search icon
என் மலர்tooltip icon

    பைக்

    • ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.
    • Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் மாதங்களில் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அதிக திறன் கொண்ட புதிய ஹீரோ Xoom மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாடல் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் அட்வென்ச்சர் மாடலின் இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.

     


    அந்த வகையில், புதிய ஹீரோ Xoom மாடலில் கீலெஸ் இக்னிஷன், ரிமோட் மூலம் சீட்-ஐ திறக்கும் வசதி, ஹீரோ காப்புரிமை பெற்ற i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 156சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 14 ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர ஹீரோ நிறுவனம் Xoom 125R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும். இதுதவிர எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம்.

    ஹீரோ Xoom 125R மாடலில் ஏர் கூல்டு, 124.6சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 9.5 ஹெச்.பி. பவர், 10.14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க், சுசுகி அவெனிஸ் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் தோற்றம் கொண்டிருக்கிறது.
    • ஹிமாலயன் 411 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

    ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய 350 சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த மோட்டார்சைக்கிள்CB350 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என்றும் இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஹோண்டா நிறுவன மோட்டார்சைக்கிளின் காப்புரிமை புகைப்படம் லீக் ஆகி இருக்கிறது. அதில் புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் தோற்றம் கொண்டிருக்கிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் ஹோண்டா CB350 RS மாடலை விட ரக்கட் தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்போதைய புகைப்படங்களின் படி புதிய ஹோண்டா பைக் பெட்ரோல் டேன்க்-ஐ சுற்றி மெட்டல் ஃபிரேம்கள் உள்ளன.

     


    புதிய ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை உருவாக்க ஹோண்டா நிறுவனம் அதே சேசிஸ் மற்றும் என்ஜினை பயன்படுத்தும் என தெரிகிறது. எனினும், இந்த என்ஜின் பைக்கிற்கு ஏற்றவகையில் டியூனிங் செய்யப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் பாகங்கள் பெரும்பாலும் CB350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    தற்போதைக்கு இந்த மோட்டார்சைக்கிள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். விலையை பொருத்தவரை தற்போது விற்பனை செய்யப்படும் CB350 சீரிசை விட ஸ்கிராம்ப்ளர் மாடல் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

    • மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X ஸ்கூட்டரின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்ஷனில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா S1 X வெர்ஷனின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 30 நிமிடங்கள் வரை ஆகும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

     


    அதிக திறன் கொண்ட பேட்டரி காரணமாக இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு S1 X-ஐ விட 4 கிலோ அதிக எடை கொண்டிருக்கிறது. இவை தவிர மற்ற அம்சங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    புதிய வேரியண்ட் உடன் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒலா S1 சீரிசின் ஒட்டுமொத்த வேரியண்ட்களுக்கும் வாடிக்கையாளர்கள் வாரண்டியை நீட்டிக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் செலுத்தி 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.

    ஒலா S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் ரெட் வெலோசிட்டி. மிட்நைட், வோக், ஸ்டெல்லார், ஃபன்க், போர்சிலைன் வைட் மற்றும் லிக்விட் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    • எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
    • 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அதிகம் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் ஃபிளெக்ஸ் ஃபியூவல் வெர்ஷனை காட்சிப்படுத்தி இருக்கிறது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    ஃபிளெக்ஸ் ஃபியூவல் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருள் மூலம் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படலாம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    தற்போது இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான பெட்ரோல் பன்க்-களில் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு வாக்கில் இதனை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

     


    மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில், ஃபிளெக்ஸ் ஃபியூவல் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் கிரீன் மற்றும் ரெட் நிற பெயின்டிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறங்கள் பெட்ரோல் டேன்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கிளாசிக் 350 ஃபிளெக்ஸ் ஃபியூவல் மாடலிலும் 350சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
    • 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும்.

    உலகம் முழுக்க எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது.

    2030 நிதியாண்டிற்குள் கிட்டத்தட்ட எட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் எந்தெந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது.

     


    2030 ஆண்டு வாக்கில் சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்களில் 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும் என்றும் 75 சதவீதம் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்தே சுசுகியின் முதற்கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

    • காப்புரிமை கோரி ஹோண்டா விண்ணப்பித்துள்ளது.
    • இந்த பைக்கிலும் 350சிசி என்ஜின் வழங்கப்படலாம்.

    ஹோண்டா நிறுவனம் தனது CB350 மோட்டார்சைக்கிளை தழுவி ரெட்ரோ பைக் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பைக் அட்வென்ச்சர் மாடல் என்றும் இதற்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தோற்றத்தில் இந்த மாடல் கிட்டத்தட்ட ராயல் என்பீல்டு ஹிமாலயன் 411 போன்றே காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய ஹோண்டா பைக்கின் ஸ்டைலிங் ஹிமாலயன் மாடலின் தோற்றத்தை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இந்த பைக்கிலும் CB350 மாடலில் உள்ளதை போன்றே 350சிசி என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதில் வயர் ஸ்போக் கொண்ட ரிம்கள், டியூப் டயர்கள் வழங்கப்படலாம்.

    புதிய பைக் தற்போது அதன் காப்புரிமை நிலையிலேயே இருப்பதால், வெளியீட்டுக்கு இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் இந்த பைக் ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411 மாடலுக்கு போட்டியாக அமையும். 

    • விறப்னையை அதிகப்படுத்த பஜாஜ் திட்டம்.
    • 373சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரிபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் செட்டாக் EV-யின் புது வேரியன்ட் மற்றும் பல்சர் NS400 மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் சி.என்.ஜி. திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிரிவில் குறிப்பிடத்தக்க மாடலாக செட்டாக் இருந்து வருகிறது. மார்ச் மாதத்திற்குள் மாதாந்திர விறப்னையை 15 ஆயிரம் யூனிட்களாக அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் செட்டாக் EV ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல் மூலம் வளர்ந்து வரும் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் பஜாஜ் நிறுவனம் குறிப்பிடத்தக்க நிலையை அடைய உதவும் என தெரிகிறது.

