search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதுவரவு: சாம்சங் கேலக்ஸி டேப் A 8.0 (2017) அறிமுகம்
    X

    புதுவரவு: சாம்சங் கேலக்ஸி டேப் A 8.0 (2017) அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் சத்தமில்லாமல் அறிமுகமாகியுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேப் A 8.0 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    வியட்நாம்:

    சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சத்தமில்லாமல் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியான கேலக்ஸி டேப் A 8.0 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக டேப் A 8.0 (2017) வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி டேப் A 8.0 (2017) மாடலில் முந்தைய மாடலை விட தலைசிறந்த கேமரா, அதிக திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி டேப் A 8.0 (2017) 4ஜி எல்டிஇ மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.18,200 என நிர்ணயம் செய்யப்பட்டு, ஏற்கனவே விற்பனையும் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக வியட்நாமில் விற்பனை துவங்கியுள்ள நிலையில் மற்ற சந்தைகளில் வெளியிடுவது சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.



    சாம்சங் கேலக்ஸி டேப் A 8.0 (2017) மாடலில் 8.0 இன்ச் WXGA 1280x800 பிக்சல் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி டேப் A 8.0 (2017) மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான கேலக்ஸி டேப் A 8.0 மாடலில் 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.

    ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் டேப் A 8.0 (2017) சிங்கிள் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் சப்போர்ட் வழங்குவது சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொண்டுள்ளதோடு 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×