search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் நான்கு ஐபேட்களை வெளியிட ஆப்பிள் திட்டம்: உண்மையில் நடக்குமா?
    X

    விரைவில் நான்கு ஐபேட்களை வெளியிட ஆப்பிள் திட்டம்: உண்மையில் நடக்குமா?

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனங்கள் மந்தமான டேப்லெட் சந்தையிலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் விரைவில் நான்கு ஐபேட்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி புதிய ஐபேட் சாதனங்கள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 12.9, 10.5, 9.7 மற்றும் 7.9 இன்ச் என மொத்தம் நான்கு ஐபேட்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   

    12.9 மற்றும் 9.7 இன்ச் திரை கொண்டவை ஐபேட் ப்ரோ என்றும் 10.5 இன்ச் திரை கொண்ட மாடல் புதிய சாதனமாக இருக்கும் என்றும் 7.9 இன்ச் கொண்ட மாடல் ஐபேட் மினி என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஐபேட் சாதனங்களுடன் ஐபேட் மினி ப்ரோ ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. 



    7.9 இன்ச் கொண்ட ஐபேட் ப்ரோ நான்கு ஸ்பீக்கர், 12 எம்பி பிரைமரி கேமரா, ஸ்மார்ட் கனெக்டர் மற்றும் ட்ரூ டோன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோக்களில் நான்கு மைக்ரோபோன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இது தவிர ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 128 ஜிபி மாடல் மற்றும் சிவப்பு நிறத்தில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்றும் புத்தம் புதிய ஆப்பிள் வாட்ச் ஒன்றையும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×