search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சியோமி டி.வி. அறிமுகம்
    X

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சியோமி டி.வி. அறிமுகம்

    சியோமி நிறுவனம் 50 இன்ச் திரை கொண்ட Mi டி.வி. 4A மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைகாட்சியில் ஹெச்.டி.ஆர். தொழில்நுட்பம், 4K மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் புதிய Mi டி.வி. 4A 50 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சியோமி Mi டி.வி. 4A சீரிஸ் இன் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். புதிய 50 இன்ச் டி.வி. அந்நிறுவனத்தின் ஆறாவது மாடல் ஆகும்.

    புதிய 50 இன்ச் Mi டி.வி. 4A விலை CNY2399 அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சியோமி சாதனங்களை போன்று புதிய தொலைகாட்சி பெட்டி இந்தியாவில் வெளியிடுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    ஏற்கனவே ஐந்து தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் சியோமி நிறுவனத்தின் ஆறாவது மாடலாக புதிய 50 இன்ச் Mi டி.வி. 4A அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தொலைகாட்சியில் 4K UHD 3840x2160 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் ஹெச்.டி.ஆர்.10+HLG சப்போர்ட் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் ஃபிரேம்லெஸ் வடிவமைப்பு, இன்டகிரேடட் Mi டி.வி. பார், 10 ஸ்பீக்கர்கள், 2 வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-ஊஃபர்கள் வழங்கப்ட்டுள்ளது. புதிய மாடலில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொலைகாட்சியில் 3D ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இத்துடன் புதிய சியோமி தொலைகாட்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பேட்ச்வால் என அழைக்கப்படுகிறது. இந்த யூசர் இன்டர்ஃபேஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்து இயங்குகிறது. 

    புதிய Mi டி.வி. 4A 50 இன்ச் மாடலில் 64-பிட் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை, ப்ளூடூத், டால்பி மற்றும் டி.டி.எஸ். ஆடியோ (DTS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் தொலைகாட்சியை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கண் சோர்வு ஏற்படாமல் இருக்க ஏதுவாக திரை நிறம் பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் Mi ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல், ப்ளூடூத், குரல் அங்கீகாரம் (Speech Recognition), Mi டச் மற்றும் இன்ஃப்ராரெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×