search icon
என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் ‘கா’ படத்தின் முன்னோட்டம்.
    மைனா, சாட்டை போன்ற சமூக அக்கரையுள்ள திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தற்போது ‘கா’ என்ற திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், அக்ஷிதா, நவீன், மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார். கத்தால கண்ணாலே பாடல் புகழ் சுந்தர் சி பாபு இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, எலிசா படத்தொகுப்பை செய்துள்ளார். 

    ஆண்ட்ரியா
    ஆண்ட்ரியா

    மேலும் சேது அவர்களின் சிறப்பு சப்தமும், தரணி அவர்களின் மிரட்டல் ஒலி கலவையும் இப்படத்தின் சிறப்பம்சமாக பேசப்படும். படம் பார்ப்பவர்களை ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும். படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் தங்களது ஏழாவது படைப்பாக ஸ்ரீகாந்த், தினேஷ் மாஸ்டர் நடிப்பில் "சம்பவம்" என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
    எஸ்.எழில் இயக்கத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் யுத்த சத்தம் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் எஸ்.எழில், முதல் முறையாக தன் பாணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படத்தை, இயக்கி வருகிறார். யுத்த சத்தம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.  டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். 

    சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். டி.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து "யுத்த சத்தம்" படத்தை தயாரித்திருக்கின்றனர். இப்படம் மார்ச் 18ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. 
    மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் முன்னோட்டம்.
    நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம்  ‘குதிரைவால்’. கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.

    உளவியல், ஆள்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி உள்ளனர்.
    கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படத்தை கார்த்திக் சவுத்ரி என்பவர் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.
    எம்.ஐ.கே. புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் விமல், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி வரும் குலசாமி படத்தின் முன்னோட்டம்.
    எம்.ஐ.கே. புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில், விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், விஜய்சேதுபதி வசனம் எழுதும் படத்திற்கு 'குலசாமி' என்று பெயரிட்டுள்ளார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் 'குலசாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

    குலசாமி

    வைட் ஆங்கில் ரவிசங்கரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும், பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
    முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன் தாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன் தாஸ்'. 'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகி வரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

    இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்தது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    தியான் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படைப்பாளன் படத்தின் முன்னோட்டம்.
    தியான் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் படைப்பாளன். சினிமாவில் நடக்கும் கதைத் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில இயக்குனர் தியான் பிரபு, காக்கா முட்டை ரமேஷ் விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நட்புக்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்குனர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - வேல்முருகன், இசை - பாலமுரளி, பாடல்கள் - சினேகன், கு.கார்த்திக், எடிட்டிங் - எஸ்.பி.அகமது, தயாரிப்பு - நட்சத்திரம் செபஸ்தியான், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தியான் பிரபு.

    படம் பற்றி இயக்குனர் தியான் பிரபு கூறியதாவது...

    இது முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை.
    முன்பெல்லாம் பட தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்திலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். 

    அவர்கள் பெரும்பாலும் கதை கேட்பது கிடையாது. முழு ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்துவிட்டு சொல்கிறோம் என்று கதையை வாங்கி கிடப்பில் போட்டு பின்பு அவர்களை அழைக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு பிரபல இயக்குனரை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள். அந்த உதவி இயக்குனரின் உழைப்பு வலிகளுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை. 

    அப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போன ஒரு உதவி இயக்குனரின் சொந்த கதை தான் இந்தப் படம். சினிமாவை பொருத்தவரை ஒரு உதவி இயக்குனர் வளர்வதற்கு மிகுந்த சிரமங்களை அவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை அனைத்திலும் பெரும் சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். சினிமா இயக்குனர் என்றால் தவறான கருத்து மக்களிடையே பரவி இருக்கிறது. ஆனால் தன் படைப்பின் மூலம் நல்ல நல்ல கருத்துக்களையும் காமெடிகளையும் சொல்லி மக்களை மகிழ வைப்பவன் ஒரு படைப்பாளன் தான்.

