iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • பன்னீர்செல்வம் முதல்வரானவுடன் மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்: மதுசூதனன்
  • ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை
  • மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

பன்னீர்செல்வம் முதல்வரானவுடன் மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்: மதுசூதனன் | ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை | மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

மிதுனம்

இன்றைய ராசி பலன்கள்

தாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

வார பலன்கள்

மார்ச் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை:-

ராசிநாதன் புதன் நீசநிலையில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தடைகள் இருக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் ராசியின் மற்ற யோகாதிபதிகள் சுக்கிரனும், சனியும் வலுவாக இருப்பதால் வாரக்கடைசியில் தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் வாரமாகவும் இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழில் இருப்பது பாபகிரகம் என்றாலும் அவர் உங்களின் யோகாதிபதி என்பதால் கெடுதல் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 22, 23, 24 ஆகிய நாட்களில் பணம் வரும். 22ம் தேதி இரவு 9 மணி முதல் 25ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்க வேண்டிய சுப காரியங்களுக்கான ஆரம்பங்களை கூட இந்த நாட்களில் செய்யக்கூடாது.

தமிழ் மாத ஜோதிடம்

மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 13-ந்தேதி வரை

பங்குனி மாதத்தின் பலன்களை மிதுனராசிக்காரகளுக்கு இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லலாம். மாதத்தின் முற்பகுதி முழுவதும் ராசிநாதன் புதன் நீசநிலையில் இருப்பதால் சாதகமில்லாத நிலைகளும் பிற்பகுதியில் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக தீர்ந்து சந்தோஷப்படுதலும் இருக்கும். ஆறுக்குடையவன் ஆட்சி பெறுவதால் இதுவரை அடங்கி இருந்த எதிர்ப்புகள் மற்றும் கடன் பிரச்னைகள் லேசாக தலைதூக்கும். மிதுனராசிக்காரர்கள் கோபத்தை மறந்து நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது.

ராசிநாதனின் நண்பரான சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும், இருக்கும். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் புதன் நீசநிலையில் இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவானுடன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி சில நன்மைகளும் நடக்கும்.

செவ்வாய் வலுப்பெறுவதால் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு நல்ல செய்திகள் உண்டு.

ஆண்டு பலன் - 2017

மிதுனராசிக்கு நல்ல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தருகின்ற ஆண்டாக 2017-ம் ஆண்டு அமையும்.

வருடத்தின் பிற்பகுதியில் குருபகவான் ஐந்தாமிடத்திற்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு நல்ல பலன்களை தரும் என்பதாலும், வருடத்தின் இறுதி வரை சனி நல்ல இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார் என்பதாலும் இந்த ஆண்டு சாதகமற்ற அமைப்புகள் எதுவும் மிதுனத்திற்கு இல்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் 2017 வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி வரை ராகுபகவான் மூன்றாமிடத்தில் இருப்பது மற்ற கிரகங்கள் தரும் கெடுதலான அமைப்புகளை தடுத்து நிறுத்தி உங்களுக்கு பெரிய உதவிகளை செய்யும் சகாய அமைப்பு என்பதால் மிதுனத்திற்கு இந்த வருடம் நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும் என்பது உறுதி.

வருடத்தின் முற்பகுதியில் வேற்று மத, இன, மொழிக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள், வெளிநாடு, வெளிமாநில வேலை மற்றும் தொழில் அமைப்புகள், மற்றும் அந்நிய இன நண்பர்கள், பங்குதாரர்கள் மூலம் ராகுபகவான் ஆதாயங்களை தருவார். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்கள் மூலம் மிதுனத்தினருக்கு நன்மைகள் இருக்கும்.

அதேபோல தற்போது உங்களுக்கு சாதகமற்ற நான்காமிட அமைப்பில் இருக்கும் குருபகவான் செப்டம்பர் மாதம் 12 ம் தேதி மிகவும் நன்மைகளைத் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார்.

பெயர்ச்சியாகும் ராசியின் பலன்களை முன்கூட்டியே தரக்கூடிய வருடக் கிரகமான குருபகவான் அவரது நல்ல பலன்களை 2017 ஜூலை மாதம் முதலே தரத் துவங்கி விடுவார் என்பதால் இந்த வருடத்தின் பிற்பகுதியில் மிதுன ராசிக்காரர்களின் காட்டில் அடைமழை பெய்யப் போவது உறுதி.

குருபகவானது ஐந்தாமிட மாற்றத்தால் இதுவரை தொழில் விஷயங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு இருந்து வரும் அதிர்ஷ்டமற்ற நிலைமைகள் பெரிதும் மாறும். தற்போது கடினமான முயற்சிகள் தேவைப்படும் அனைத்தும் ஜூலைக்குப் பிறகு முயற்சியின்றியே அதிர்ஷ்டத்தினால் நிறைவேறும்.

