search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மொபைல் போன் நம்பர்களில் புதிய மாற்றம்: விரைவில் வழங்க ஜியோ திட்டம்
    X

    மொபைல் போன் நம்பர்களில் புதிய மாற்றம்: விரைவில் வழங்க ஜியோ திட்டம்

    இந்தியாவில் பயன்பாட்டிற்கு வழங்கப்பட இருக்கும் மொபைல் போன் நம்பர்கள் “6” என்ற துவக்க எண் கொண்ட நம்பர்களை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வாடிக்கையான மொபைல் போன் நம்பர்கள் தற்போது வரை 9 என்ற எண்ணில் இருந்தே துவங்குகிறது. இந்நிலையில் இனி வெளியிடப்படும் மொபைல் போன் நம்பர்கள் “6” எண்ணில் இருந்து துவங்கும் படி ரிலையன்ஸ் ஜியோ விரைவில் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ மொபைல் போன் நம்பர்கள் “6” இல் இருந்து துவங்கும் எண்களை தமிழ் நாடு, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட டெலிகாம் வட்டாரங்களில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ள MSC கோட்கள் 6 என்ற துவக்க எண்களை கொண்டுள்ளதை தொடர்ந்து ஜியோ இவற்றை பயன்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ராஜஸ்தானிற்கு 60010-60019 என்றும், அசாமில் 60020-60029 என்றும் தமிழ் நாட்டில் 60030-60039 என ஒதுக்கப்பட்டுள்ளது. ஜியோ மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் 9 என துவங்கும் MSC கோட்களையும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் 8 என துவங்கும் MSC கோட்களை பெற்றுள்ளது. 

    இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1.12 பில்லியனாக இருந்தது, இது அதற்கும் முந்தைய ஆண்டை விட 21.02 மில்லியன் அதிகமாகும். இந்த வளர்ச்சி ரிலையன்ஸ் ஜியோ வரவிற்கு பின் ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் இதுவரை 80 மில்லியன் 4ஜி வாடிக்கைாயளர்களை சேர்த்துள்ளது.
    Next Story
    ×