    அப்படியான வலிமிகுந்த உதவி இயக்குனரின் வலிகளையும், வழிகளையும் இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும் இந்த கதை பல உண்மை சம்பவங்களை உங்களுக்கு நினைவூட்டும்.

    இன்று வரை சினிமாவில் வெவ்வேறு விதமான கதை திருட்டுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தும் மாற வேண்டும் என்பதே எங்களது ஆசை என்றார் இயக்குனர் தியான் பிரபு.
    ஸ்ரீ சிட்டேஷ்வரா என்டர்பிரைசஸ் - எம்.டி.பி நாகராஜ் இணைந்து மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கப்ஜா படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ சிட்டேஷ்வரா என்டர்பிரைசஸ் - எம்.டி.பி நாகராஜ் இணைந்து மிகப்பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் படம் கப்ஜா. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நட்சத்திரம் சுதீப் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இருவேறு நிலையில் எதிர்பார்ப்புள்ள கதாநாயகர்கள் இருவரும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். ஒரு நாயகியாக ஸ்ரேயா ஷரண் நடிக்கிறார்.

    படத்தை ஆர்.சந்துரு இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கிய பதினொரு படங்களில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள் அல்லது பேசப்பட்டவை. 'கப்ஜா' இவருக்கு 12 வது படம். இயக்குநர் சந்துரு இரண்டு மாநில விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

    ஸ்ரேயா

    கேஜிஎஃப் படம் அதன் பிரமாண்டத்தால் பேசப்பட்டது. அதில் பணியாற்றிய பலரும் இதிலும் பங்கேற்றுள்ளனர். கேஜிஎஃப் படத்தை போல் இருமடங்கு பெரிதாக இப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா பெங்களூரில் மோகன் பி கரே ஸ்டுடியோவில் நடைபெற்றது.

    கேஜிஎஃப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் தான் 'கப்ஜா' படத்துக்கும் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏ.ஜே.ஷெட்டி, கலை இயக்கம் சிவக்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, மராத்தி, இந்தி என 7 மொழிகளில் இப்படம் உருவாகிறது. நிழலுலக அரசனாக உபேந்திரா நடிக்க ராணியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் முன்னோட்டம்.
    சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். 

    பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். 
    ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கி இருக்கும் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் முன்னோட்டம்.
    ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் திரைப்படம் தீயவர் குலைகள் நடுங்க. இது ஒரு கிரைம் - திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான கிரைம் -திரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. 

    எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அர்ஜுன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார். ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக “தீயவர் குலைகள் நடுங்க” திரைப்படம் உருவாகியுள்ளது. 

    இப்படத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜிகணேசன், ஜி.கே.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
    உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் மாமன்னன் படத்தின் முன்னோட்டம்.
    பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. ‘மாமன்னன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15வது படமாகும்.

    இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    கீர்த்தி சுரேஷ் - உதயநிதி
    கீர்த்தி சுரேஷ் - உதயநிதி

    ‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக மாமன்னன் படத்தை இயக்குகிறார். பெரும் நட்சத்திரங்கள் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.
    எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் இயல்வது கரவேல் படத்தின் முன்னோட்டம்.
    ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், மீண்டும் முழுக்க முழுக்க கல்லூரியை கதைகளமாக கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு ‘இயல்வது கரவேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அறிமுக இயக்குனர், எஸ்.எல்.எஸ்.ஹென்றி எழுதி இயக்கும் இப்படத்தை எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் அறிமுகமான யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு.பழனியப்பன், ஆடுகளம் நரேன் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    படக்குழுவினர்

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைகிறார். ஒளிப்பதிவாளராக ‘பரியேரும் பெருமாள்’ ஸ்ரீதர், கலை இயக்குனராக மாயப்பாண்டி, படத்தொகுப்பாளராக தியாகு ஆகியோர் இப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வடசென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
    ×