search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வீடியோ: கற்பனை உலகிற்கு கடத்தி செல்லும் புதிய கேம்: நன்றி, விர்ச்சுவல் ரியாலிட்டி
    X

    வீடியோ: கற்பனை உலகிற்கு கடத்தி செல்லும் புதிய கேம்: நன்றி, விர்ச்சுவல் ரியாலிட்டி

    ஒய்வற்று உழைப்போருக்கு சற்று நேரம் ஆறுதலாகவும், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் புதிய கேம் உருவாக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் துணை கொண்டுள்ள இந்த கேம் பற்றி இங்கு பார்ப்போம்.
    சியோல்:

    நாம் வாழும் டென்ஷன் நிறைந்த வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய இடைவெளி கட்டாயம் தேவைப்படும். அவ்வாறான சமயங்களில் உட்கார்ந்த இடத்திலேயே எதையாவது செய்யாமல் உடல் அசையும் சில பயிற்சிகளை செய்யலாம். ஓய்வு நேரத்திலும் பயிற்சியா என்பவர்கள் விளையாடவும் செய்யலாம். இது அவரவர் விருப்பம் தான்.  

    நிறைய பேருக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்நாலும் வெளியில் செல்வதை தவிர்த்து ஒரே இடத்தில் இருப்பர். வீட்டில் இருந்த படியே வெளி உலகிற்கு உங்களை அழைத்து செல்ல புதிய தொழில்நுட்பம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) உதவியாக இருக்கும். உண்மையில் நமக்கு அறிமுகமாகி சில காலம் ஆகிவிட்டாலும் இன்றும் இது புதிய தொழில்நுட்பமாகவே பார்க்கப்படுகிறது.

    விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய கேம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜாகர் (Jogger) என பெயரிடப்பட்டுள்ள இந்த கேம் ஆகுலஸ் இணையதளத்தில் கிடைக்கின்றது. ஆகுலஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனத்தில் கிடைக்கும் இந்த கேம் உங்களை கற்பனை உலகிற்கு அழைத்து செல்கிறது.

    பொம்மை படம் போன்ற உலகில் நடக்கும் இந்த கேமில் வேற்றுகிரக வாகனம் உங்களை துரத்தும், அவ்வப்போது உங்களை சுட முயற்சிக்கும். இவைகளில் இருந்து நீங்கள் தப்பி ஓடுவதே இந்த கேமின் நோக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற கேம்களை போன்று இல்லாமல் இதில் நீங்கள் உங்களின் உடலை அசைக்க வேண்டும். அதாவது நிஜத்தில் ஓடினால் மட்டுமே கேமில் உங்களால் முன்னேற முடியும்.

    ஜாகர் கேம் விளையாடும் போது உங்கள் மூளை மட்டுமில்லாமல் உடலுக்கும் பயிற்சி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இந்த கேம் எவ்வாறு இருக்கிறது என்பதை வீடியோ வடிவில் பார்க்கலாம்..

    Next Story
    ×