search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சர்வதேச அளவில் 44 மில்லியன் வைபை ஹாட்ஸ்பாட்கள் அறிமுகம்: பிஎஸ்என்எல் அசத்தல் திட்டம்
    X

    சர்வதேச அளவில் 44 மில்லியன் வைபை ஹாட்ஸ்பாட்கள் அறிமுகம்: பிஎஸ்என்எல் அசத்தல் திட்டம்

    சர்வதேச ரோமிங் பயனர்களை குறிவைத்து, உலகளவில் வை-பை ஹாட்ஸ்பாட்களை செயல்படுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் ரோமிங் சந்தையில் கவனம் செலுத்தும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி டாட்டா நிறுவனம் சுமார் 44 மில்லியன் வை-பை ஹாட்ஸ்பாட்களை உலகளவில் இயக்க வழி செய்கிறது. இவற்றின் விலை ரூ.999 முதல் துவங்குகிறது.  

    புதிய திட்டங்களில் வை-பை சேவையினை பெற பிஎஸ்என்எல் செயலியை பயன்படுத்தலாம். புதிய திட்டங்களின் விலை மூன்று நாட்களுக்கு ரூ.999, 15 நாட்களுக்கு ரூ.1,599 மற்றும் 30 நாட்களுக்கு ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை செலுத்தியதும் மொபைல் செயலியானது வைபை ஹாட்ஸ்பாட்களை காண்பிக்கும். 

    இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங்கின் போதும் வரம்பற்ற இணைய வசதியை பயன்படுத்தலாம். வைபை ஹாட்ஸ்பாட்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை ஆக்டிவேட் செய்த பின் வாடிக்கையாளர்கள் ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. 

    மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஆறாம் இடத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இத்துடன் வயர்லைன் பிராட்பேன்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை பொருத்த வரை பிஎஸ்என்எல் முன்னிலை வகிக்கிறது.
    Next Story
    ×