search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ஐஓஎஸ் செயலியை வெளியிட்ட சாம்சங்
    X

    ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ஐஓஎஸ் செயலியை வெளியிட்ட சாம்சங்

    சாம்சங் கியர் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ஐஓஎஸ் செயலியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனம் தனது கியர் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் கியர் ஃபிட் 2 சாதனங்களுக்கென ஐஓஎஸ் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஐஓஎஸ் செயலிகளும் சாம்சங் கியர் S2 மற்றும் S3 உள்ளிட்ட ஸ்மார்ட்வாட்ச்களுடன் இணைந்து வேலை செய்வதோடு கியர் ஃபிட் 2 பிட்னஸ் டிராக்கர்களுடனும் வேலை செய்யும். 

    தற்சமயம் வரை கியர் S2 மற்றும் கியர் S3 உள்ளிட்டவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் மட்டுமே வேலை செய்து வந்தது. இந்நிலையில் இவை இரண்டும் இனி ஐபோன்களுடன் இணைந்து வேலை செய்யும். சாம்சங் அணியக்கூடிய கியர் சாதனங்கள் ஐபோன்களுடன் வேலை செய்யும் என சாம்சங் நிறுவனம் முன்னதாகவே தெரிவித்திருந்தது. 

    கியர் S ஆப் முதலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும், இதன் பின் உங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நோட்டிபிகேஷன்கள் வரும். ஃபிட்னஸ் தகவல்களை S ஹெல்த் செயலியுடனும் சின்க் செய்ய முடியும். இந்த செயலி கியர் S2 மற்றும் கியர் S3 சாதனங்களில் கியர் ஆப் ஸ்டோர் மூலம் இன்ஸ்டால் செய்யப்பட்டும் செயலிகளை கவனிக்கும் . 

    ஒருவேலை கியர் ஃபிட் 2 என்றால் இந்த செயலி உங்களது ஃபிட்னஸ் தகவல்களை S ஹெல்த்  செயலியுடன்  சின்க் செய்ய வழி செய்து நோட்டிபிகேஷன்களை ஐபோனில் வழங்கும். 

    சாம்சங்  கியர் S3 ஃபிரான்டியர் மற்றும் S3 கிளாசிக் உள்ளிட்ட சாதனங்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கியர் S3 மாடல்களை இம்மாதம் இறுதியில் வெளியிடும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×