iFLICKS தொடர்புக்கு: 8754422764

அமெரிக்காவில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது (ஆக.5, 1884)

1884-ம் ஆண்டு இதே தேதியில் அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆகஸ்ட் 05, 2017 01:08

அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ மர்மமான முறையில் மரணம் (ஆக.5, 1962)

அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ 1962-ம் ஆண்டு இதே தேதியில் மரணம் அடைந்தார். 1947-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் மன்றோ, தொடர்ந்து பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். நகைச்சுவை பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

ஆகஸ்ட் 05, 2017 00:51

ஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள்: 4-8-2006

பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்

ஆகஸ்ட் 04, 2017 00:38

ஓசியானோஸ் கப்பல் கடலில் மூழ்கியது: பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்ட நாள்- 4-8-1991

ஓசியானோஸ் என்ற கிரேக்க கப்பல் தென்ஆப்பிரிக்கா கடல் பகுதியில் மூழ்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 571 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

ஆகஸ்ட் 04, 2017 00:37

மொரோக்கோவில் விமானம் மலை மீது மோதி 188 பேர் பலியான நாள்: 3-8-1975

மொரோக்கோவில் போயின் 707 வகை விமானம் மலை மீது மோதியதில் 188 பேர் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டது.

ஆகஸ்ட் 03, 2017 06:07

இலங்கை: காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நாள்: 3-8-1990

காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990-ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இந்த தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 03, 2017 06:07

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 270 பேர் பலி (2-7-1968)

பிலிப்பைன்சில் 1968-ல் நடைபெற்ற பயங்கர நிலநடுக்கத்தில் 270 பேர் பலியானார்கள்.

ஆகஸ்ட் 02, 2017 02:16

ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான நாள்: 2-8-1934

ஹி்ட்லரின் முழுப்பெயர் அடால்ப் ஹிட்லர். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக 2-8-1934 நாள் பொறுப்பேற்றார்.

ஆகஸ்ட் 02, 2017 02:16

பராகுவேயில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 396 பேர் பலி (01-08-2004)

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

ஆகஸ்ட் 01, 2017 00:26

பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது (01-08-1960)

பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 01, 2017 00:26

மலேசியாவில் பாலம் இடிந்து விழுந்து 32 பேர் பலியான நாள்: 31-7-1988

மலேசியாவின் பெனாங் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இதில் 32 பேர் பலியானார்கள். 1634 பேர் காயம் அடைந்தனர்.

ஜூலை 31, 2017 00:57

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் அவருடன் வீரமரணம் எய்தினர்.

ஜூலை 31, 2017 00:57

கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)

கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் உலககோப்பையை வென்ற நாடு என்ற பெருமை பெற்றது.

ஜூலை 30, 2017 05:08

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேர் பலியான நாள்: 28-7-1976

சீனாவின் ஹெபெய்-ல் உள்ள டங்ஷான் அருகே 1976-ம் ஆண்டு ஜுலை மாதல் 28-ந்தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது.

ஜூலை 28, 2017 05:55

முதலாம் உலகப்போர் ஆரம்பமான நாள்: 28-7-1914

ஆஸ்திரியா இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்றபோது செர்பியா நாட்டைச் சேர்ந்த காவ்ரீலோ பரின்சிப் என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது 1914-ம் ஆண்டு ஜுன் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.

ஜூலை 28, 2017 05:55

விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்:27-7-1975

விடுதலைப் புலிகள் அமைப்பு 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது.

ஜூலை 27, 2017 05:19

உக்ரைன் கண்காட்சியில் ராணுவ விமானம் மக்கள் மீது விழுந்து 85 பேர் பலியான நாள்: 27-7-2002

உக்ரைன் ராணுவத்தின் 60-ம் ஆண்டை முன்னிட்டு விமானப்படை கண்காட்சியில் ராணுவ விமானம் மக்கள் மீது விழுந்து 85 பேர் பலியானார்கள்

ஜூலை 27, 2017 05:19

கார்கில் போரில் இந்தியா வெற்றி கண்ட நாள்: ஜூலை 26- 1999

கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்ததுபோல் இன்றும் நம் கண்முன்னால் நிழலாடுகிறது. ஜூலை 26 கார்கில் போரின் வெற்றித் திருநாள்!

ஜூலை 26, 2017 05:57

அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது (26-7-1971)

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அப்பல்லோ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. அந்த வரிசையில் 15-வது அப்பல்லோவை 1971-ம் ஆண்டு விண்ணில் ஏவியது.

ஜூலை 26, 2017 05:57

பாரிசில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 109 பேர் பலியான நாள்: 25-7-2000

கடந்த 2000-ம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் தயாரிப்பான கன்கார்டு சூப்பர் சோனிக் விமானம் பாரிசில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 109 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

ஜூலை 25, 2017 00:44

இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றுக் கொண்ட நாள்: 25-7- 2007

2007-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றுக் கொண்டார்.

ஜூலை 25, 2017 00:44

5