iFLICKS தொடர்புக்கு: 8754422764
மகரம்

இன்றைய ராசி பலன்கள்

விருந்தினரை வரவேற்று வியப்படையும் நாள். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தி தரும். தெய்வத் திருப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

வார பலன்கள்

டிசம்பர் 05-12-2016 முதல் 11-12-2016 வரை:-

ராசியில் உச்ச செவ்வாயுடன் யோகாதிபதி சுக்கிரனும் ஏழுக்குடைய சந்திரனும் இணைந்து ஆரம்பிக்கும் வாரம் இது. சுக்கிர, சந்திர, செவ்வாய் இணைவு மகர ராசிக்கு சில வித்தியாசமான அனுபவங்களை தரும் என்பதால் இந்த வாரம் இளைய பருவத்தினரின் இன்ப வாரமாக இருக்கும். இதுவரை தோழமையுடன் பழகியவர் வாழ்க்கைத்துணை என்ற அமைப்பிற்கு மாறுவது இப்போது நடக்கும். நட்புடன் பழகியவர்கள் தங்களின் உள்ளம் திறந்து காதலை சொல்லும் வாரம் இது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். முயற்சி செய்தும் நடக்காத சில வி‌ஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும்.

தமிழ் மாத ஜோதிடம்

நவம்பர் 16-ம்தேதி முதல் டிசம்பர் 15-ம்தேதி வரை

ராசியைக் குரு பார்த்து, பாக்யாதிபதி வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக கார்த்திகை இருக்கும். சிலருக்கு கணவர் மூலம் சந்தோஷமான விஷயங்களும், இன்னும் சிலருக்கு மனைவியினால் ஆதாயங்களும் உள்ள மாதம் இது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வீடு மாற்றம், வாகன மாற்றம் இருக்கும். வருங்கால முன்னேற்றத்திற்கு வழி அமைக்கும் மாதம் இது. பணவரவு நன்றாகவே இருக்கும். நல்ல பொருளாதார நிலையும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் இருக்கும். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் அதிகம் உள்ள மாதம்தான். வருமானத்தை சேமிக்கத்தான் முடியாது. அரசியல் வாதிகளுக்கும், அரசுத் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

மாத பிற்பகுதி அதிக நன்மைகளைச் செய்யும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதி உண்டு. நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்பொழுது பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் வந்து அவதரிப்பார். சிலருக்கு அரசு வேலைவாய்ப்பு உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள்.

ஆண்டு பலன்

கோட்சார ரீதியில் மகரத்திற்கு பெரிய அளவிலான துன்பங்கள் எதுவும் சென்ற வருடம் இல்லை என்றாலும் 2015-ம் ஆண்டு பிற்பகுதிக்கு பிறகு குறிப்பிட்ட சிலருக்கு அஷ்டமகுருவின் ஆதிக்கத்தினால் வாழ்க்கை மாற்றங்கள் இருந்தன. இந்தநிலை இந்தவருடம் ஆகஸ்ட்மாதம் வரை நீடிக்கும் என்பதோடு வருடத்தின் பிற்பகுதி லாபகரமாக இருக்கும் என்பதால் புதுவருடத்தை நீங்கள் புத்துணர்வோடு வரவேற்கவே செய்வீர்கள்.

2016-ம்வருட ஆரம்பத்தில் ராகுபகவான் இதுவரை இருந்து வந்த ஒன்பதாமிடத்திலிருந்து மாறி எட்டாமிடத்திற்கு வருகிறார். இது மகரராசிக்கு நல்ல நிலை இல்லைதான். ஆனாலும் ஏற்கனவே அங்கிருக்கும் குருபகவானுடன் இணைந்து உங்கள் ராசியைப் பார்த்து வலுப்படுத்தும் ராசிநாதன் பதினொன்றாமிட சனியால் ராகு பார்க்கப்படுவதால் மகரராசிக்கு புது வருடத்தில் ராகுவால் கெடுதல்கள் இருக்காது.

அதேநேரத்தில் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். அரசு தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். கிரகங்கள் போடும் தூண்டிலுக்கு இரையாகி விடாதீர்கள். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சுய தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது. சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும். பணவரவு சற்றுச் சுமாரான நிலையில்தான் இருக்கும் என்பதால் செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். என்ன இருந்தாலும் தேவையான நேரத்தில் பணம் வந்து விடும் என்பதால் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் ஒரு முட்டாள்தனமான மேலதிகாரியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும். இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள்.

சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம். நடுத்தர வயதுடையவர்கள் உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரலாம். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். கோபங்களைக் குறைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அனுசரணை காட்ட வேண்டியது அவசியம். பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம். கல்லூரி பள்ளி செல்லும் குழந்தைகளைக் கவனிப்பது நல்லது. சிலருக்கு திருமணயோகம் உண்டு. தொழில்ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள்.

நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சுமுகமான உறவு ஏற்படுவது கடினம். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை விட்டு மாறுதல், புதியதாக வீடு ஒத்திக்கு எடுத்தல் அல்லது புதிய வீடு வாங்குதல் போன்ற மாற்றங்கள் இருக்கும். மனைவி குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் கேளிக்கை சுற்றுலாக்கள் நவக்கிரக யாத்திரைகள் போன்ற பயணங்கள் இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது.

வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். எதுவும் கைமீறிப்போகாமல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் பாதுகாப்பார் என்பதால் மகரத்திற்கு இது நல்ல வருடம்தான்.

துன்முகி வருடம்

(உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

சென்ற ஆண்டு மகரராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதகவலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். பெரும்பான்மையான மகரராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.

சென்ற சிலமாதங்களாக எட்டாமிடத்தில் இருந்த குருவாலும் அவரோடு இணைந்திருக்கும் ராகுபகவானாலும் பெரும்பாலான மேஷராசிக்காரர்களுக்கு சரியான வருமானம் இன்மை, குடும்பத்தில் சண்டை, வாழ்க்கைத் துணையிடம் கருத்துவேறுபாடு, நண்பர்களுக்குள் தேவையற்ற மனஸ்தாபம், கூட்டுத்தொழிலில் சங்கடங்கள், பங்குதாரர்களிடம் குழப்பம் போன்ற பலன்கள் நடந்து வந்தன.

அந்த நிலைமை தற்போது பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடமான துன்முகி ஆண்டில் நீங்கி இந்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் நனமைகளைத் தரும் சுறுசுறுப்பான வருடமாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பெரும்பாலான ராஜகிரகங்கள் மகரராசிக்கு நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பணவரவில் நல்ல மேம்பாடான நிலையைக் கண்கூடாக காண்பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

பொதுவாக மகர ராசிக்காரர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.
பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.
உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும்.

இதுவரை தவிர்க்கவியலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும்.

பொதுவில் மகரராசிக்கு நன்மைகள் மட்டுமே உள்ள ஆண்டு இது.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய அனுபவங்களை கொண்ட பொற்காலம் ஆரம்பிக்க உள்ளது. அனைத்து மகர ராசிக்காரர்களும் இந்த காலகட்டத்திற்கு பரம்பொருளுக்கு நிச்சயமாக நன்றி செலுத்துவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து வந்த சனிபகவான் மிகவும் யோகம் தரும் பதினொராம் இடத்திற்கு மாறி உங்களுக்கு அளவற்ற நன்மைகளையும், பாக்கியங்களையும் அளித்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தப் போகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தின் மூன்று வருடங்களும் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்தும் நிறைவேறி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறைஎண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மகரராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது. உங்கள் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.

எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும் படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். அதிர்ஷ்ட தேவதை அருகில் வந்து உங்களை அணைத்து கொள்வாள். இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காத வர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார். போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். தொழில் ஆரம் பிக்க உகந்த நேரம் இது. சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்.

தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம்.

புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும். அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும்.

ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்க வலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும். சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். மகரராசிப் பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் எனபது உறுதி.

வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்சனைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடை வீர்கள்.

குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும். ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள். தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்.

உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும். இதுவரை இருந்துவந்த வீண் செலவுகளும் விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். இனிமேல் குறிப்பிடத் தக்க அளவில் பண வரவும் லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும். பங்குச்சந்தை யூகவணிகம் போன்ற துறைகளில் லாபம் கிடைக்கும். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

மகரராசிக்கு கடந்த ஒருவருடமாக எட்டாமிடத்தில் இருந்து சாதகமற்ற பலன்களைத் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை என்பதால் இந்த குருப்பெயர்ச்சியினால் உங்களுக்கு நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.

இயற்கைச் சுபக்கிரகமான குருபகவான் பெருங்கோண வீடான ஒன்பதாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கப் போவதால் மிகவும் நல்லபலன்கள் மகரராசிக்கு உண்டு. பெருங்கோணத்தில் வலிமையுடன் இருக்கும் குருபகவானுக்கு முழுப்பார்வையும் உண்டு என்பதால் “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழிப்படி குருவின் பார்வைபடும் உங்களின் ராசி மூன்று மற்றும் ஐந்தாமிடங்கள் வலுப்பெற்று உங்களுக்கு அதிக நன்மைகளைத் தரும்.

