search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி S8: விலை மற்றும் வெளியீட்டு தேதி கசிந்தது
    X

    சாம்சங் கேலக்ஸி S8: விலை மற்றும் வெளியீட்டு தேதி கசிந்தது

    சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி S8 விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்டவை இணையத்தில் கசிந்துள்ளது.
    சியோல்:

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி S8 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்டவை தற்போது கசிந்துள்ளது. 



    இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றில், சாம்சங் கேலக்ஸி S8 தயார் நிலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், மார்ச் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.58,000 வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல்-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி S8 போனில் ஹோம் பட்டனை நீக்க இருப்பதாக கூறிப்படுகிறது.  

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என்றும் செல்ஃபி கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம் வழங்கப்படலாம் எனவும் தெரிவித்தது. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 8GB ரேம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனத்தின் பிரெஷர்-சென்சிட்டிவ் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 835 குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலில் கேலக்ஸி S8 ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×