search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    யூடியூப் ஹேக்ஸ்: இதெல்லாம் முன்னாடியே தெரிந்திருந்தால்?
    X

    யூடியூப் ஹேக்ஸ்: இதெல்லாம் முன்னாடியே தெரிந்திருந்தால்?

    இண்டர்நெட் கிடைத்தால் வீடியோ பார்க்க பயன்படுத்தும் யூடியூப் தளத்தில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத சில எளிய தந்திரங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பொழுதுபோக்கு, முதல் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவது வரை எல்லாவற்றிற்கும் வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள உதவும் தளமாக யூடியூப் இருக்கிறது. இண்டர்நெட்டில் வீடியோ பார்க்க மிகவும் எளிய தளமாக இருக்கும் யூடியூப் பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது. 

    யூடியூபில் காண கிடைக்கும் எண்ணிலடங்கா வீடியோக்களில் நமக்கு ஏற்படும் அனைத்து வித சந்தேகங்களையும் தீர்த்து கொள்ள முடியும். சந்தேகங்களை மட்டும் தீர்த்து கொள்ளாமல், உணவு தயாரிப்பது முதல் பல்வேறு சாதனங்களை எவ்வாறு இயக்கி சரி செய்ய வேண்டும் என்பனவற்றை அறிந்து கொள்ள முடியும். 

    உங்களுக்கு தெரியாத சில யூடியூப் பயன்பாடுகள் இருக்கிறது. இங்கு பெரும்பாலானோர் அறிந்திராத சில யூடியூப் ஹேக்ஸ் பற்றி இங்கு பார்ப்போம். 



    யூடியூப் வீடியோ / ஆடியோ டவுன்லோடு செய்யலாம்:

    முதலில் யூடியூப் ஆடியோவினை மட்டும் டவுன்லோடு செய்ய வீடியோ லின்க்கினை "listentoyoutube" என்ற தளத்தில் வைத்து டவுன்லோடு பட்டனினை கிளிக் செய்யலாம். இதே போல் ஆடியோ இல்லாமல் வீடியோ மட்டும் டவுன்லோடு செய்ய யூடியூப் லின்க்-இல் youtube என்ற வார்த்தைக்கு பதில் ssyoutube என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு டைப் செய்யும் போது ஆடியோ இல்லாமல் வீடியோ மட்டும் டவுனேலோடு ஆகும். 

    வயது வரம்பு வீடியோக்களை பார்க்கலாம்:

    சில சுவாரஸ்யமான வீடியோக்களை பார்க்க நம் நாட்டில் அனுமதி இல்லாமலோ அல்லது வயது வரம்பு காரணமாக பார்க்க முடியாமல் போகலாம். இவ்வாறு ஏற்படும் போது youtube என்ற வார்த்தைக்கு பதில் "nsfwyoutube" என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு டைப் செய்யும் போது வயது காரணமாக முடக்கப்பட்டுள்ள வீடியோக்களை பார்க்க முடியும்.  

    அடுத்து நம் நாட்டில் காண கிடைக்காத யூடியூப் வீடியோக்களை பார்க்க யூடியூப் லின்க் http://youtube.com/watch?v=XXX இவ்வாறு இருக்கும். இனி யூடியூப் லின்க்கினை http://youtube.com/watch/v/XXX என டைப் செய்ய வேண்டும். 

    கடுப்பேற்றும் விளம்பரங்களை தவிர்க்கலாம்:

    பெரும்பாலான வீடியோக்கள் துவங்கும் முன்போ அல்லது சில பெரிய வீடியோக்களில் நடுநடுவே விளம்பரங்கள் வரும். இவ்வாறான விளம்பரங்களை தவிர்க்க youtube என்ற வார்த்தைக்கு பதில் "youtubeskip" என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு டைப் செய்யும் போது வீடியோக்களை பார்க்க முடியும்.

    வீடியோக்களை ஜிஃப் பைலாக மாற்றலாம்:

    அனைத்து யூடியூப் வீடியோக்களையும் ஜிஃப் பைலாக மாற்ற youtube என்ற வார்த்தைக்கு பதில் "gifyoutube" என டைப் செய்ய வேண்டும். இவ்வாறு டைப் செய்யும் போது வீடியோக்களை ஜிஃப் பைலாக மாற்ற முடியும். 
    Next Story
    ×