இந்த குருப்பெயர்ச்சிக் காலம் முழுவதும் உங்களில் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்கஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

குருவின் மூன்றாமிடப் பார்வையால் உங்களில் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். மூன்றாம் இடம் கீர்த்திஸ்தானம் என்பதால் நவீனயுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் மகரராசிக்காரர்களால் சாதிக்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

குருபகவானின் ஐந்தாமிடப் பார்வையால் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. உங்களுடைய அதிர்ஷ்டத்தையும், சிந்தனைப் போக்கையும் குறிக்கும் ஐந்தாமிடத்தை குருபகவான் பார்ப்பதால் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது இருக்கும். பிறந்தகால ஜாதக தசாபுக்தி அமைப்பு யோகமாக இருப்பவர்களுக்கு பருத்தி புடவையாய்க் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.

குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

மகரராசிப் பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் எனபது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்றவர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும்.

பரிகாரங்கள்:

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டிக்கும் சேந்தமங்கலத்திற்கும் நடுவில் உள்ள நைனாமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாளையும் மலையடிவாரத்தில் அவரை சேவித்தபடி அருள்தரும் ஆஞ்சநேயரையும் ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். தென் மாவட்டத்தவர்கள் செந்திலாண்டவனை தரிசிப்பதன் மூலம் எல்லா வளமும் நிறைவும் பெறுவீர்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி ‘ஆயுள் காரகன்’ என்று வர்ணிக்கப்படுபவர். எந்த வேலையையும் யோசித்தே ஏற்றுக்கொள்வீர்கள். வேகத்தைக் காட்டிலும், விவேகம் தான் உங்களுக்கு அதிகம். பொல்லாதவர்களைக் கூட நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் உங்கள் பேச்சிற்கு உண்டு.

பாதி வயதிற்கு மேல் தான் பலவித சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பொதுநலனில் அதிக அக்கறை காட்டும் நீங்கள் மதிப்பையும், மரியாதையையும் இரு கண்களாக நினைப்பீர்கள். யார் எதைச் சொன்னாலும் ஏன், எப்படி என்ற கேள்வி உங்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

வந்த விருந்தினர்களை வரவேற்பால் திணறடிப்பீர்கள். சொந்தம், சுற்றங்களின் பகைக்கும் ஆளாவீர்கள். என்ன நடந்தாலும் சரி அதை ஏற்றுக் கொள்வோம் என்று முடிவெடுத்து விடுவீர்கள். கற்றவர்களுக்கு மத்தியில் உங்கள் பேச்சு எடுபடும். ஆனால் பெற்றவர்களுக்கு மத்தியில் பேசும் பொழுது, போராடித்தான் சொல்லைச் செயலாக்க இயலும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சியால் எப்படிப்பட்ட மாற்றங் கள் ஏற்படும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

விரயங்களை அதிகரிக்க வைக்கும் எட்டாமிட ராகு!
வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இரண்டாமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து பலவித மாற்றங்களை உங்களுக்கு வழங்கப் போகிறார்கள். ராகுவால் எண்ணற்ற விரயங்கள் ஏற்படலாம். எனவே கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கை நடத்துவது நல்லது.

வாக்கு ஸ்தான கேதுவால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான். பின் விளைவைச் சிந்திக்காமல் முதலில் பேசி விட்டு, ‘ஏன் இப்படிப் பேசினோம்?’ என்று பின்னர் வருத்தப்படுவீர்கள். உத்தியோகம், தொழிலில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதுபோன்ற காலங் களில் ராகு–கேதுவிற்கு, முறையாக யோகபலம் பெற்ற நாளில், உங்கள் ராசிக்கு அனுகூலம் தரும் திருக்கோவில்களில், முறைப்படி சர்ப்பசாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.

இந்த ராகுப் பெயர்ச்சியின் விளைவாக ஒருசில காரியங்களை ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். நினைத்த நேரத்தில் நினைத்தபடி செயல்பட முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளின் வழியிலும், உற்றார், உறவினர்களின் வழியிலும் ஒரு சாரார் பாசமாக இருப்பர்.

