search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நேரலை சேவையை வழங்க யுப் டிவி மற்றும் டெய்லி ஹன்ட் இடையே ஒப்பந்தம்
    X

    நேரலை சேவையை வழங்க யுப் டிவி மற்றும் டெய்லி ஹன்ட் இடையே ஒப்பந்தம்

    ஓவர் தி டாப் தளத்தில் பிரபல நிறுவனமான யுப் டிவி டெய்லி ஹன்ட் தளத்துடன் இணைந்து நேரலை சேவையை வழங்க இருக்கிறது.
    புதுடெல்லி:

    சர்வதேச ஓவர் தி டாப் தளத்தில் பிரபல நிறுவனமாக இருக்கும் யுப் டிவி இந்தியாவின் முன்னணி செய்தி தளமான டெய்லி ஹன்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய சேவையை வழங்க இருக்கிறது.

    யுப் டிவி மற்றும் டெய்லி ஹன்ட் நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் படி யுப் டிவியின் பிராந்திய மொழி நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் நேரலையில் காண முடியும். புதிய நேரலை சேவை தற்சமயம் 9 மொழிகளில் 130 சேனல்களில் வழங்கப்படுகிறது.

    நேரலை தொலைகாட்சி சேவையை அறிமுகம் செய்யும் டெய்லி ஹன்ட் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் டெய்லி ஹன்ட் நிறுவனத்துடன் இணைந்து நேரலையில் எங்களது வாடிக்கையாளர்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

    கடந்த ஆண்டுகளில் ஓவர் தி டாப் மற்றும் வீடியோ ஆன் டிமான்ட் தளத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி புதிய செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். என யுப் டிவி நிறுவனர் உதய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
     
    நேரலை தொலைகாட்சி சேவை டெய்லி ஹன்ட் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் சேவையாக இருந்து வருகிறது. டெய்லி ஹன்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் செய்திகள் மற்றும் தரவுகளை செய்தி கண்ணோட்டத்தில் பார்க்க விரும்புகின்றனர். வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்குவதோடு யுப் டிவி வாடிக்கையாளர்கள் நேரலையில் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என டெய்லி ஹன்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி விரேந்திரா குப்தா  தெரிவித்துள்ளார்.
     
    இந்தியா முழுக்க 14 பிராந்திய மொழிகளில் வீடியோ தரவுகளை வழங்கும் டெய்லி ஹன்ட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை வழங்கும் 650-க்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. பிராந்திய மொழி வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டீப் லெர்னிங் வழிமுறையை கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்குகிறது. அந்த வகையில் நேரலை சேவை மூலம் தனித்துவம் மிக்க அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.

    அமெரிக்காவின் அட்லான்டாவை சேர்ந்த யுப் டிவி ஓவர் தி டாப் வீடியோ தளத்தில் சேவை வழங்கும் முதல் நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பிராந்திய மொழி தரவுகளை உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் மிக எளிதாக தரவுகளை இயக்க முடியாமல் இருக்கும் இடர்பாட்டை குறைக்கிறது.

    சர்வதேச அளவில் கனிசமான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கொண்டிருக்கும் யுப் டிவி இந்திய சந்தையில் 2015-ம் ஆண்டில் களமிறங்கியது. ஓவர் தி டாப் தளத்தில் நேரலை நிகழச்சிகள், திரைப்படங்கள் மற்றும் புதிய வெளியீட்டு சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விளையாட்டு போட்டிகளையும் நேரலையில் வழங்கி வருகிறது. 
    Next Story
    ×