்டு வந்து நல்ல நிம்மதியான, நிரந்தர வருமானம் உள்ள ஒரு நிலைக்கு இந்த வருடம் முதல் மாறப் போகிறீர்கள்.

கடந்த சில மாதங்களாக சிம்மத்தினர் அனைவரும், குறிப்பாக சிம்மராசி இளைஞர்கள் தொழில் அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்து வந்தீர்கள். சனிபகவான் நான்கில் அமர்ந்து உங்கள் ராசியின் ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும், ராசியையும் தன்னுடைய கெடுபலன் தரும் பார்வையால் பார்த்ததால் பெரும்பாலான சிம்மத்தினருக்கு எல்லாவகையிலும் சங்கடங்கள் தரும் நிலைமைகள்தான் இருந்து வந்தன.

சனியின் பார்வையினால் ராசி பலவீனம் அடைந்திருந்த நிலையில், “ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு ரெட்டைத் தாழ்ப்பாள்” என்ற கதையாக ராசியிலேயே ராகுவும் இருந்ததால் சிம்மராசிக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. மாறாக பெரும்பாலானோருக்கு கெடுபலன்களே நடந்து வந்தன.

பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் முதலில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியானது உங்களுக்கு மிகுந்த மனநிறைவையும், இதுவரை இருந்து வந்த பொருளாதாரச் சிக்கல்களையும் தீர்த்து வைக்கின்ற ஒரு பெயர்ச்சியாக அமையும்.

ஆகஸ்டு மாதம் 18 ம் தேதியன்று நடக்க இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், கடன் தொல்லைகள், வழக்கு விவகாரங்கள் போன்றவைகள் இருக்காது.

ராகு-கேதுக்கள் நன்மைகளைத் தரும் அமைப்பான 6, 12-ம் இடங்களுக்கு மாற இருப்பதால் இதுவரை தொழில்சரிவை சந்தித்து, எல்லாவற்றையும் சமாளிப்பதற்காக கடன் வாங்கி அவஸ்தைப் பட்டவர்கள் இனிமேல் நல்ல பொருளாதார மேன்மையை அடைந்து நிரந்தர வருமானம் வரும் அளவிற்கு தொழில் உயர்வு பெற்று சந்தோஷப்பட ஆரம்பிப்பீர்கள்.

வேலை அமைப்புகள் நினைத்தது போலவே அமையும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும் வர இருக்கும் வருமானத்தின் மூலம் கடன்களை தீர்க்க முடியும். கடன் தொல்லை இன்றி இருக்க முடியும்.

ராகு கேது பெயர்ச்சியைப் போலவே அக்டோபர் மாதம் 26 ம் நாள் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் தன்னுடைய பார்வை 10-ம் இடத்தில் இருந்து நீங்கும் விதமாக மாற இருப்பதால் சிம்மத்திற்கு இதுவரை இருந்து வந்த அனைத்து சிக்கல்களும் நீங்க ஆரம்பிக்கும்.

இந்த இரண்டு பெயர்ச்சிகளின் ஊடாக உங்களின் யோகாதிபதியான குருபகவானும் செப்டம்பர் மாதம் 12 ம் தேதி தற்போது இருக்கின்ற இரண்டாமிடத்தில் இருந்து நிதானமான பலன்களைச் செய்யக் கூடிய மூன்றாமிடத்திற்கு மாற இருக்கிறார்.

இதன் மூலமும் சிம்மத்தினருக்கு நல்ல மாற்றங்களும், அந்த மாறுதல்களை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் அமைப்பும் இருக்கும். குருப்பெயர்ச்சியின் மூலம் இதுவரை தடையாகி இருந்த பாக்கியங்கள் சிம்மத்திற்கு கிடைக்கும். வயதுக்கேற்ற வேலை, திருமணம், குழந்தைபாக்கியம் போன்றவைகள் கிடைக்காமல் மனஅழுத்தத்தில் இருந்தவர்கள் அனைத்தும் கிடைத்து நிம்மதி பெறுவீர்கள்.

முப்பது வயதுகளில் இருக்கும் இளையபருவத்தினருக்கு அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் புத்திசாலித்தனமும் வேறுபட்ட திறமைகளும் வெளிப்பட்டு சிலர் புகழடையும் வாய்ப்பும் இருக்கிறது.

