search icon
என் மலர்tooltip icon

    கார்

    • இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
    • பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் EV கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், இந்த எலெக்ட்ரிக் கார் 2025 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அல்ட்ரோஸ் EV மாடலின் இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட அல்ட்ரோஸ் EV மாடல் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நெக்சான், டியாகோ, டிகோர் மற்றும் பன்ச் உள்ளிட்ட மாடல்களால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார்களின் ஐ.சி. என்ஜின் வேரியன்ட் அதிக பிரபலமாக இருந்ததே இவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

    டிசைன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில், அல்ட்ரோஸ் மாடல் பெற்றிருக்கும் மிக சமீபத்திய அப்டேட்கள் அனைத்தும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரிலும் பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்களே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு இந்திய சந்தையில் வேறு எந்த மாடலும் போட்டிக்கு இல்லை.

    எதிர்காலத்தில் மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் விலை அடிப்படையில் டாடா அல்ட்ரோஸ் EV மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

    • டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
    • டாடா பன்ச் EV முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் எலெக்ட்ரிக் கார் விவரங்களை கடந்த வாரம் அறிவித்தது. தற்போது இந்த கார் ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பன்ச் எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படும் முதல் கார் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.


     

    இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இந்தியாவில் புதிய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பன்ச்.EV மற்றும் பன்ச்.EV லாங் ரேன்ஜ் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இதன் லாங் ரேன்ஜ் வெர்ஷனுடன் 7.2 கிலோவாட் ஃபாஸ்ட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேன்ஜ் வெர்ஷன்களில் முறையே 25 கிலோவாட் ஹவர் மற்றும் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. 

    • தேவையான சக்கரங்களின் இணைப்பை மட்டும் திருப்புவது என இந்த காரில் அதிக முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
    • முன் சக்கரங்கள் உள்நோக்கிச் சுழலும் மற்றும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாகச் சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்கின்றன.

    ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் புதிய படைப்பை கொண்டு வந்துள்ளது. இது டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உட்பட மற்ற மின்சார வாகனங்களில் இருந்து வேறுபடுத்தும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

    இந்த புதிய படைப்புக்கு ஹூண்டாயின் இ-கார்னர் அமைப்பு காரணமாகும். இ-கார்னர் அமைப்பு என்பது ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தின் சோதனை கண்டுபிடிப்பு ஆகும். இது முதலில் அதன் காட்சியை உருவாக்கி காட்டியது. மேலும், சக்கர கோணங்களை மாற்றுவதன் மூலம் மற்றும் குறுகிய தெருவில் இருந்து வெளியேற 180-டிகிரி திருப்புதல் செய்வதன் மூலம் இறுக்கமான இடங்களில் வாகன நிறுத்தம் போன்ற திறன்களை கொண்டது.

    பக்கவாட்டாக ஓட்டுவது மற்றும் 360 டிகிரி வட்டத்தில் திரும்புவது, தேவையான சக்கரங்களின் இணைப்பை மட்டும் திருப்புவது என இந்த காரில் அதிக முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.

    இந்த வாகனம் "ஜீரோ டர்ன்" திருப்பு முறையில் செயல்படுகிறது. இதில் முன் சக்கரங்கள் உள்நோக்கிச் சுழலும் மற்றும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாகச் சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்கின்றன.

    இந்த செயல்பாடு, குறைந்த இயக்கத்துடன் ஒரு சிறிய இடத்தில் வாகனத்தின் திசையை எளிதாக மாற்றுவதற்கு, பார்க்கிங் பிரச்சனைகளுக்கு தீர்வாக ஓட்டுநருக்கு உதவுகிறது.

    நண்டின் நடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    • எம்.ஜி. ஆஸ்டர் மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய ஆஸ்டர் மாடலில் ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் உள்ளன.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடல் - ஆஸ்டர்-ஐ அப்டேட் செய்துள்ளது. புதிய 2024 எம்.ஜி. ஆஸ்டர் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த கார் ஸ்ப்ரின்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ மற்றும் சேவி ப்ரோ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய எம்.ஜி. ஆஸ்டர் மாடலில் ஐ-ஸ்மார்ட் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 80-க்கும் அதிக கனெக்டெட் அம்சங்கள், ஜியோ வழங்கும் குரல் அங்கீகார வசதி (voice recognition system), ஆன்டி தெஃப்ட் வசதி கொண்ட டிஜிட்டல் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் IRVM, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி, பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, லெவல் 2 ADAS போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆஸ்டர் மாடலில் மெக்கானிக்கல் ரீதியில் எந்த மாற்றும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த காரிலும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், CVT மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    • சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.
    • பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம்.

