search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 விரைவில் அறிமுகம்
    X

    இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 விரைவில் அறிமுகம்

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் சில தினங்களில் இந்தியா வர இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜனவரி 19, ஆம் தேதி நடைபெற இருக்கும் அறிமுக விழாவிற்கான அழைப்பிதழ்களை சியோமி நிறுவனம் அனுப்பி வருகிறது. அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் சியோமியின் அறிமுக விழாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.  

    இது குறித்து ட்விட்டரில் சியோமி வெளியிட்டுள்ள முன்னோட்டத்தில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4 என்ற ஸ்மார்ட்போனினை வெளியிடும் என்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதோடு ஏற்கனவே வெளியான தகவல்களில் ஜனவரி மாதத்திலேயே ரெட்மி நோட் 4 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 

    இந்த ஸ்மார்ட்போனின் பெயரே, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகம் விற்பனையான ரெட்மி நோட் 3-யின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதை வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. இதில் இரண்டு மாடல்கள் இருந்தன, ஒன்றில்  2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் மெமரியும், மற்றொரு மாடலில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது இவற்றினை விலை முறையே ரூ.21,491 என்றும் ரூ.27,055  என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

    எனினும் இவை இரண்டும் இறக்குமதி செய்யப்படுபவை என்பதால் இந்தியாவில் இதன் விலை சற்றே குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி ரெட்மி நோட் 4 கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனும் பார்க்க ரெட்மி நோட் 3 போன்றே காட்சியளித்தது. இதன் முக்கிய அம்சமாக இதில் வழங்கப்பட்டுள்ள  2.5D வளைந்த கிளாஸ் இருக்கிறது. 

    சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிலாஷ் 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ சப்போர்ட், வை-பை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI 8 வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×