முக்கிய பலனாக இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மேலும் ஏற்கனவே இருந்த நான்காமிட சனியின் தாக்கத்தினால் இதுவரை வசதிகுறைந்த வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் கூட இந்த வருடம் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.

அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இதுவரை இனம் புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து புது உற்சாகம் அடைவீர்கள்.

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வெகு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்தவருடம் நல்லவேலை கிடைக்கும். பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். மத்திய மாநில நிர்வாகப்பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம்.

சிம்ம ராசிப் பெண்கள் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள். ஆண்களைப் போல அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் குடும்பத்திலோ, அல்லது தொழில் அமைப்புகளிலோ ஏமாற்றப்படுவீர்கள். சிலர் மறைமுகமாக கணவரின் தொழிலை நிர்வகிப்பீர்கள்.

புதுவருடத்தில் நற்பெயரும் கௌரவமும் பெண்களுக்குக் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்ப ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். விவசாயிகள் வியாபாரிகள் போன்றவர்களுக்கு வருமானம் உண்டு.

பிறக்க இருக்கும் புத்தாண்டில் நடக்க இருக்கும் இரண்டு முக்கிய பெயர்ச்சிகளின் மூலம் ராசியின் பலவீனம் விலகுவதால், அதாவது ராசியில் இருக்கும் ராகு விலகுவதும், ராசிக்கு இருக்கும் சனிபார்வை நீங்குவதும் சிம்மராசிக்கு சிறப்பை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த தமிழ்ப்புத்தாண்டு நன்மை தரும் புத்தாண்டாகவே சிம்மராசிக்கு அமையும்.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்


சிம்மராசிக்கு இது வரை மூன்றாமிடத்தில் உச்சமாக இருந்து நல்ல பலன்களை கொடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் தற்போது நான்காமிடத்திற்கு மாறி அர்த்தாஷ்டமச்சனி எனும் நிலை பெறுகிறார். இந்த நிலை உங்களுக்கு சாதகமானது அல்ல. நான்காமிடத்து சனியால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம் போன்ற அமைப்புகளில் நன்மைகள் நடக்காது. மேலும் சனி தனது பார்வையால் ஜீவனஸ்தானத்தையும் உங்கள் ராசியையும் பார்ப்பார் என்பதால் உங்களின் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளிலும் இப்போது மாற்றங்களைத் தருவார்.

அதே நேரத்தில் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் சிம்மத்தின் யோகாதிபதியான குருபகவான் சனியைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பதால் நிச்சயமாக பெரிய கெடுதல்கள் எதையும் சனிபகவானால் உங்களுக்குத் தரமுடியாது என்பது உறுதி. நான்கில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் சனியின் பலனாக பணிபுரியும் இடங்களில் மாற்றங்களும், ஏமாற்றங்களும் இனிமேல் இருக்கும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

குறிப்பாக எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண்வாக் குவாதங்கள், தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே வேண்டாம். இதன் மூலம் வேலை செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பையும், மரியாதையும் கீழிறங்கச் செய்வார் சனி. சிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். அவைகள் உங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் வரும் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மேலிடத்திற்கும் உங்களுக்கும் சிண்டு முடிந்து விட சகுனிகள் இந்த காலத்தில் தோன்றுவார்கள் என்பதால் எதிலும் கவனம் தேவை. அரசுப்பணியாளர்கள் முறைகேடான வழிகளில் வரும் பணத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அது போன்ற நேரங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி நீங்கள் எங்கே மாட்டுவீர்கள் என்று காத்துக் கொண்டிருப்பார். நான்கு சுவருக்குள் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த சுவருக்கும் கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள்.

குறுக்குவழி வேண்டாம். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் செய்பவர்களும், வியாபாரிகளும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ, புதிய கிளைகள் தொடங்கவோ, புது முயற்சிகள் எடுக்கவோ மிகவும் யோசித்து செய்ய வேண்டும். அகலக்கால் வைக்கவே வேண்டாம்.

ஆயிரம்தான் இருந்தாலும் உங்களின் யோகாதிபதி குருபகவானின் தயவினால் இன்னும் மூன்று வருடங்கள் உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் பணத்தை வைத்து எத்தகைய சிக்கலையும் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். மேலும் இந்த சனிப்பெயர்ச்சி நடந்தது முதல் ஆறுமாதம் கடகத்தில் உச்சமாக இருக்கும் உங்கள் யோகாதிபதி குருபகவான் சனியைப் பார்த்து அவரது கெடுதல்களை உங்களுக்குத் தரவிடாமல் பாதுகாப்பார். அடுத்து ஒரு வருடம் குருவிற்கு மிகவும் பிடித்த நட்புவீடான உங்களின் ஜன்மராசியான சிம்மத்தில் இருந்து உங்களின் ஒன்பதாமிடத்தைப் பார்ப்பார்.

