search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • புதிய மாடலும் மெல்லிய தோற்றம் கொண்டிருக்கிறது.
    • இதன் டி.ஆர்.எல். டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் NS125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்துள்ளது. புதிய NS125 மாடல், 2024 NS160 மற்றும் NS200 மாடல்களுக்கு வழங்கப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

    வடிவமைப்பில் புதிய பஜாஜ் பல்சர் NS125 மாடல் மெல்லிய தோற்றம், மஸ்குலர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம், ஃபியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல்கள் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. இதன் ஹெட்லைட் மாற்றப்பட்டு இருக்கிறது. 2024 பஜாஜ் பல்சர் NS125 மாடலில் தண்டர் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பல்சர் NS125 மாடலிலும் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.8 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் எஸ்.எம்.எஸ்., கால் நோட்டிபிகேஷன், போன் பேட்டரி லெவல் மற்றும் இதர விவரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இத்துடன் யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் உள்ளது.

    2024 பஜாஜ் பல்சர் NS125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 922, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வெர்ஷனை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் புதிய பல்சர் NS125 பைக் ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மற்றும் டி.வி.எஸ். ரைடர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இந்த காரில் எர்த் எடிஷன் பேட்ஜ்கள் உள்ளன.
    • அலங்கரிக்கப்பட்ட VIN பிளேட் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது தார் சீரிசில் புதிய எடிஷனை அறிமுகம் செய்தது. தார் எர்த் எடிஷன் என அழைக்கப்படும் புதிய வெர்ஷன் தார் டெசர்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

    புதிய மஹிந்திரா தார் எர்த் எடிஷன் மாடல் LX ஹார்டு டாப் 4x4 வடிவில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த காரின் வெளிப்புறம் டெசர்ட் ஃபியூரி சாடின் பெயின்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் எர்த் எடிஷன் பேட்ஜ்கள், மேட் பிளாக் பேட்ஜ்கள் மற்றும் சில்வர் நிற அலாய் வீல்கள் உள்ளன.

     


    இந்த காரின் உள்புறம் டூயல் டோன் பிளாக் மற்றும் லைட் பெய்க் நிற தீம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்ரெஸ்ட்களில் டியூன் டிசைன்கள் உள்ளன. கதவுகளில் தார் பிரான்டிங் மற்றும் க்ரோம் சரவுன்ட்கள் வழங்கப்படுகின்றன. ஸ்பெஷல் எடிஷன் என்ற வகையில், இந்த மாடலில் அலங்கரிக்கப்பட்ட VIN பிளேட் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா தார் எர்த் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் விசேஷ அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

     


    புதிய மஹிந்திரா தார் எர்த் எடிஷன் விலை விவரங்கள்:

    தார் எர்த் எடிஷன் பெட்ரோல் மேனுவல் ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம்

    தார் எர்த் எடிஷன் பெட்ரோல் ஆட்டோமேடிக் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம்

    தார் எர்த் எடிஷன் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 15 ஆயிரம்

    தார் எர்த் எடிஷன் டீசல் ஆட்டோமேடிக் ரூ. 17 லட்சத்து 60 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ரோட்ஸ்டர் 450 பற்றிய விவரங்கள் பலமுறை வெளியாகி உள்ளன.
    • இந்த மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய மாடல்கள் அந்நிறுவனத்தின் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்று ரோட்ஸ்டர் 450. புதிய ரோட்ஸ்டர் 450 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன.

    அந்த வரிசையில் புதிய ரோட்ஸ்டர் 450 டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. புதிய புகைப்படங்களின் படி இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், தடித்த ஃபியூவல் டேன்க், அளவில் சிறிய பக்கவாட்டு பேனல்கள், மெல்லிய டெயில் பகுதி இடம்பெற்றுள்ளது.

     


    இத்துடன் இன்டகிரேட் செய்யப்பட்ட டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.இ.டி. லைட்டிங், டி.எஃப்.டி. பேனல், எல்.சி.டி. கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. பிரேக்கிங்கிற்கு இந்த மாடலின் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படலாம்.

    புதிய ரோட்ஸ்டர் 450 மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 39.47 ஹெச்.பி. பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலின் விலை ரூ. 2.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ரோட்ஸ்டர் 450 மாடல் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் கே.டி.எம். 390 டியூக் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • எஸ் பிரெஸ்ஸோ மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிமீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    புதிய அறிவிப்பின் படி எஸ் பிரெஸ்ஸோ VXi (O) AMT, VXi (O) AMT வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ புதிய விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் ரூ. 6 லட்சம் என மாறியுள்ளது.

    இரண்டு வேரியண்ட்கள் தவிர மற்ற வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 998சிசி, K10C என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 49 கிலோவாட் பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் என்ட்ரி லெவல் விலை ரூ. 4 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் Std, LXi, VXi, மற்றும் VXi (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • காம்பேக்ட் எஸ்.யு.வி., எலெக்ட்ரிக் மாடல்களின் இந்திய வெளியீடு உறுதியானது.
    • ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஸ்கோடா இந்தியா நிறுவனம் உள்நாட்டில் தனது எதிர்கால திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதனப்டி ஸ்கோடாவின் முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.

