search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வோடபோன் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ புதிய சலுகை அறிவிப்பு
    X

    வோடபோன் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ புதிய சலுகை அறிவிப்பு

    வோடபோன் இந்தியா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இணைந்து புதிய சலுகையை அறிவித்துள்ளன. அமேசான் பிரைம் வீடியோ சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகளவு வீடியோ தரவுகளை பார்த்து ரசிக்க முடியும். 

    அந்த வகையில் வோடபோன், அமேசான் பிரைம் வீடியோ சேர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை வோடபோன் சூப்பர்நெட் 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தி மார்ச் 22 ஆம் தேதி முதல் பார்க்கலாம்.   



    புதிய சலுகையின் கீழ் அமேசான் பிரைம் சேவையை மைவோடபோன் செயலி அல்லது வோடபோன் இணையதளத்தை பயன்படுத்தி சப்ஸ்கிரைப் செய்யும் போது ரூ.250 வரை அமேசான் பே கட்டணத்தில் கேஷ்பேக் வழங்கப்படும். அமேசான் பிரைம் வீடியோ சந்தா ரூ.499 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    அமேசான் பிரைம் வீடியோ சேவைகள் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆண்டிற்கு ரூ.499 என்ற கட்டணத்தில் சந்தா வசூலிக்கப்படும் நிலையில் புதிய கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×