எதைச் செய்தாலும் இறைவழிபாட்டை மேற்கொண்டு அதன்பிறகு காரியத்தைத் தொடங்கினால் தான் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். சம்பளம் போதுமானதாக இல்லையே என்று ஒருசிலர் கவலைப்படுவர். மனைவி ஒத்துவரவில்லையே என்ற சிலர் கவலைப்படுவர். குழந்தைகளின் குணம் சரியில்லாமல் போகிறதே என்று ஒருசிலர் கவலைப்படுவர். ஆரோக்கியப் பாதிப்பாலும் கவலைப்பட நேரிடலாம். கொடுக்கல்–வாங்கல்களில் சிக்கல் கள் வந்துவிட்டதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். கூட்டாளிகள் விலகி விட்டார்களே என்று ஒரு சிலர் வருத்தப்படலாம். இப்படி ஏதேனும் ஒரு வருத்தத்தை அஷ்டமத்து ராகு வரவழைத்துக் கொடுக்கலாம். இருந்தாலும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தும் சனியோடு அது இணைந்திருப்பதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

திடீர், திடீரென தனலாபம் வந்து சேரும். தெய்வப்பற்று மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் தீங்குகள் விலகிச் செல்லும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தக்க துணையாக வைத்துக் கொள்ளுங்கள். சாதுரியமான பேச்சால் சண்டை சச்சரவைத் தீர்த்துக் கொள்ளுங்கள். அன்பை விதையுங்கள். ஆனந்தப் பயிரை அறுவடை செய்யுங்கள்.

என்ன செய்யும் இந்த இரண்டாமிடத்து கேது?

இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் இப்போது இரண்டாமிடத்திற்கு வருகிறார். 2–ம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான். யாருக்கேனும் வாக்குறுதியளித்திருந்தால் அதை அரும்பாடுபட்டுத் தான் நிறைவேற்ற இயலும். கோபம் அதிகரிக்கும் காலம் இது. எனவே எந்த அளவுக்கு கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. நிறையப் பகை உருவாகலாம். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. விரயங்கள் கூடுதலாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குரலுக்குச் செவிசாய்க்க மறுப்பர். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சிலர் பெரிய சிக்கலுக்கு ஆளாக நேரிடும். எனவே, ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருப்பதே நல்லது.

வீடு கட்டும் முயற்சி பாதியில் நின்றாலும் ஒரு வழியாக முடிவடைந்து விடும். அலைச்சல் கூடும். உறவினர் களுக்காக இவ்வளவு பாடுபட்டும் நம்மை உதாசீனப்படுத்தி விட்டார் களே என்று கூட நினைக்க நேரிடும்.

வாங்கல், கொடுக்கல்களிலும் சில சமயங்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பெருந்தொகை வாங்கும் போதும், கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். எனவே மனக்குழப்பம் கூடும்.

வரவைவிட செலவு இருமடங்காகும். இந்நேரத்தில் வீட்டுத் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்வதே நல்லது. வீடு கட்டும் பணியைத் தொடங்கலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பு சிலருக்கு கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். எனவே பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க, அனுசரிக்கும் குணம் தான் தேவை. வேலைப்பளு கூடும். சொந்த வேலை எதையும் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.

பாதசார அடிப்படையில் ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம் தான். விரயங்கள் கூடுதலாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாகவும் ஒரு சிலர் கடன் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் குழப்பங்களும், மனஅமைதிக் குறைவும் ஏற்படலாம். அருகில் உள்ளவர்களை அனுசரித்துக் கொள்ள இயலும். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். துர்க்கை வழிபாடு துயரம் போக்கும்.

ராகு சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): ஓரளவு நல்ல பலன்கள் வந்து சேரும். பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிரச்சினைகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை உண்டு. தொழிலில் இருந்த தொய்வு நிலை மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் பிறருக்கு நன்மையே செய்தாலும் அது தீமையாகவே தெரியும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள், மின் சாதனங்களை வாங்க உகந்த நேரமிது. அடகு வைத்து மீட்ட நகைகளை மீண்டும் அடகு வைக்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும்.

பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற உடன் பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். அவர்களது இல்லத்தில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சி வெற்றி பெறும். சீமந்தம், மணி விழா நடைபெற வாய்ப்பு கை கூடிவரும். ஆன் மிகப் பயணங்கள் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் போது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): அதிக விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். மருத்துவச் செலவுகள் கூடலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறதே என்று அங்கலாய்ப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. வீடு மாற்றங்கள் ஏற்படலாம். சுயஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு, பரிகாரங்கள், குலதெய்வ வழிபாடுகளைச் செய்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): ஓரளவு நற் பலன்கள் நடைபெறும். இடம், பூமியால் லாபம் உண்டு. வீடு கட்டும் முயற்சி அல்லது வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பயணங்களால் பலன் உண்டு. சகோதர உறவில் இருந்த விரிசல் மறையும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

எட்டாமிடத்து ராகுவால் இனிய பலன்கள் கிடைக்கவும், இரண்டாமிடத்து கேதுவால் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறவும், சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. வளர்ச்சியும் கூடும்.