search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.11,001 தள்ளுபடி விலையில் கிடைக்கும் கூகுள் ஸ்மார்ட்போன்
    X

    ரூ.11,001 தள்ளுபடி விலையில் கிடைக்கும் கூகுள் ஸ்மார்ட்போன்

    கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் ரூ.11,001 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனத்தின் இரண்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஆஃப்லைன் சந்தையில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளின் கீழ் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.49,999க்கும் கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.11,001 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.61,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களின் துவக்க விலை ரூ.61,000 முதல் துவங்கியது. 

    பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் 64 ஜிபி கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.49,999க்கும் 128 ஜிபி பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.58,999க்கும் கிடைக்கிறது. பிக்சல் 2 XL 64 ஜிபி ரூ.61,999 மற்றும் 128 ஜிபி பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.70,999க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.



    கூடுதலாக குறைந்த கால சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறையில் வாங்கும் போது ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  இத்துடன் கூகுள் பிக்சல் 2 வாங்கும் போது கூடுதல் கேஷ்பேக் ரூ.8,000 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு வட்டியில்லா மாத தவணை (12 மாதங்களுக்கு) முறை வசதி வழங்கப்படுகிறது.

    விலை குறைப்பு மற்றும் கேஷ்பேக் மட்டுமின்றி பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL வாங்குவோருக்கு ஏர்டெல் வழங்கும் 120 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா பெற விரும்பும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.549க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.649 (இன்ஃபினிட்டி திட்டம்) தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகையை மைஏர்டெல் செயலி மூலம் ஆக்டிவேட் செய்ய வேண்டும். 

    கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுக்கு முன்னதாக ஆன்லைனில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன. மேலும் ஆஃப்லைன் போன்றே ஆன்லைனிலும் சில வர்த்தகர்கள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன.
    Next Story
    ×