    முன்னதாக இந்தியா 2.0 எனும் திட்டத்தின் கீழ் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் இரண்டு புதிய வாகனங்களை அறிமுகம் செய்தன. இவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது எதிர்கால திட்டத்தின் கீழ் ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

     

    புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்- க்விக், கிமக், கிளக், கரிக் அல்லது கிரோக் பெயர்களில் ஒன்றுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய ஸ்கோடா எஸ்.யு.வி. மாடலில் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    எஸ்.யு.வி. எப்படி காட்சியளிக்கும் என்பது தொடர்பாக ஸ்கோடா வெளியிட்ட டீசர்களில், புதிய காரின் முன்புறம் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், உயரமான பொனெட் மற்றும் ரிட்ஜ்கள், ரூஃப் ரெயில்கள், சற்றே தடிமனான வீல் ஆர்ச்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஸ்கோடா எஸ்.யு.வி. மாடல் அந்நிறுவனத்தின் குஷக் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும். புதிய எஸ்.யு.வி. டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா XUV300 மற்றும் இதர சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • புதிய மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
    • இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நோட்டிபிகேஷன் அலர்ட் வசதி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்பட்ட பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடலில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எல்.சி.டி., ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லைட், டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் N150 மற்றும் N160 மாடல்களில் வழங்கப்பட்ட டிஜிட்டல் டேஷ்போர்டு புதிய NS மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் வசதியும் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய பல்சர் NS160 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR160 4V மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பல்சர் NS200 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டாடாவின் புனே உற்பத்தி சாலையில், 3000 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்
    • நிறுவனங்கள் போக்குவரத்து வசதி, பேறு கால விடுப்பு உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்கின்றன

    பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை அளித்து வரும் வாகன உற்பத்தித் துறையில் பல தசாப்தங்களாக பல நிறுவனங்களில், உற்பத்தி தளங்களில் ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வந்தனர்.

    ஆனால், சமீப காலங்களாக உற்பத்தி தளங்களில், பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் அங்குள்ள அனைத்து துறையிலும் சிறப்பாக பணியாற்றுவது நல்ல மாறுதலாக பார்க்கப்படுகிறது.

    இதுநாள் வரை இருந்த மிக கடினமான பணிகளுக்கு உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நவீன கருவிகளும், இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதாலும், அவற்றை இயக்கும் முறையில் துல்லியமான கையாளுதல் தேவைப்படுவதாலும் ஆண்களை விட அதிகளவில் பெண்களையே வாகன உற்பத்தி நிறுவனங்கள் பணியமர்த்த விரும்புகின்றன.

    சொகுசு கார், எலக்ட்ரிக் வாகனம், கனரக வாகனம் உள்ளிட்டவையின் உற்பத்தியில் நாட்டின் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவன உற்பத்தி தளத்தில் 6500 பெண்கள், தொழில்நுட்ப வல்லுனர்களாக பணிபுரிகின்றனர்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அதிகமாக விற்பனையாகும் ஹேரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய சொகுசு கார்களை தயாரிக்கும் புனே உற்பத்தி சாலையில், ஆண்களே இல்லாமல் 3000 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தில் 3,500 பெண்கள் உற்பத்தி தளத்தில் பணிபுரிகின்றனர்.

    எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) எனும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் குஜராத் மாநில உற்பத்தி சாலையில், 3000 பணியாளர்களில் 34 சதவீதம் பேர் பெண்கள்.

    வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாலின பேதம் இன்றி அதிகளவில் பெண்களையும் பணிக்கு அமர்த்தி ஊக்குவித்து வருகின்றன.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், இயக்குவதற்கு கடினமான கருவிகள் மற்றும் இயந்திரங்களை கொண்டு செய்த பணிகளை, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களை கொண்டு எளிதாக இயக்குவது சாத்தியமாகி விட்டதால், பெண்களாலும் இப்பணிகளில் சிறப்பாக செயல்பட முடிகிறது. எனவே, அவர்கள் இத்துறையில் சேர நாளுக்கு நாள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    பெண்களை ஈர்க்கும் வகையில் இந்நிறுவனங்கள் போக்குவரத்து வசதி, பேறு கால விடுப்பு, செயற்கை கருத்தரிப்புக்கான மருத்துவ செலவு உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்க தொடங்கி உள்ளன.

    பென்ஸ் (Benz) கார் தயாரிப்பு நிறுவனம், பெண் ஊழியர்களுக்கு அவர்கள் பயில விரும்பும் திறன் மேம்பாட்டு கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.

    நாளுக்கு நாள் வாகனத் தேவைகள் அதிகரிப்பதால், இத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது.
    • முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் எத்தனை யூனிட்கள் விற்பனையாகின?