    புதிய செட்டாக் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வேரியன்ட்-ஐ விட குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வரிசையில், பல்சர் NS400 மாடல் பல்சர் சீரிசில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருந்து வருகிறது. இதில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த என்ஜின் 40 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பல்சர் NS400 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். டியூக் 390 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • புல்லட் 350 விலை ரூ. 6 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
    • இதில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், என்ஜின் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நிறங்கள் மிலிட்டரி சில்வர் பிளாக் மற்றும் மிலிட்டர் சில்வர் ரெட் ஆகும். இதன் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது புல்லட் 350 மாடலின் ஸ்டான்டர்டு நிறங்களை விட ரூ. 6 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    புதிய நிறங்களில் கிடைக்கும் புல்லட் மாடலில் சில்வர் நிற பின்-ஸ்டிரைப்கள் கைகளால் பெயின்ட் செய்யப்படுகின்றன. புதிய நிறங்கள் வடிவில் புல்லட் 350 மாடல் காஸ்மடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது புல்லட் 350 தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

     


    நிறங்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல், ஹார்டுவேர் மற்றும் இதர அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புல்லட் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் உள்ளது. இந்த மாடலின் முன்புறம் 19 இன்ச், பின்புறம் 18 இன்ச் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நிறங்கள் சேர்க்கும் பட்சத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல்- மிலிட்டரி ரெட், மிலிட்டரி பிளாக், ஸ்டான்டர்டு பிளாக், ஸ்டான்டர்டு மரூன் மற்றும் பிளாக் கோல்டு என ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய புல்லட் 350 மாடல் ஜாவா 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இ-லூனா ஸ்கூட்டருக்கான டீசர் வெளியானது.
    • இ லூனா முன்பதிவு துவங்கியுள்ளது.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த மொபெட் மாடல் லூனா. இதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்த கைனடிக் கிரீன் நிறுவனம் இந்திய சந்தையில் லூனா மாடலை மீண்டும் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    மேலும் புதிய இ-லூனா ஸ்கூட்டருக்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. டீசர் மட்டுமின்றி இ லூனா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 500 ஆகும். வெளியீடு பிப்ரவரி மாத வாக்கில் நடைபெறும் என தெரிகிறது.

     


    இ லூனா மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை தழுவியே இருக்கும். இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ஸ்ப்லிட் ரக சீட் வழங்கப்படுகிறது. புதிய இ லூனா மாடலில் எல்.சி.டி. கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

    இதில் வழங்கப்படும் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    • ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாகியுள்ளது.
    • மேவரிக் 440 மாடல் ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மேவரிக் 440 மோட்டார்சைக்கிள் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. ஹீரோ வொர்ல்டு 2024 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மேவரிக் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் உடனான கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாகியுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹீரோ மேவரிக் 440 மாடல் ஐந்துவிதமான நிறங்கள் மற்றும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் பேஸ் வெர்ஷன் ஸ்போக் வீல்கள், ஆர்க்டிக் வைட் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. மிட் வேரியன்ட் அலாய் வீல்கள், செல்ஸ்டியல் புளூ மற்றும் ஃபியர்லெஸ் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. டாப் என்ட் மாடல் மெஷின்டு அலாய், ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

     


    புதிய மேவரிக் 440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் செட்டப், H வடிவம் கொண்ட டி.ஆர்.எல்., டியுபுலர் ஹேண்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால், மெசேஜ் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

    இந்த பைக்கில் யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர்ட் கிளட்ச் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 440சிசி, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஹார்லி டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 ஹெச்.பி. பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு மற்றும் வெளியீடு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. வினியோகம் ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    • எக்ஸ்டிரீம் 200 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய எக்ஸ்டிரீம் 125R மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ வொர்ல்டு 2024 நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 95 ஆயிரம் என்றும் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ. 99 ஆயிரத்து 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய எக்ஸ்டிரீம் 125R மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் எக்ஸ்டிரீம் 200 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மற்றும் பின்புறம் ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சில்வர், பிளாக் மற்றும் ரெட் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

     


    இதில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.5 ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடலில் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிஸ்க் மற்றும் டிரம் என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், எல்.சி.டி. ஸ்கிரீன், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய சந்தையில் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடல் டி.வி.எஸ். ரைடர் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

    • புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தியது.
    • புது அப்டேட் மூலம் நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தொடர்ச்சியாக புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஒலா எலெக்ட்ரிக் தனது வாகனங்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஓவர்-தி-ஏர் (ஓ.டி.ஏ.) முறையில் மூவ் ஒ.எஸ். 4 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இது வாகனங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை அடியோடு மாற்றும் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    புதிய மூவ் ஒ.எஸ். 4 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஒலா S1 ஜென் 1, மேம்பட்ட S1 ப்ரோ மற்றும் S1 ஏர் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலா S1 X பிளஸ் மாடல்களுக்கு வரும் மாதங்களில் இந்த அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த அப்டேட் மூலம் நேவிகேஷன் வசதி இதற்கு முன்பு இருந்ததை விட அதிவேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஒ.எஸ்.-இன் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், இகோ மோடில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இவைதவிர புதிய அப்டேட் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் உள்ள "கேர்" மோட் பயனர்களுக்கு காற்று மாசு அளவு குறித்த தகவல்கள் மற்றும் சேமிப்பு குறித்த விவரங்களை வழங்குகிறது.

    ×