search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா? தெரிந்து கொள்வது எப்படி?
    X

    ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா? தெரிந்து கொள்வது எப்படி?

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
    புதுடெல்லி:

    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் நமக்கு எந்தளவு நன்மை வழங்குகிறதோ அதே அளவு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் பயன்படுத்துபவரை சார்ந்தது தான் என்றாலும் இவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிக சர்ச்சைகளை கிளப்பி விடுகிறது. 

    ஃபேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை ஏற்படுத்தி கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை பிளாக் செய்யும் வசதியும் ஃபேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், உங்களை யார் யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். 

    ஃபேஸ்புக் மெசேஞ்சர்:

    உங்களை பிளாக் செய்திருப்பவர்களை கண்டறிய உங்களுக்கு சந்தேகமாக இருக்கும் நபரின் காண்டாக்டை மெசேஞ்சர் செயலி மூலம் குறுந்தகவல் அனுப்புங்கள். அனுப்பும் போது "This person isn't receiving messages from you right now" என்ற தகவல் உங்களின் சாட் பாக்ஸில் வரும். 

    இவ்வாறு தகவல் வரும் பட்சத்தில் குறிப்பிட்ட நபர் உங்களை ஃபேஸ்புக்கில் பிளாக் செய்து விட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

    ப்ரோஃபைல் புகைப்படம்:

    ஃபேஸ்புக்கில் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் நண்பரை தேடி பாருங்கள். ஒரு வேலை உங்களது நண்பரின் ப்ரோஃபைல் புகைப்படம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நபர் உங்களை பிளாக் செய்துவிட்டார் எனலாம். 

    ஃபேஸ்புக் சர்ச்:

    ஃபேஸ்புக் சர்ச் பாரில் உங்களது நண்பரின் பெயரை சர்ச் செய்யுங்கள், ஒருவேலை அவரது ப்ரோஃபைல் உங்களுக்கு காண்பிக்கவில்லை எனில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்களாகவே புரிந்து கொள்ளுங்கள். 

    நண்பர் மூலம் உறுதி செய்தல்: 

    இனி உங்களது ப்ரோஃபைலை விடுத்து உங்களது நண்பரின் ப்ரோஃபைல் மூலம் குறிப்பிட்ட நபரை தேடுங்கள், அவருக்கு ப்ரோஃபைல் காண்பிக்கப்படும் பட்சத்தில்  குறிப்பிட்ட நபர் உங்களை ஃபேஸ்புக்கில் இருந்து பிளாக் செய்துள்ளார் என்பதை உறுதி செய்யலாம். 

    செட்டிங்ஸ்:

    இறுதியாக செட்டிங்ஸ் சென்று உங்களை பிளாக் செய்துள்ளதாக நீங்கள் கருத்தும் நண்பரின் பெயரை பிளாக்கிங் ஆப்ஷனில் பதிவு செய்யுங்கள், அங்கு நீங்கள் சந்தேகித்த நண்பரின் ப்ரோஃபைல் காண்பிக்கப்படும் பட்சத்தில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.   
    Next Story
    ×