அதையடுத்து ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு மாறுவார். இந்த நிலைகள் சனியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என்பதால் அர்த்தாஷ்டமச் சனியால் கவலைக்கு இடமில்லை. சனி இப்போது ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த உங்களுடைய குணங்கள் சற்று மாறுப்படும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டீர்கள்.

மனதில் குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக்கலக்கம் இருக்கும். எதையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட ஆளுமைத்திறன்மிக்க உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப் பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம். சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடை பெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

நான்காமிடத்து சனியால் அம்மாவிற்கு ஆரோக்கியக் குறைபாடுகள் தோன்றும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. எந்தக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம்.

சொந்த வீட்டை விற்று அந்தப்பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட சனி . வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். இந்தச் செலவுக்கு புது வண்டியே வாங்கிவிடலாம் என்றால் அதற்கும் தடை வரும். மாணவர்களுக்கு படிப்பில் தடை வரக்கூடும் என்பதால் காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களை கட் அடித்து விடலாம். சனிபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக்கூடாது. பூர்வீகச்சொத் துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையைத் தள்ளி வைப்பது நல்லது.

வீடோ நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு கடும் முயற்சிக்கு பின்னர்தான் திருமண வாய்ப்புகள் உருவாகும்.

இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். குடும்பத்தில் கடும் முயற்சிக்கு பிறகே சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை.

வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லது அல்ல.

விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள்தான் நடக்கும். பொதுவாக சிம்மராசிக்காரர்கள் பரம்பொருளின் அருளினால் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு இந்த கோட்சாரக் கிரகக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப் படுவதற்கு எதுவும் இல்லை.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

சிம்மராசிக்கு தற்போது நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். சாதகமற்ற பலன்களைத் தரும் இடமான ஜென்மராசியில் இருந்து நன்மைகளை தரும் இரண்டாம் இடத்திற்கு குருபகவான் மாறுவதால் சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார மேன்மைகளை உயர்த்தும் குருப்பெயர்ச்சியாக இது இருக்கும்.

குறிப்பாக அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் சரியான வேலை கிடைக்காமல் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகாத சிம்மராசி இளைய பருவத்தினருக்கும், கிடைத்த வேலையை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பிரச்சனைகள் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் இந்தக் குருப்பெயர்ச்சி ஆறுதல்களையும், சிக்கல்களுக்குத் தீர்வையும் தருவதாக அமையும்.

இரண்டாமிடத்திற்கு வரும் குருபகவானால் அளவற்ற தனம் வந்து சேரும் என்பதால் இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள்.

குருபகவான் இருக்கப் போகும் இடம் தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் மேற்கண்ட இனங்கள் வலுப்பெற்று பணச்சிக்கல் தீரும் என்பதோடு உங்கள் வாக்கும் சொல்லும் பலித்து கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.

இதுவரை குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும்.

நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு குருபகவான் புத்திரகாரகன் என்பதால் புத்திரபாக்கியம் அளிப்பார். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
குருபகவானின் பார்வை ஆறு, எட்டு, பத்தாமிடங்களில் பதிவதால் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கே குருபகவான் நல்லபலன் அளிப்பார் என்ற விதிப்படி மேற்கண்ட பாவங்கள் வலுப்பெற்று அந்த பாவங்களுக்குரிய விஷயங்கள் இம்முறை உங்களுக்கு நடைபெறும்.

ஆறாம்பாவம் வலுப்பெறுவதால் கடன் வாங்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் அதை நல்ல காரியத்திற்காக மட்டும்தான் செலவு செய்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். வாங்கும் கடன் உபயோகம் உள்ள சொத்தாக மாறுமே தவிர விரயமாகாது.

குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.

நடுத்தரவயது தாண்டியவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்சனைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

அலுவலகத்திலோ, தொழில் இடங்களிலோ உங்கள் கூடவே இருக்கும் நெருங்கிய ஒருவர் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமலோ அல்லது அவரசப்பட்டு நீங்கள் செய்யும் ஒரு தவறாலோ இந்த வருடம் உங்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிரியாக தள்ளி வைக்க முடியாமலும் நண்பராக சேர்த்து கொள்ள முடியாமலும் திணறுவீர்கள் என்பதால் மறைமுக எதிர்ப்புகளில் கவனமாக இருங்கள்.

குருபகவானின் எட்டாமிடத்துப் பார்வையால் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். குறிப்பிட்ட சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனனகால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாதவர்களுக்கு சரிவுகள் வரலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
எட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள்.

வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்சனை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். இப்போதே ஆரம்பித்தால் அடுத்த வருடம் அர்த்தாஷ்டம சனி விலகியதும் பலனை அறுவடை செய்வீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருபகவானின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதாலும் அவரே உங்களின் பஞ்சமாதிபதி ஆவதாலும் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக மஞ்சள் போன்ற பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

பரிகாரங்கள்:

மூத்தவர்களுக்கும், குருஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவுவது, ஏழைமாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப்பெண்ணிற்கு திருமணத்திற்கு தாலி வாங்கித் தருவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

நினைத்ததை நினைத்தபடியே முடித்துக் காட்டும் சிம்ம ராசி நேயர்களே!

நவக்கிரகங்களில் ராஜ கிரகம் என்று வர்ணிக்கப்படுவது உங்கள் ராசிநாதன் சூரியன். எனவே ராஜாங்க யோகத்தைப் பெற்றவர்கள் நீங்கள். அரசாளும் யோகமும், அதிகாரத் தோற்றமும் பெற்றிருப்பீர்கள். பொன்னையும், பொருளையும் பெரிதாகக் கருதுபவர்களுக்கு மத்தியில் ‘புகழ்’ ஒன்றையே பெரிதாக நினைத்துச் செயல்படுவீர்கள். ‘துணிவே துணை’ என்று வாழ்பவர்கள் நீங்கள். பிடிவாதமும், பேச்சாற்றலும் உங்கள் பிறவிக்குணமாகும். விட்டுக் கொடுக்காத தன்மை உங்கள் ரத்தத்தில் ஊறியது. பணத்தைச் செலவழித்தாலும் உங்கள் குணத்தை மாற்ற இயலாது. நீதியை நிலைநாட்ட உரக்கவும் பேசுவீர்கள். நேசிக்கும்போது அமைதியாகவும் பேசுவீர்கள். இனத்தார், மதத்தார் என்று பார்க்காமல் எல்லோருக்கும் உதவும் குணத்தைப் பெற்றவர்கள் நீங்கள்.

நடிப்புத் துறை முதல் நாடாளும் துறை வரை அனைத்துக் கலைகளையும் கற்றுவைத்திருக்கும் உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வைக்கும் ஜென்ம ராகு!
எதையும் யோசித்துச் செய்ய வைக்கும் ஏழாமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு ஒன்றரை ஆண்டு காலம், அங்கிருந்து உலுக்கி எடுத்து விடுமோ என்ற நீங்கள் நினைக்க வேண்டாம். ராகு–கேதுக்கள் சார பலத்தைப் பொருத்தும், இருக்கும் இடத்தைப் பொருத்தும் பலன் கொடுக்கும் என்று சொல்வார்கள். ஜென்ம ராகு என்பதால் கொடுப்பதில் ஒன்றும் குறைவிருக்காது. ஆனால் கொடுத்த மறுநிமிடமே செலவாகும் சூழ்நிலையும் உருவாகும்.

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொருளாதார நிலை மேலோங்கும். அதிகாரிகளால் அனுகூலம் கிடைக் கும். உள்ளத்தில் தெள்ளத்தெளிவாக முடிவெடுப்பீர்கள். வாழ்க்கைப் பாதையில் ஆச்சரியப்படும் விதத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

பொதுவாக, ராகு பலம் பெறும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஊர் மாற்றம், இட மாற்றம், இலாகா மாற்றங்கள் கூட வந்து சேரலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். அவை நல்ல மாற்றங் களாகவே அமையும். முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வருவர். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வங்கிச் சேமிப்பு உயரும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாங்கிப் போட்ட இடத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யார் பெயரில் வீடு கட்டினால் அது விரைவில் முடியும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.

