search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    முன்பதிவிலேயே அமோக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 ஸ்மார்ட்போன்
    X

    முன்பதிவிலேயே அமோக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 ஸ்மார்ட்போன்

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    பீஜிங்:

    உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போனான நோக்கியா 6 அறிமுகம் செய்யப்பட்டு அதன் முன்பதிவு தேதியும் அறிவிக்கப்பட்டது. முதல் நாள் முன்பதிவிலேயே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்சமயம் வரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்துள்ளனர். நோக்கியா 6 ஸ்மார்ட்போன் சீனாவின் JD.com தளத்தில் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பிளாஷ் விற்பனை ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

    நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தற்சமயம் வரை சீனாவில் மட்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் JD.com தளத்தில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை பிரத்தியேகமாக விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விற்பனை தேதி அறிவிக்கப்பட்ட போதும் இதன் விநியோகம் குறித்த தேதி எதுவும் தற்சமயம் வரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்திய மதிப்பில் ரூ.16,700 என்ற விலையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை 500,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்த நிலையில் மிக சிறிய காலகட்டத்திற்குள் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக ஆன்லைனில் மட்டும் விற்பனை துவங்கப்பட்டுள்ள நிலையில், ஆஃப்லைன் விற்பனை நிலையங்களிலும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.     

    புகைப்படங்களை எடுக்க நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 தவிர எச்எம்டி குளோபல் நிறுவனம் மேலும் சில நோக்கியா ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Next Story
    ×