என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஸ்மார்ட்போன் மூலம் வருங்கால வைப்பு நிதி: விரைவில் புது செயலி அறிமுகம்
Byமாலை மலர்11 April 2017 6:13 AM GMT (Updated: 11 April 2017 6:14 AM GMT)
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதியை ஸ்மார்ட்போன் மூலம் பெற வழி செய்யும் புதிய செயலியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உருவாக்கி வருகிறது.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள சுமார் நான்கு கோடி தொழிலாளர்களும் தங்களின் வைப்பு நிதி சார்ந்த தேவைகளை விரைவில் மொபைல் போன் செயலி மூலம் இயக்க முடியும். புதிய செயலியை கொண்டு தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை பெறுவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற முடியும்.
ஆன்லைனில் வைப்பு நிதியை பெற உதவும் செயலி ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் ஆப் (UMANG) உடன் இணைக்கப்படும். எனினும் இதற்கான கால அவகாசம் இன்னும் நிர்ணயம் செய்யப்பட்டவில்லை.
வைப்பு நிதி, மற்றும் இத்துறை சார்ந்த சேவைகளை பெற தற்சமயம் வரை வருங்கால வைப்பு நிதியில் 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பத்தை நேரடியாகவே சமர்பித்து வருகின்றனர். இதுவரை 110 வட்டார அலுவலகங்கள் ஏற்கனவே மத்திய சர்வெர்களுடன் இணைக்கப்பட்டு விட்டதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதியில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை வகுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் விண்ணப்பத்தை சமர்பித்த மூன்று மணி நேரத்திற்குள் வைப்பு நிதியை பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×