search icon
என் மலர்tooltip icon

    பைக்

    • புதிய மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
    • இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நோட்டிபிகேஷன் அலர்ட் வசதி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்பட்ட பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடலில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எல்.சி.டி., ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லைட், டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் N150 மற்றும் N160 மாடல்களில் வழங்கப்பட்ட டிஜிட்டல் டேஷ்போர்டு புதிய NS மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் வசதியும் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய பல்சர் NS160 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR160 4V மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பல்சர் NS200 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது.
    • முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் எத்தனை யூனிட்கள் விற்பனையாகின?

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் எத்தனை யூனிட்கள் வரை விற்பனையாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஜனவரி 2024 மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ மோட்டோகார்ப்-இன் ஸ்பிலெண்டர் மாடல் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஹோண்டா ஷைன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    2024 ஆண்டின் ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனையான டாப் 10 மோட்டார்சைக்கிள் மாடல்கள் எவை என்ற பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    ஜனவரி 2024 டாப் 10 பைக்குகள்:

    ஹீரோ ஸ்பிலெண்டர்: 2 லட்சத்து 55 ஆயிரத்து 122

    ஹோண்டா ஷைன்: 1 லட்சத்து 45 ஆயிரத்து 252

    பஜாஜ் பல்சர்: 1 லட்சத்து 28 ஆயிரத்து 883

    ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ்: 78 ஆயிரத்து 767

    டி.வி.எஸ். ரைடர்: 43 ஆயிரத்து 331

    பஜாஜ் பிளாட்டினா: 33 ஆயிரத்து 013

    டி.வி.எஸ். அபாச்சி: 31 ஆயிரத்து 222

    ஹீரோ பேஷன்: 30 ஆயிரத்து 042

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350: 28 ஆயிரத்து 013

    ஹோண்டா யுனிகான்: 18 ஆயிரத்து 506

    • இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட Z900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z900 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 9 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன.

    2024 கவாசகி Z900 மாடல்- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் கிராஃபீன் ஸ்டீல் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் சீட்கள், அதிரடியான பாடி வொர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புதிய கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. இன்லைன், 4 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 123.6 ஹெச்.பி. பவர், 98.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் இதன் முன்புறம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது.

    பிரேக்கிங்கிற்கு 300mm இரட்டை முன்புற டிஸ்க்குகள், பின்புறம் 250mm டிஸ்க்குகள் உள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் 2024 கவாசகி Z900 மாடல் டுகாட்டி மான்ஸ்டர் , பி.எம்.டபிள்யூ. F900R மற்றும் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • கவாசகி Z650 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த மாடலில் 649சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நிறுவனத்தின் 2024 Z650RS மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கவாசகி Z650RS மாடலின் விலை ரூ. 6 லடச்த்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 7 ஆயிரம் அதிகம் ஆகும். புதிய மாடலில் கணிசமான அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில், 2024 Z650RS மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்ரோ டிசைன் மற்றும் அதிநவீன அம்சங்கள் ஒருசேர வழங்கப்பட்டுள்ளது. இதில் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், மெல்லிய ஃபியூவல் டேன்க் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம் கவாசகி Z650 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

     


    இந்த மாடலில் அலாய் வீல்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு டூயல் 272mm டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் 186mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 649சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • விலை குறைப்பு இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது s1 எக்ஸ் பிளஸ், s1 ஏர் மற்றும் s1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்துள்ளது. இவற்றின் விலை அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பின் படி ஒலா s1 எக்ஸ் பிளஸ் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒலா s1 ஏர் விலை ரூ. 15 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. ஒலா s1 ப்ரோ விலை ரூ. 17 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என மாறி இருக்கிறது.

     


    விலை மாற்றம் தவிர இந்த ஸ்கூட்டர்களில் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை. ஒலா s1 ப்ரோ மாடலில் 11 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    • கம்யுனிட்டி நிகழ்வில் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஏத்தர் 450-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் காமெடியன் அனுபவ் சிங் பசி முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அமர்ந்து இருக்கிறார். வரும் மாதங்களில் நடைபெற இருக்கும் கம்யுனிட்டி நிகழ்வில் புதிய ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    முன்னதாக ஏத்தர் எனர்ஜியின் சி.இ.ஒ. ரிஸ்டாவின் சீட் இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் இருப்பதை விட அளவில் பெரியது என்பதை விளக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தவிர்த்து தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டரை வாங்க விரும்புவோரை குறிவைத்து ஏத்தர் ரிஸ்டா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரில் முன்புறம் டிஸ்க் பிரேக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அளவில் பெரிய ஃபுளோர்போர்டு வழங்கப்படுகிறது. டிசைனை பொருத்தவரை இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் 450-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    இவைதவிர ஏத்தர் ரிஸ்டா மாடலில் எல்.இ.டி. லைட்டிங், ரைடிங் மோட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். ஐகியூப் மற்றும் பஜாஜ் செட்டாக் பிரீமியம் மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • இந்த மாடல் ரோட்ஸ்டர் டிசைன் கொண்டிருக்கிறது.
    • டாப் என்ட் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்- மேவ்ரிக் 440 மாடலை அறிமுகம் செய்தது. மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் ஹீரோ மேவ்ரிக் 440 மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் X440 மாடல் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

    எனினும், இந்த மாடல் ரோட்ஸ்டர் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்- ஆர்க்டிக் வைட், ஃபியர்லெஸ் ரெட், செலஸ்டியல் புளூ, ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் நிறங்கள் டாப் என்ட் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

    புதிய ஹீரோ மேவரிக் மாடலில் 440 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்.பி. பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320mm மற்றும் பின்புறம் 240mm டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலின் பேஸ் வேரியன்ட் ஸ்போக் வீல்களையும், மிட் மற்றும் டாப் என்ட் வேரியன்ட்களில் அலாய் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேவரிக் 440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் செட்டப், H வடிவம் கொண்ட டி.ஆர்.எல்., டியுபுலர் ஹேண்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால், மெசேஜ் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன. இந்த பைக்கில் யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    விலையை பொருத்தவரை ஹீரோ மேவ்ரிக் 440 பேஸ் மாடல் ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் என்றும் மிட் வேரியன்ட் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் என்றும் டாப் என்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படலாம்.
    • பல்சர் N150, N160 மாடல்கள் அறிமுகமாகின.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய பல்சர் மாடல் மேம்பட்ட NS200-ஆக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாடலில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மாடல்களை அறிமுகம் செய்தது.

    புதிய N சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டது. அந்த வகையில், புதிய NS200 மாடலிலும் இதே செட்டப் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப்மீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எஸ்.எம்.எஸ். மற்றும் கால் நோட்டிஃபிகேஷன்களை கான்பிக்கிறது.

     


    டீசரில் புதிய பல்சர் NS200 மாடலின் பக்கவாட்டு ப்ரோஃபைல் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. அதன்படி புதிய மாடலில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், மேம்பட்ட பல்சர் NS200 மாடலில் மஸ்குலர் டேன்க், ஸ்ப்லிட் சீட், இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் கொண்டிருக்கும்.

    புதிய மாடலிலும் 199.5சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 24.1 ஹெச்.பி. பவர், 18.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் வழங்கப்படலாம்.

    • விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் இருப்பதும் காரணம்.
    • இதுதான் விற்பனை மந்த நிலைக்கு காரணம்.

    இந்திய சந்தையில் பெனலி மற்றும் கீவே மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆதிஷ்வர் ஆட்டோ எனும் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் லியோன்சினோ 500, 502C மற்றும் கீவே K300 N போன்ற மாடல்களுக்கு அசத்தலான விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    புதிய அறிவிப்பின் படி பெனலி லியோன்சினோ 500 மாடலின் விலை தற்போது ரூ. 61 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக லியோன்சினோ 500 விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது. இதேபோன்று 502C மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் என மாறியுள்ளது. 

     


    கீவே K300 N மாடலின் விலை ரூ. 26 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என மாறி இருக்கிறது. விலை குறைப்பு பிப்ரவரி 8-ம் தேதி அமலுக்கு வந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் பெனலி மற்றும் கீவே மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் இருப்பதும் விலை குறைப்புக்கு காரணமாக இருக்கலாம். பெனலி மற்றும் கீவே பைக்குகளின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்படாததே விற்பனைக்கு மந்த நிலைக்கு காரணம் ஆகும். அந்த வகையில், தற்போதைய விலை குறைப்பு விற்Hனையை அதிகப்டுத்த உதவும் என்று தெரிகிறது.

    • குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    கைனடிக் கிரீன் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய கைனடிக் லூனா விலை ரூ. 69 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய லூனா எலெக்ட்ரிக் மாடலின் தோற்றம் அதன் பழைய மாடலை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த அளவீடுகளும் மெல்லிய தோற்றத்தை வழங்கும் வகையிலும், குறைந்த எடை கொண்டிருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.


     

    லூனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டீல் ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதில் 1.2 கிலோவாட் மோட்டார் மற்றும் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை கைனடிக் லூனா மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லீவர் லாக், கழற்றக்கூடிய பின்புற இருக்கை, யு.எஸ்.பி. சார்ஜிங் பாயின்ட் மற்றும் பேக் லாக் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    கைனடிக் லூனா மாடல்- ரெட், எல்லோ, பிளாக், புளூ மற்றும் கிரீன் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 500 ஆகும். வினியோகம் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்விட்டி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2024 பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டு புதிய மாடல்களும் இரு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. புதிய பல்சர் N150 பேஸ் வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் என்றும் N160 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முந்தைய மாடல்களை போன்றே 2024 வெர்ஷனின் பேஸ் வேரியன்ட்களில் அனலாக் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே பல்சர் N150 மாடலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பல்சர் N160 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருப்பதால், இதன் விலை மட்டும் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    புதிய 2024 பல்சர் N150 மற்றும் பல்சர் N160 டாப் என்ட் மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் முற்றிலும் புதிய டிஜிட்டல் எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்விட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் பல்சர் N150 மாடலின் டாப் என்ட் வெர்ஷனில் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் N150 மற்றும் N160 மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.

    • ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.
    • Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் மாதங்களில் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அதிக திறன் கொண்ட புதிய ஹீரோ Xoom மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாடல் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் அட்வென்ச்சர் மாடலின் இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.

     


    அந்த வகையில், புதிய ஹீரோ Xoom மாடலில் கீலெஸ் இக்னிஷன், ரிமோட் மூலம் சீட்-ஐ திறக்கும் வசதி, ஹீரோ காப்புரிமை பெற்ற i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 156சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 14 ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர ஹீரோ நிறுவனம் Xoom 125R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும். இதுதவிர எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம்.

    ஹீரோ Xoom 125R மாடலில் ஏர் கூல்டு, 124.6சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 9.5 ஹெச்.பி. பவர், 10.14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க், சுசுகி அவெனிஸ் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    ×