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் எத்தனை யூனிட்கள் வரை விற்பனையாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஜனவரி 2024 மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ மோட்டோகார்ப்-இன் ஸ்பிலெண்டர் மாடல் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஹோண்டா ஷைன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    2024 ஆண்டின் ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனையான டாப் 10 மோட்டார்சைக்கிள் மாடல்கள் எவை என்ற பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    ஜனவரி 2024 டாப் 10 பைக்குகள்:

    ஹீரோ ஸ்பிலெண்டர்: 2 லட்சத்து 55 ஆயிரத்து 122

    ஹோண்டா ஷைன்: 1 லட்சத்து 45 ஆயிரத்து 252

    பஜாஜ் பல்சர்: 1 லட்சத்து 28 ஆயிரத்து 883

    ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ்: 78 ஆயிரத்து 767

    டி.வி.எஸ். ரைடர்: 43 ஆயிரத்து 331

    பஜாஜ் பிளாட்டினா: 33 ஆயிரத்து 013

    டி.வி.எஸ். அபாச்சி: 31 ஆயிரத்து 222

    ஹீரோ பேஷன்: 30 ஆயிரத்து 042

    ராயல் என்பீல்டு கிளாசிக் 350: 28 ஆயிரத்து 013

    ஹோண்டா யுனிகான்: 18 ஆயிரத்து 506

    • இதில் 60-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் உள்ளன.
    • புதிய ஸ்கார்பியோ கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கார்பியோ N Z8 செலக்ட் வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட இந்த எஸ்யு.வி. மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித பவர்டிரெயின் மற்றும் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த கார் பிரத்யேகமாக மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. Z8 செலக்ட் வேரியண்டில் டபுல் பேரல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    புதிய காரின் கேபின் பகுதியில் காஃபி பிளாக் லெதர் தீம் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, 7 இன்ச் அளவில் கலர் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, பில்ட்-இன் அலெக்சா, சன்ரூஃப், அட்ரினாக்ஸ் கனெக்ட், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் உள்ளன.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 செலக்ட் மாடலில்- 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 200 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 172 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஸ்கார்பியோ N Z8 செலக்ட் மாடலின் பெட்ரோல் மேனுவல் வெர்ஷன் விலை ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம் என்றும் Z8 செலக்ட் பெட்ரோல் ஆட்டோமேடிக் விலை ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் என்றும் Z8 செலக்ட் டீசல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 17 லட்சத்து 99 ஆயிரம் என்றும் Z8 டீசல் ஆட்டோமேடிக் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு.
    • எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் 300 ஆடம்பர எஸ்.யு.வி. மாடலை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2021 முதல் 2203 ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த 269 லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    லேண்ட் குரூயிசர் 300 மாடல்களின் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனின் ECU மென்பொருளை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதால் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் மென்பொருளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    மென்பொருள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் வரை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காரை பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை சம்பந்தப்பட்ட டொயோட்டா விற்பனை மையங்களை சேர்ந்த அதிகாரிகள் தொடர்பு கொள்வர். இது தொடர்பான சந்தேகம் மற்றும் விளக்கங்களை டொயோட்டா வாடிக்கையாளர் சேவை மையம் தெளிவுப்படுத்தும்.

    தற்போது விற்பனை செய்யப்படும் லேண்ட் குரூயிசர் LC300 மாடலின் விலை ரூ. 2 கோடியே 10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    இதில் 3.3 லிட்டர், V6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 305 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட Z900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z900 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 9 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன.

    2024 கவாசகி Z900 மாடல்- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் கிராஃபீன் ஸ்டீல் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் சீட்கள், அதிரடியான பாடி வொர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புதிய கவாசகி Z900 மாடலில் 948 சி.சி. இன்லைன், 4 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 123.6 ஹெச்.பி. பவர், 98.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் இதன் முன்புறம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது.

    பிரேக்கிங்கிற்கு 300mm இரட்டை முன்புற டிஸ்க்குகள், பின்புறம் 250mm டிஸ்க்குகள் உள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் 2024 கவாசகி Z900 மாடல் டுகாட்டி மான்ஸ்டர் , பி.எம்.டபிள்யூ. F900R மற்றும் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அறிமுகம் செய்ய எம்.ஜி. மோட்டார் திட்டம்.
    • இது எம்.ஜி.-யின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஏற்கனவே எம்.ஜி. ZS EV மற்றும் கொமெட் EV என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை எம்.ஜி. நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், எம்.ஜி.-யின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

     


    இந்த மாடல் 2024 பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி. நிறுவனம் திட்டமிடுவதாக தெரிகிறது.

    எம்.ஜி. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என்றும் இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்.ஜி.-யின் நிலையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த கார் அந்நிறுவனத்தின் பௌஜூன் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 10 லட்சம் பட்ஜெட்டிற்குள் நிலை நிறுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

    ×