குறிப்பாக சொந்த வாழ்க்கையில் சென்ற வருடம் இழப்புகளை சந்தித்தவர்கள், இதுவரை வாழ்கையில் செட்டில் ஆகாதவர்கள் மற்றும் திருமணம், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும்.

அதேநேரத்தில் வருடக்கடைசியான அக்டோபர் 26 ந்தேதி சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. சனிபகவான் தற்போது இருந்து வரும் நல்ல இடமான ஆறாமிடத்தில் இருந்து குடும்பத்தில் குழப்பங்களை உண்டு பண்ணும் ஏழாமிடத்திற்கு மாற இருக்கிறார்.

இது மிதுனத்திற்கு நற்பலன் தர இயலாத ஒரு அமைப்புத்தான் என்றாலும் குருவைப்போல சனி முன்கூட்டியே பலன் தருபவர் அல்ல. சனிபகவான் மந்தன் என்பதால் ஒரு ராசிக்கு மாறி மூன்று மாதங்களுக்குப் பிறகே அவரது பலன்களை அளிக்கத் துவங்குவார் என்பதால் சனியின் சாதகமற்ற பலன்களை 2018 ஆம் ஆண்டுதான் நீங்கள் உணரும்படி இருக்கும்.

இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆகஸ்டு மாதம் முதல் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்த வருடம் கெடுபலன்கள் எதுவும் இராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிலர் உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். யாருக்கும் ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வருட இறுதியில் ஏழாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்க்கப் போகும் சனி உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும். பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.
குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை.

எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

எப்படிப் பார்த்தாலும் பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் என்பது உறுதி.

துன்முகி வருடம்

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்புத்தாண்டான துன்முகி வருடத்தில் மிதுன ராசிக்கு சிறப்பான அம்சங்கள் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி சில மாதங்களுக்கு நிலை கொண்டிருக்கப் போவது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை மிதுனராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

பாவக்கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில் கோட்சாரரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்கு செவ்வாயும், சனியும் ஒன்று சேர்ந்திருப்பது மிதுனராசிக்கு நல்லது.

இந்த நிலை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி எனப்படும் ஒன்பதுக்குடையவரும் லாபாதிபதி எனப்படும் பதினொன்றுக்குடையவனும் இணைந்து அமர்கின்ற அமைப்பு என்பதால் இந்த அமைப்பு தொடர்ந்திருக்கும் காலம் வரைக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு யோகமான கால கட்டமாக அமையும்.

அதே போல கடந்த வருடம் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் மூன்றாமிடத்தில் இருந்ததால் குருவின் மூலம் கிடைக்க இருந்த எந்த பலன்களும் மிதுனராசிக்கு கிடைக்காத நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் மூன்றாம் இடத்தை விட நல்ல ஸ்தானமான நான்காம் பாவத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் மிதுனராசிக்கு நன்மைகள் இருக்கும்.

தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் பதவிஉயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.
பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பிற இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.

பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

மிதுனராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் இது.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனராசிக்காரர்களுக்கு இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்து மகன், மகள் விஷயத்தில் மனசங்கடங்களையும், வருத்தங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் இப்போது ஆறாமிடத்திற்கு மாறுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் இன்னும் சில வருடங்களுக்கு மிதுனராசிக்கு மிகவும் நன்மைகளைத் தரக்கூடிய மேன்மையான காலம் ஆரம்பமாகிறது. எனது அனுபவப்படி மிதுனராசிக்காரர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள்.

நுணுக்கமான வேலைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வார்கள். எதையுமே சட்டென கிரகித்துக் கொள்ளக் கூடியவர்கள். எனவே நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை நல்லமுறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும். என்னதான் புத்திசாலிகள் என்றாலும் உங்களை வேலை செய்ய வைக்க இன்னொரு ஆள் தேவைப்படும். யாராவது ஒருவர் உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதை விரும்புவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்போது இரண்டு மடங்கு நல்ல பலன்கள் நடக்கும்.

