iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

மலேசியா, டிரினிடாட் டொபாகோ, கிர்கிஸ்தான் விடுதலை நாள்

டிரினிடாட் டொபாகோ 1962-ம் ஆண்டும், கிர்கிஸ்தான் சோவித் ரஷ்யாவிடம் இருந்து 1991-ம் ஆண்டு விடுதலை பெற்றது.

ஆகஸ்ட் 31, 2017 00:52

பொற்கோவிலை தோற்றுவித்த குரு ராம் தாஸ் சீக்கிய மதகுருவானார் (ஆக.30, 1574)

குரு ராம் தாஸ் லாகூரில் 1534-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1574-ஆம் ஆண்டு இதே தேதியில் சீக்கிய மதகுருவானார். இவர் புனித நகரான அமிர்தசரஸில் பொற்கோவிலைத் தோற்றுவித்தார்.

ஆகஸ்ட் 30, 2017 00:44

என்.எஸ்.கிருஷ்ணன் மரணமடைந்தார் (ஆக.30, 1957)

என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி... சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...

ஆகஸ்ட் 30, 2017 00:43

நார்வேயில் பயணிகள் விமானம் மலையில் மோதி 141 பேர் பலி (29-8-1996)

நார்வே நாட்டில் மிகமோசமான விமான விபத்து 1996-ம் ஆண்டு இதே நாளில் (29-8-1996) நடந்தது.

ஆகஸ்ட் 29, 2017 01:07

அமெரிக்காவில் 1833 பேரை பலிவாங்கிய காத்ரீனா புயல் லூசியானாவில் நிலைகொண்டது (29-8-2005)

அமெரிக்காவில் காத்ரீனா புயலின் கோரத் தாண்டவத்தில் 1,833 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29, 2017 01:07

சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் விடுதலையான நாள்: 28-8-1991

சோவியத் யூனியல் இருந்த உக்ரைன் 1991-ம் ஆண்டு அதனில் இருந்து பிரிந்து விடுதலை பெற்றது.

ஆகஸ்ட் 28, 2017 01:04

கால்டுவெல் இறந்த தினம்: 28-8-1891

கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் 28-8-1891 அன்று மரணமடைந்தார்

ஆகஸ்ட் 28, 2017 01:04

உலகின் முதல் ஜெட்விமானம் 'ஹென்கல் ஹி 178' சேவை தொடங்கியது (27-8-1939)

ஜெர்மனியில் ஹென்கல் கம்பெனி முதல்முறையாக வேகமாக பறக்கும் ஜெட்விமானத்தை தயாரித்து பறக்க விட்டது. இதற்கு ஹென்கல் ஹி 178 எனப் பெயரிட்டது. இதை எரிக் வார்சிட்ஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார்.

ஆகஸ்ட் 27, 2017 01:15

மவுண்ட்பேட்டன் பிரபு குண்டு வைத்து கொல்லப்பட்டார் (27-8-1979)

மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும்போது ஐரிஷ் குடியரசு ராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்க வைத்துக் கொன்றனர்.

ஆகஸ்ட் 27, 2017 01:14

திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் (26-8-1883)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் விருத்தாசல முதலியார்- சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.

ஆகஸ்ட் 26, 2017 01:02

அன்னை தெரசா பிறந்த நாள் (26-8-1910)

அன்னை தெரசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார்.

ஆகஸ்ட் 26, 2017 01:02

பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)

Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25, 1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கையின் மூலம் 1828-ம் ஆண்டு விடுதலை அடைந்தது.

ஆகஸ்ட் 25, 2017 01:07

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் (25-8-1906)

திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர்.

ஆகஸ்ட் 25, 2017 01:06

மாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி (24-8-2004)

மாஸ்கோவில் கடந்த 2004ம் ஆண்டு உள்நாட்டு விமானங்களை குறிவைத்து தீவிரவாதிகள் அடுத்தடுத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 89 பயணிகள் பலியானார்கள்.

ஆகஸ்ட் 24, 2017 00:20

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் (24-8-1875)

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் 1875 ஆம் வருடம் 24ம் தேதி நீந்திக் தனது இலக்கை எட்டினார்.

ஆகஸ்ட் 24, 2017 00:19

மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஒன்றாக இணைவதாக 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி முடிவெடுத்தது.

ஆகஸ்ட் 23, 2017 02:56

மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் வெளிவந்த நாள்: 23-8-1948

மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் தமிழிலும் தெலுங்கிலும் 1948-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டன.

ஆகஸ்ட் 23, 2017 02:55

நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989

சூரிய குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள கோளான நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.

ஆகஸ்ட் 22, 2017 02:55

சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.

ஆகஸ்ட் 22, 2017 02:55

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)

16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியம் 1911ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி திருடப்பட்டது.

ஆகஸ்ட் 21, 2017 01:33

பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது (21-8-1821)

ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது.

ஆகஸ்ட் 21, 2017 01:33

5