    சீனாவின் பி.ஒய்.டி, முதல் முறையாக உலகின் சிறந்த மின்சார-வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.

    சீனாவை சார்ந்த பி.ஒய்.டி நிறுவனம் முதல் முறையாக உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்கின் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம். 

    கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா குழுமம் 4,84,000 வாகனங்களை வழங்கியுள்ளது, ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள 473,000 வாகனங்களை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் பி.ஒய்.டி அதே நேரத்தில் 5,26,000 பேட்டரி வாகன விற்பனையை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்க கொண்டது.

    டெஸ்லா 1.8 மில்லியன் ஆட்டோமொபைல்களை விற்றது. பி.ஒய்.டி 1.58 மில்லியன் மின்சார வாகனங்களை வழங்கியது. இந்த சாதனையானது, மின்சார வாகனத் துறையை மேம்படுத்த உதவுவதில் நிறுவனம் கொண்ட முயற்சி. பி.ஒய்.டி நிறுவனம், நுகர்வோரை சீனாவின் குறைந்த விலை மின்சார வாகனங்களை வாங்க தூண்டியது. 

    நிருபர்களின் கூற்றுப்படி, பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம். அவை மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த கூறுகளில் ஒன்று. பி.ஒய்.டி-ன் போட்டியாளர்கள் பலர் மூன்றாம் தரப்பு பேட்டரி தயாரிப்பாளர்களை சார்ந்துள்ளனர்.

    ஆனால் பி.ஒய்.டி நிறுவனம் தானே பேட்டரி தயாரிப்பதால் இந்த சாதனை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

    • ஜனவரி மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • கார்களுக்கு ரூ. 1.55 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் பிரான்டு நெக்சா இந்திய சந்தையில் ஜிம்னி, ஃபிரான்க்ஸ், பலேனோ, கிரான்ட் விட்டாரா, சியாஸ் மற்றும் இக்னிஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், நெக்சா பிரான்டு கார்களுக்கு ஜனவரி மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

     


    அதன்படி மாருதி சுசுகி ஜிம்னி மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி ரூ. 14 லட்சத்து 89 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மாருதி சுசுகி இக்னிஸ் மாடலுக்கு ரூ. 62 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இக்னிஸ் விலை ரூ. 6 லட்சத்து 38 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.

     


    மாருதி சுசுகி சியாஸ் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பிரீமியம் ஹேச்பேக் மாடலான பலேனோவுக்கு ரூ. 47 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ. 6.61 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 83 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஃபிரான்க்ஸ் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 7 லட்சத்து 47 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 98 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி கார் மாடல்களுக்கான சலுகைகள் ஸ்டாக் இருப்பு மற்றும் மாடல், வேரியன்டிற்கு ஏற்ப வேறுப்படும்.

    • 2024 மாடல்களில் புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
    • புதிய கார்களின் என்ஜின்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களை அப்டேட் செய்துள்ளது. அந்த வகையில் 2024 குவிட், டிரைபர் மற்றும் கைகர் மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. 2024 மாடல் புதிய நிறங்கள் மற்றும் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர புதிய கார்களின் என்ஜின்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன்படி 2024 ரெனால்ட் குவிட் மாடல் மூன்று டூயல் டோன் நிறங்கள்- ரெட், சில்வர் மற்றும் புளூ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 95 ஆயிரம் ஆகும்.

     


    2024 கைகர் மாடலில் ஆட்டோ-ஃபோல்டு ORVMகள், ஆட்டோ டிம்மிங் IRVMகள், எல்.இ.டி. கேபின் லேம்ப்கள், ரியர் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரத்து 990 என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும்.

     


    ரெனால்ட் டிரைபர் மாடல் முற்றிலும் புதிய ஸ்டெல்த் பிளாக் நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இதில் 7 இன்ச் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ரியர் சீட் பெல்ட் வார்னிங் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரத்து 500 என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 74 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியுள்ளது.
    • ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது. டாடா பன்ச் காரின் 3 லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியுள்ளது.

    2021 அக்டோபர் மாதம் டாடா பன்ச் விற்பனை துவங்கிய நிலையில், பத்தே மாதங்களில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பிறகு 2022 ஜனவரி மாதம் விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தியது. தற்போது இந்த கார் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.