ஆறாமிடத்திற்கு வரும் சனிபகவானால் இதுவரை நடக்காத அனைத்து நன்மைகளும் நடக்கும். இதுவரை தாமதமாகி வந்த எல்லா பாக்கியங்களும் கைகூடும். கடன் தொல்லை ஒழியும், பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து பண பிரச்சனையும் ஒழியும். இதுவரை கஷ்டங்களை கொடுத்து வந்த மகன், மகளின் பிரச்சனைகள் தீர்த்து புத்திரவிஷயத்திலும் நிம்மதி அடை வீர்கள். குறிப்பாக என்ன காரணம் என்றே தெரியாமல் இதுவரை தடையாகிக் கொண்டிருந்த மகன் மகளின் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்தி ஊர் வாயை அடைக்க முடியும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அனைத்து ராஜ கிரகங்களும் மிதுனராசிக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதால் இந்த காலகட்டத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தயக்கங்களை விட்டொழித்து சுறுசுறுப்பாக செயலாற்றினால் வெற்றிச் சிகரங்களைத் தொடுவீர்கள். இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு நல்ல வேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.

நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும்.

தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்சனை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு.

இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்சனை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும்.

அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

இதுவரை மருத்து வத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும். கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள், நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறை களான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட மிதுனராசியினர் அனைவருக்கும் இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும். பெண்களுக்கு இந்தக் சனிப்பெயர்ச்சி நல்ல பலன் களை அதிகம் தரும்.

இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும்.

வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் சொந்தமாக டீலக்ஸ் பிளாட் அமையும். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு `இதர வருமானங்கள்' சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொதுவாக மிதுனராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

மிதுனராசிக்கு தற்போது மூன்றாமிடத்தில் இருக்கும் குருபகவான் நான்காமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கெனவே குருபகவான் இருந்து வந்த மூன்றாமிடம் உங்களுக்கு நன்மைகளைத் தந்த அமைப்பு அல்ல என்பதால் தற்போது மாற இருக்கும் நான்காம் வீட்டில் அவர் உங்களுக்கு கெடுதல்கள் எதையும் செய்யாமல் நன்மைகளை மட்டுமே செய்வார் என்பது உறுதி.

மேலும் இப்போது மிதுனராசிக்கு ஆறாமிடத்தில் நல்ல வலுவான அமைப்பில் உங்கள் யோகாதிபதி சனிபகவான் இருப்பதாலும், சகாயஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் நன்மை தரும் அமைப்பில் ராகுபகவான் இருப்பதாலும் இந்தக் குருப்பெயர்ச்சி பெரிய அளவில் நிச்சயமாக உங்களைப் பாதிக்காது.

குருவைத் தவிர்த்து மற்ற ராஜகிரகங்கள் மிதுனராசிக்கு நன்மை தர இருப்பதால் குருபகவானால் சாதகங்கள் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக பாதகங்கள் இருக்காது. அதேநேரத்தில் இதுவரை அனைத்து அமைப்புகளிலும் உங்களுக்கு இருந்து வந்த தடைகளும், தாமதங்களும் லாபம் தராத போக்கும் இணைக்கமற்ற நிலையும் மாறி பொருளாதார மேன்மை பெற தொடங்குவீர்கள்.

அதோடு நான்காம் வீட்டிற்கு வரும் குருபகவான் தனது வீடான பத்தாம் வீட்டை பார்த்து பலப்படுத்துவார் என்பதால் குருவின் பார்வை பெறும் பாவங்கள் வலுப்பெறும் என்பதன்படி உங்களின் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று அதன் மூலம் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். எனவே இந்தக் குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுனராசிக்காரர்களுக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாமல் நற்பலன்கள் மட்டுமே இருக்கும்.

குருபகவான் தனது பார்வையால் எட்டாமிடத்தையும், பனிரெண்டாமிடத்தையும் பார்த்து வலுப்படுத்துவதாலும், ஒரு சுபகிரகம் அஷ்டம பாவத்தை வலுப்படுத்தினால் வெளிநாட்டுத் தொடர்புகளையும் அதனால் நன்மைகளையும் செய்யும் என்ற விதிப்படி தற்போதைய குருப்பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன ராசிக்காரர்களுக்கு தூர இடங்களிலிருந்து நன்மைகள் கிடைக்கும்.

இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்சனையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆகஸ்டு முதல் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.

திருமணமாகாமல் இருக்கும் இளையவர்களுக்கு இந்த பெயர்ச்சினால் சுபகாரியங்கள் நடந்தேறி அது விஷயமாக நீங்கள் பெரிய தொகையை செலவு செய்து அதன் மூலம் அடுத்தவர் கவனத்தை ஈர்க்க முடியும். இந்த பெயர்ச்சினால் மிதுன ராசிக்காரர்களின் வீட்டில் சுப காரியங்கள் உண்டு.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் பத்தாமிடத்தைக் குரு பார்க்க போவதால் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தக் குருப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

சுபக்கிரகமான குருபகவான் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுவது நல்லது. பணிபுரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண் விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். அதே நேரத்தில் எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் பெரிய பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும்.

படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும். குருபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச்சொத்துக்களை விற்கக்கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள், போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் :

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின்பு அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து, புது மஞ்சள் துணியில் முடித்து பூஜை அறையில் வைத்து வியாழன்தோறும் அதனை வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத்தரும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

விலகிச் சென்றவர்களையும் விரும்பி அரவணைத்துக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் புதனை ‘கணக்கன்’ என்று வர்ணிப்பது வழக்கம். எனவே மனதாலேயே கணக்குப் போடும் மாமேதைகளாக விளங்குவீர்கள். மற்றவர்களின் திட்டங்களை அறிந்து கொள்வதில் நீங்கள் அசகாய சூரர்கள். தீட்டும் திட்டங்களை யாரிடமும் சொல்ல மாட்டீர்கள். திடீரென செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு குதூகலம் ஓரளவு தான் என்றாலும், பாதி வயதிற்கு மேல் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு கிட்டும்.

பணம் சம்பாதிப்பது எப்படி என்று எல்லோரும் ஏங்கும் பொழுது, எப்படியும் பணம் சம்பாதிக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். உணர்ச்சி வசப் படுவதன் மூலம் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை பகைத்துக் கொள்வீர்கள். ஆனால் அதற்காகக் கவலைப்பட மாட்டீர்கள். அடுத்து ஒருவரைப் பிடித்து அப்படி, இப்படிப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

இப்படிப்பட்ட வித்தியாசமான குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களை வழங்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

முயற்சித்தால் வெற்றி தரும் மூன்றாமிடத்து ராகு!
ஒளிமயமான வாழ்வு தரும் ஒன்பதாமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள்.

மூன்றாமிடத்து ராகு முக்கியத் திருப்பங்களைக் கொடுக்குமா?, முன்னேற்றத்தை தருமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? எடுத்த காரியத்தை துணிச்சலுடன் செய்யலாமா? என்றெல்லாம் சிந்திக்கத் தூண்டும். உங்களைப் பொறுத்தவரை செய்யும் முயற்சிகளுக்கு வெற்றியை தேடித்தரும் பொறுப்பு ராகு கையில்தான் இருக்கிறது. எனவே நாடி வரும் ராகுவைப் போற்றிக் கொண்டாடி, தேடிச்சென்று வழிபாடு செய்யுங்கள். பாடிப்பணிந்து வழிபட்டால் பக்கபலமாக ராகு ஒத்துழைப்புச் செய்யும்.

பிரபலமானவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவி செய்வர். நினைத்த காரியத்தை, நினைத்த நேரத்தில் செய்து முடித்து, நிகழ் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். ஒவ்வொரு நாளும் நீங்கள் தீட்டிய திட்டங்கள் உடனுக்குடன் நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த ராகுப்பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றம் தரும் என்றாலும், சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட காரணமாகவும் அமையும். இட மாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம், நாடு மாற்றம் என்று படிப்படியாக மாற்றங்கள் அலைமோதும்.

உங்கள் சுய ஜாதகத்தில் 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்கள் உறவைப் பலப்படுத்த உகந்த பரிகாரங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். மூன்றில் வரும் ராகுவால் முன்னேற்றம் அதிகரிக்க, பெயர்ச்சியான மூன்று மாதங் களுக்குள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

சேமிப்பு கரையாமல் இருக்க சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மற்றவர்களை விமர்சிப்பதை தவிர்ப்பதன் மூலம் மதிப்பையும், மரியாதையும் தக்க வைத்துக் கொள்ளலாம். முடியாது, தெரியாது என்ற வார்த்தைகள் உங்கள் அகராதியில் இருந்து அகற்றப்படும். நீண்ட நாட்களாக அரசு வேலை கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்தவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக் கை கூடும். ராகுவின் பலத்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

எதிரிகளின் யுக்தியை உங்கள் புத்தி நுட்பத்தால் முறியடித்து விடுவீர்கள். ‘கதிர்’ வரும் முன்னதாகவே எழுந்து ‘மதி’ வரும் வரை இரவு பகல் பாராமல் உழைத்த உங்கள் உழைப்பிற்கு ஏற்ற முன்னேற்றம் வந்து சேரும்.

ஒன்பதாமிடத்து கேது மிஞ்சும் பலனைத் தருமா?

ஜாதகத்தில் மிக முக்கியமான இடங்கள் இரண்டு. அவை ஐந்தாமிடமும், ஒன்பதாமிடமும் ஆகும். ஐந்தும், ஒன்பதும் நன்றாக இருந்தால் மிஞ்சும் பலன் தரும் என்பார்கள். எனவே மிஞ்சுகின்ற அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கப் போவது இந்த ஒன்பதாமிடத்து கேதுவின் ஆதிக்கம் தான்.

கேதுவின் ஆதிக்கத்தால் பூர்வீக சொத்துக்களில் லாபம் வரும். வங்கிகளில் சேமிப்பு உயரும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். பெற்றோர்கள் நம்மிடம் பிரியம் காட்டாமல், உடன் பிறந்தவர் களிடம் காட்டுகிறார்களே என்ற கவலை இனி அகலும். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல், தொழிலுக்கு உறுதுணையாக அமையும். காரசாரமாகப் பேசியவர்கள் இனி கனிவோடு பேசுவர்.

ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது எண்ணங்களை நிறைவேற்றும் பொழுது இன்னல்களை கொடுக்காமல் இருக்கவும், பொன்னான எதிர் காலத்தை அமைத்துக்கொடுக்கவும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு–கேதுக் களின் நிலையறிந்து அதற்குரிய நாளில் முறையாக சர்ப்ப சாந்தி களைச் செய்து வருவது நல்லது.

பயணங்களின் மூலம் புதிய பழக்கங்கள் வந்து சேரும். வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கும் வாகனங்களில் அதிர்ஷ்ட எண் பார்த்து வாங்கினால், தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் போதுமானதாகக் கிடைக்காது. வரவும் செலவும் சமமாக இருக்கும் விதத்திலேயே இந்தப் பாம்புக் கிரகப் பெயர்ச்சி அமைந்திருக்கின்றது.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு, சிம்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக நமக்கு ஏற்படும் பலன்களை அறிந்து நாம் செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): ஒருபக்கம் பயம், மறுபக்கம் துணிச்சல், இரண்டும் இணைந்தே உங்களிடம் இருக்கும். புதிய முயற்சிகளை செய்யத் தொடங்கும் பொழுது இதைச் செய்யலாமா? வேண்டாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும். குழப்பங்களுக்கு முடிவெடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நேரமிது. உடன்பிறப்புகளை அனுசரித்துச் சென்றால் பெரும்பான்மையான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வந்துவிடும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். உரிமை கொண்டாடும் உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு கைகொடுத்து உதவுவார்களா? என்பது சந்தேகம் தான்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக் களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். புதிய சொத்துக்களை வாங்கும் அமைப்பும், சுபவிரயங்களும் ஏற்படும். பொதுவாகவே பாக்கிய ஸ்தானாதிபதியாக விளங்கும் சுக்ரன் பயண ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் நீண்ட தூரப் பயணங்களால் பலன் கிடைக்கும். மறைந்த முன்னோர்களை வழிபடுவதன் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாகும். தங்கம், வெள்ளி மற்றும் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் நேரமிது.

ராகு பகவான், கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): எதிரிகள் விலகுவர். எளிதில் காரியங்களை முடித்து விடுவர். உதிரி வருமானங்கள் பெருகும். உறவினர் பகை மாறும். ஒருசிலருக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்து சேரலாம். வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்திருந்தால் உங்களுக்கு அது எளிதில் கைகூடலாம்.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை நமக்கு வழங்குவார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): கல்யாண வாய்ப்புகள் கை கூடும். கடந்த காலத்தில் நடைபெறத் தாமதபட்ட சில கரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். 7, 10–க்கு அதிபதியானவர் குரு பகவான் என்பதால் வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினைகள் அகலும். அவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் உதிரி வருமானங்களும் வந்து சேரும். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): பொறுமையோடு செயல்பட வேண்டிய வாரமிது. புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர் வழியில் மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரலாம். உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வழக்கு களில் திசைதிருப்பம் ஏற்படும். இது போன்ற காலங்களில் குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுதினசரி வாழ்க்கையை மனமகிழ்ச்சியாக அமைத்துக் கொடுக்கும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): தனியார் துறையில் உள்ளவர்களுக்கு அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நேர்முகத் தேர்விற்குச் சென்றும் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகின்றதே என்று நினைத்தவர் களுக்கு இப்பொழுது அழைப்புகள் வந்து சேரும். இளைய சகோதரத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் நடத்துபவர்கள் கிளைத் தொழில் தொடங்க முன்வருவர்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

மூன்றாமிடத்து ராகுவால் முன்னேற்றம் கிடைக்கவும், ஒன்பதாமிடத்து கேதுவால் ஒப்பற்ற வாழ்வு அமையவும், புதன்கிழமை அன்று ஆலயம் சென்று விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்வதோடு, ஏகாதசி விரதமிருந்து திருவேங்கடத்தானை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.