ராகு–கேதுக்கள் சாயா கிரகங்கள் என்பதால் அவை யார் வீட்டில் இருக்கிறதோ அதற்கு அதிபதியைப் பொருத்தும், அது யார் காலில் சஞ்சரிக்கின்றதோ அந்த ஆதிபத்யத்தின் பலனைப் பொருத்தும் நல்ல பலன்களை வழங்கும். 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் ராகு–கேதுக்கள் இருந்தால் அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொண்டால் ஏற்ற, இறக்கமான வாழ்க்கை இனிய வாழ்க்கையாக அமையும்.

சந்தோஷத்தை வழங்குமா சப்தம கேது?

சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது சந்தோஷமான செய்திகள் பலவும் வந்து சேரும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு கைகூடிவரும். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டுப் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு. வாழ்க்கைத் துணை அமையக் கூடிய வாய்ப்பு கைகூடும்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பஞ்சாயத்துக் களில் உங்கள் சொற்களைக் கேட்டு நடக்க பலரும் முன்வருவர்.

குழந்தைகளுக்கான கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களோடு மனக்கசப்பு உருவாகலாம். மாற்றுக்கருத்துடையோரின் எண்ணிக்கை கூடாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கேதுவுக்குப் பிரீதியாக ஞாயிற்றுக்கிழமை ஆனைமுகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். திசைமாறிய விநாயகர் உங்களுக்கு தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பார்.

சப்தம கேதுவால் பயணங்கள் அதிகரிக்கும். காலையில் ஒரு ஊருக்கும், மதியத்தில் ஒரு ஊருக்கும், மாலையில் ஒரு ஊருக்கும் சென்று கொண்டேயிருப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உத்தியோக உயர்வு கூட சிலருக்கு வந்து சேரலாம். உதிரி வருமானங்கள் பெருகும். மாமன், மைத்துனர் வழியில் மங்கலச் செய்தி வந்து சேரலாம்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

சிம்ம ராசிக்குள் ராகு அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக ஏற்படும் பலன்களை அறிந்து செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): பண வரவு திருப்திகரமாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைக்கலாம். உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் சில காரியங்கள் முடிவடையும். அரசாங்க வழியில் சலுகைகள் கிடைத்து தொழிலை விரிவு செய்ய முன்வருவீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் அமைப்பு அதிகம் இருக்கின்றது.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): சகோதர ஒற்றுமை பலப்படும். தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவிற்கு உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்கள் செய்ய வழிவகுத்துக் கொடுப்பர். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். படிப்படியாக முன்னேற்றம் காண்பவர்களுக்கு மத்தியில் நீங்கள் திடீர் முன்னேற்றம் காண்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும் அமைப்புகளும் சிலருக்கு உருவாகும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): மற்றவர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அளவோடு பேசுவது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்லி, வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வதன் மூலமே அமைதி காண இயலும். இதுபோன்ற காலங்களில் சிறப்பு வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிட்டுவதற்கான அறிகுறிகள் தென்படும். பிள்ளைகளால் பிரச்சினைகள் தீரும். அவர்கள் கல்யாணம் மற்றும் கல்விக்காக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை செய்து கொள்ளும் பொழுது ஏற்பட்ட தகராறுகள் அகலும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குரிய பகுதியைக் கொடுக்க முன்வருவர். சமாதானக் கொடி இல்லத்தில் பறக்கும் நேரமிது.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): உங்களுடைய பலவீனங்களே பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடும். எடுத்த வேலையை எளிதில் முடிக்க இயலாது. கொடுத்த வாக்கையும் காப்பாற்ற இயலாது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கிஇருக்கும் இந்த நேரத்தில் சான்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): செவ்வாய் உங்கள் ராசிக்கு 4, 9–க்கு அதிபதியாக அமைவதால் சுகங்களும், சந்தோஷங்களும் கூடுதலாகக் கிடைக்கும். வருமானம் இருமடங்காக உயரும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்துக்கள் இன்றைக்கு விற்பனையாகி லாபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பழைய கடன்களை கொடுத்து நிம்மதி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மீண்டும் வரத்தொடங்கும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு மூலம் செல்வ நிலையில் உயர்வு கிடைக்கவும், சப்தம கேதுவால் தக்க விதத்தில் வாழ்க்கை அமையவும், இல்லத்தில் நல்ல சம்பவங்கள் எந்நாளும் நடைபெறவும், வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தட்சிணா மூர்த்தியை வழிபட்டு வருவதோடு, மாத சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை, வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.