search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோஷன்-ஐ கேமரா கொண்ட சோனி XZs ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது
    X

    மோஷன்-ஐ கேமரா கொண்ட சோனி XZs ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

    இந்தியாவில் சோனி நிறுவனத்தின் XZs ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 11-ந்தேதி துவங்குகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சோனியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா XZs என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் இன்று துவங்கியுள்ளது, விற்பனை ஏப்ரல் 11-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச் எக்ஸ்பீரியா XZs குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2900 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 19 எம்பி மோஷன்-ஐ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அல்ட்ரா ஸ்லோ-மோஷன் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இத்துடன் பல்வேறு கேமரா சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி கேமராவும், வைடு-ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 



    அனைத்து சோனி விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வரயிருக்கும் சோனி எக்ஸ்பீரியா XZs பிளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்வோருக்கு ரூ.4990 மதிப்புள்ள வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புத்தம் புதிய சோனி எக்ஸ்பீரியா XZs ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×