    நெக்சானை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில் டாடா பன்ச் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. முதலில் இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு இந்த காரின் CNG வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் CNG வெர்ஷனில் மேனுவல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கார் மொத்தத்தில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • ஹோண்டா கார் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி.
    • சலுகைகள் ஒவ்வொரு மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    இந்திய சந்தையில் ஹோண்டா கார் விற்பனையாளர்கள் அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். இவை ரொக்க பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் ஹோண்டா சிட்டி e:HEV மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது முழுமையான தள்ளுபடி சலுகை ஆகும். இதுதவிர இந்த மாடலுக்கு வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. சிட்டி e:HEV ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடல் ஆகும். இதில் 1498சிசி, 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஹோண்டா சிட்டி மாடலை வாங்குவோர் ரூ. 88 ஆயிரத்து 600 வரை சேமிக்க முடியும். இதில் ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் வரை லாயல்டி போனஸ், ரூ. 6 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 25 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர ஹோண்டா சிட்டி VX மற்றும் ZX மாடல்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 600 மதிப்பிலான நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.

     


    ஜனவரி மாதம் ஹோண்டா அமேஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் பொருந்தும். இந்த காரின் S வேரியண்ட்-க்கு ரூ. 45 ஆயிரம் வரை ரொக்க தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் வரை லாயல்டி பலன்கள், ரூ. 23 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஹோண்டா அமேஸ் E மற்றும் VX வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 52 ஆயிரம் மற்றும் ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் மற்றும் பலன்கள் ஸ்டாக் இருப்பு மற்றும் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுப்படும்.

    • கடந்த ஆண்டு மட்டும் மாருதி சுசுகி 17 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.
    • மாருதி எஸ்.யு.வி. மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி பிரெஸ்ஸா இருந்து வருகிறது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. என்பதை கடந்து 2023 ஆண்டு நாட்டில் அதிகம் விற்பனையான எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 17.7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மட்டும் 1.70 லட்சம் யூனிட்கள் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     


    இதன் விலை ரூ. 8 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    • சியோமி எலெக்ட்ரிக் கார் போர்ஷே டேகேன் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    • இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும்.

    சீனாவை சேர்ந்த நுகர்வோர் எலெக்ட்ரிக் நிறுவனம் சியோமி எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குவது குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வரிசையில், சியோமி தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. SU7 என அழைக்கப்படும் சியோமி எலெக்ட்ரிக் கார் போர்ஷே டேகேன் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் சியோமி SU7 மாடல் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் உலகளவில் டாப் 5 கார் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.

     


    புதிய சியோமி SU7 மாடலின் உற்பத்தி சீனாவில் உள்ள சியோமி ஆலையில் சோதனை அடிப்படையில் துவங்கிவிட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் 400 வோல்ட் மற்றும் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று புதிய SU7 மாடல் ஒற்றை மற்றும் இரட்டை என இருவித டிரைவ் டிரெயின்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

    சியோமி SU7 மாடலில் அந்நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஐ.சி. என்ஜின்களில் சக்திவாய்ந்த ஒன்றாக விளங்கும் V சீரிஸ் பெயர் கொண்டிருக்கின்றன. அதன்படி V6 மாடலில் 299 ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 400 வோல்ட் ஆர்கிடெக்சரில் பயன்படுத்தப்படவுள்ளது.

     


    V6s மோட்டார் 800 வோல்ட் ஆர்கிடெக்சரில் இயங்குகிறது. இது 75 ஹெச்.பி. பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவை இரண்டும் அதிகபட்சம் 21,000 rpm கொண்டிருக்கின்றன.

    டூயல் மோட்டார் கொண்ட SU7 மாடலில் V6 மற்றும் V6s இணைந்து வழங்கப்படுகின்றன. இவை 673 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்படும் ஹைப்பர் என்ஜின் 679 ஹெச்.பி. பவர், 634 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதில் வழங்கப்படும் 101 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி சியோமியின் ரேபிட் சார்ஜிங் திறன் கொண்டு 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். 

    • 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.
    • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     


    மஹிந்திரா XUV300 மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, 1-டச் லேன் சேன்ஜ் இன்டிகேட்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில் 6 ஏர்பேக் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இரண்டு ஏர்பேக் வழக்கமாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டர்போ பெட்ரோல் யூனிட் 129 ஹெச்.பி. பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ×