search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வியக்க வைக்கும் செல்ஃபி கேமராவுடன் தயாராகும் ஐபோன் 8
    X

    வியக்க வைக்கும் செல்ஃபி கேமராவுடன் தயாராகும் ஐபோன் 8

    இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 இல் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் புதிய ஐபோனின் செல்ஃபி கேமரா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோனில் பெசல்-லெஸ் OLED டிஸ்ப்ளே, கிளாஸ் பின்புறம் மற்றும் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் அம்சங்கள் சார்ந்த புதிய தகவல்கள்  கிடைத்துள்ளன.  

    அதன்படி புதிய ஐபோனில் அனைவரையும் வியக்க வைக்கும் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் ன கூறப்படுகிறது. இதன் செல்ஃபி கேமராவில் இன்பிராரெட் மாட்யூல் மற்றும் 3D வடிவில் புகைப்படங்களை பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் வன்பொருள் 2D படங்களை அதிக துல்லித்துடன் இணைக்க வழி செய்யும். இதே வன்பொருள் கேமிங், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கும். 

    ஐபோன் 8 மேம்படுத்தப்பட்ட 3D செல்ஃபி கேமரா, இன்ப்ராரெட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும், மொத்தமாக செல்ஃபி கேமரா சோனி நிறுவனம் தயாரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.



    புதிய ஐபோனில் ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படும் மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டலாம். இதோடு இந்த ஐபோன் இதுவரை வெளியான ஐபோன்களை விட விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  

    இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 8 வெளியாக இருக்கும் நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம்.

    வழக்கத்தை விட சில மாதங்கள் முன்னதாகவே ஐபோன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு துவங்குகிறது என்றும், இம்முறை 300 சதவிகிதம் வரை கூடுதலான சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலாண்டு மொத்த ஐபோன்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 48 மல்லியன் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையி்ல் ஐபோன் 8 தயாரிப்பிற்காக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s மாடல்களின் தயாரிப்புகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×