search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • விஷன் ப்ரோ விற்பனை குறித்து ஆப்பிள் அப்டேட் கொடுத்தது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமெரிக்காவில் துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. பயனர்கள் இந்த ஹெட்செட்-ஐ ஜனவரி 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அமெரிக்க பயனர்கள் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

     


    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையிலும், மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க முடியும். இதன் இந்திய விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • சாம்சங் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய விற்பனை விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    கேலக்ஸி S24 சீரிசில் - கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், இவை பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக லீக் ஆகி வருகின்றன. அதன்படி கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளன.

    இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களில், இந்தியாவில் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை சாம்சங் நிறுவனம் ஜனவரி 18 அல்லது 19-ம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போனின் வினியோகம் ஜனவரி 24-ம் தேதியே துவங்கும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி S24 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999 அல்லது ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 அல்லது ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 999 என துவங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • ஆப்பிள் ஐபோனுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஐபோன் மாடலுக்கான சிறப்பு சலுகைகள் குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு விஜய் சேல்ஸ்-இல் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு சலுகை விற்பனை 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர், ஆன்லைன் வலைதளத்தில் நடைபெறுகிறது.

    சிறப்பு விற்பனை காரணமாக 128 ஜி.பி. மெமரி கொண்ட ஐபோன் 13 விலை ரூ. 51 ஆயிரத்து 820 என மாறியுள்ளது. இதன் உண்மை விலை ரூ. 59 ஆயிரத்து 900 ஆகும். ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 61 ஆயிரத்து 160 ஆக மாறி இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 490 என துவங்குகிறது.

     


    ஐபோன் 15 சீரிஸ் சலுகை விவரங்கள்:

    ஐபோன் 15 பேஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரத்து 990

    ஐபோன் 15 பிளஸ் பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 820


    ஐபோன் 15 ப்ரோ 128 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)


    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)

    • மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது.
    • சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X6 சீரிஸ் மற்றும் M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி 11-ம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை அந்நிறுவனம் ஒவ்வொன்றாக டீசர் வடிவில் அறிவித்து வருகிறது.

    இந்த நிலையில், போக்கோ X6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது. அதன்படி போக்கோ X6 ப்ரோ 5ஜி மாடலில் சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஒ.எஸ். கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சாதனமாக இது இருக்கும்.



    இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து போக்கோ F5 மாடலுக்கும் ஹைப்பர்-ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதே போன்று சியோமி மற்றும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் புதிய ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை போக்க X6 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராஸர் வழங்கப்படுகிறது. இதன் பேக் பேனலில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mm2 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. 

    • இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும்.

    சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெற உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதும், அதன் இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில், இந்திய பயனர்கள் புதிய கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய முடியும். புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோரில் மேற்கொள்ளலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்கள் தற்போது செலுத்தும் முன்பதிவு கட்டணம் ரூ. 1999, ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதன் விலையில் இருந்து தானாக குறைக்கப்பட்டு விடும். ஒருவேளை புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் முடிவை மாற்றிக் கொள்பவர்கள், தாங்கள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற முடியும்.

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • விலை குறைப்பு தவிர வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி A54 5ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A54 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

     

    தற்போதைய விலை குறைப்பின் படி கேலக்ஸி A54 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 36 ஆயிரத்து 999-க்கும் 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 38 ஆயிரத்து 999-க்கும் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் வைட், ஆசம் லைம், ஆசம் வைலட் மற்றும் ஆசம் கிராஃபைட் நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 5.1, டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP டெப்த் சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    • வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
    • மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.

    அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

     


    மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    • ஜியோ புத்தாண்டு சலுகையில் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ பிரீபெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பழைய வருடாந்திர பிரீபெயிட் சலுகைகளை ஜியோ மாற்றியமைத்துள்ளது.

    இந்த அறிவிப்பு காரணமாக ஜியோ புத்தாண்டு சலுகையில் பயனர்களுக்கு 24 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையான ரூ. 2,999-இல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    அந்த வகையில், பயனர்கள் வழக்கமான 365 நாட்கள் இன்றி கூடுதலாக 24 நாட்கள் வரை நீண்ட கால சலுகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வருடாந்திர ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

    இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

    • செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
    • அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.

    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

    அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

     


    இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.

    சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

     


    உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும். 

    • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

    சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    "நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
    • இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

     


    புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    • ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
    • வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.

    வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    ×