search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • போக்கோ X6 சீரிசில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுகிறது.
    • போக்கோ X6 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    போக்கோ பிரான்டு தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் போக்கோ X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியான நிலையில், தற்போது இந்த தகவல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய போக்கோ X6 சீரிசில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று போக்கோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதே பிராசஸர் ரெட்மி K70E மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இது ரெட்மி ஸ்மார்ட்போனின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.



    இந்த மாடல் போக்கோ X6 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடலில் 6.67 இன்ச் 1.5K OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

    • விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
    • டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. விற்பனை விரைவில் துவங்க இருப்பதை ஒட்டி, ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலின் உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன.

    அதன்படி இரண்டாம் தலைமுறை விஷன் ப்ரோ மாடலில் சற்றே அதிநவீன மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அதிக பிரகாசமான மற்றும் அதிக திறன் கொண்ட மைக்ரோ OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது ஒவ்வொரு கண்களிலும் வழக்கமான 4K டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

     


    இது குறித்து தென் கொரிய செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், ஆப்பிள் விஷன் ப்ரோ 2 மாடலில் RGB OLEDoS டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டிஸ்ப்ளேக்கள் தற்போதைய WOLED டிஸ்ப்ளேக்களை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    தற்போது RGB OLEDoS ரக டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக சாம்சங் உள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய விஷன் ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே மாற்றுவதில் உறுதியாக இருந்தால், சாம்சங் டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் மாடல்களில் பயன்படுத்தப்படும் OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • டிசைன் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.
    • இந்த ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் அறிமுகமாகும்.

    ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய A70 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. மெமரியுடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அந்த வகையில், புதிய ஐடெல் A70 ஸ்மார்ட்போன் நான்குவித நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் அளவில் பெரிய நாட்ச் வழங்கப்படுகிறது. மேலும் இது ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் முதல் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷனிலும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

     


    இந்த ஸ்மார்ட்போனில் தடிமனான பெசல்கள், அகலமான டிஸ்ப்ளே நாட்ச், முன்புறம் எல்.இ.டி. ஃபிளாஷ், பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறமாகவும், இடதுபுறம் சிம் டிரே வழங்கப்படுகிறது. ஐடெல் A70 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக ஐடெல் நிறுவம் தனது A05s ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ஐடெல் A05s 4 ஜி.பி. வெர்ஷனின் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் கடந்த அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    • அசவுகரியமும் ஏற்படாத வகையில் கச்சிதமான டிசைன் கொண்டிருக்கிறது.
    • பியூர் பாட்ஸ் மாடலில் ஏர் வேவ் தொழில்நுட்பம் உள்ளது.

    இந்திய தொழில்நுட்ப நிறுவனமான நாய்ஸ் முற்றிலும் புதிய ஒபன் வயர்லெஸ் ஸ்டீரியோவை (OWS) இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பியூர் பாட்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய OWS மிகக் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையில் கச்சிதமான டிசைன் கொண்டிருக்கிறது.

    பயனர் காதுகளில் சரியாக பொருந்திக் கொள்ளும் வகையில் மினமலிஸ்ட் டிசைன் கொண்டிருக்கும் பியூர் பாட்ஸ் ஏர் கன்டக்ஷன் பயன்படுத்தி சவுண்ட்-ஐ கடத்துகிறது. நாய்ஸ் பியூர் பாட்ஸ் மாடலில் ஏர் வேவ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஏர் கன்டக்ஷன் மெக்கானிசம் மேம்பட்ட ஆடியோ அனுபவம் வழங்குகிறது.


     

    நாய்ஸ் பூயர் பாட்ஸ் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் சத்தத்துடன் சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் பெறலாம். இதில் உள்ள 16 மில்லிமீட்டர் நியோடிமியம் டைனமிக் டிரைவர்கள் முழு சார்ஜ் செய்தால் 80 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

    இதனுடன் கழற்றக்கூடிய பியூர் பேண்ட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பாட்ஸ்-ஐ நெக்பேண்ட் போன்றும் மாற்றிக் கொள்ளலாம். நாய்ஸ் பியூர் பாட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் குவாட் மைக் உள்ளதால், அழைப்புகளின் போதும் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பியூர் பாட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (டிசம்பர் 19) ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் துவங்குகிறது. இந்த பியூர் பாட்ஸ் மாடல் ஜென் பெய்க் மற்றும் பவர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம்.
    • ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 13 சீரிஸ் கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சீன வெளியீட்டை தொடர்ந்து ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்தியா மற்றும் சர்வதேச வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஜனவரி 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் ரெட்மி நோட் 13 சீரசின் மூன்று மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

     


    எனினும், இது குறித்து சியோமி இந்தியா இதுவரை எந்த தகவலும் இல்லை. மாறாக, ரெட்மி நோட் 13 சீரிஸ் வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டர் மற்றும் சிறப்பு வலைப்பக்கத்தை திறந்துள்ளது. இந்த வலைப்பக்கத்தில் ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

    இதுதவிர உலகம் முழுக்க 33.8 கோடி ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரத்து 800 ஆகும். 



    • ஐடெல் நிறுவனத்தின் குறைந்தவிலை ஸ்மார்ட்போன் அறிமுகம்.
    • ஐடெல் A சீரிஸ் ஸ்மார்ட்போனில் டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐடெல் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் A05s ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் A05s மாடல் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மட்டுமே கொண்டிருந்தது. இந்த நிலையில், ஐடெல் நிறுவனம் தனது A05s மாடலின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஐடெல் A05s மாடலில் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

     


    ஐடெல் A05s அம்சங்கள்:

    6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர்

    4 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    8MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    5 வாட் அடாப்டர்

    கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்

    3.5mm ஆடியோ ஜாக்

    இந்திய சந்தையில் புதிய ஐடெல் A05s மாடலின் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் க்ரிஸ்டல் புளூ, குளோரியஸ் ஆரஞ்சு, மீடோ கிரீன் மற்றும் நெபுளா பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம்.
    • போக்கோ C65 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    போக்கோ பிராண்டின் போக்கோ C65 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமான போக்கோ C65 விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகிறது. அதன்படி டிசம்பர் 15-ம் தேதி போக்கோ C65 இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா பிராண்டு தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது. போக்கோ C65 டீசர்களில் இந்த மாடல் அதன் சர்வதேச வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    போக்கோ C65 அம்சங்கள்:

    6.74 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்

    அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    50MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    3.5mm ஹெட்போன் ஜாக், வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கிறது.
    • ஸ்மார்ட் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்-இல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் டிம்பர் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ், மேஜிக் ரிங் வழங்கப்படுகிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     


    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. அம்சங்கள்:

    6.6 இன்ச் 1612x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்

    ஆக்டாகோர் யுனிசாக் டி606 பிராசஸர்

    மாலி G57 MP1 GPU

    3 ஜி.பி. ரேம் (3 ஜி.பி. விர்ச்சுவல் ரேம்)

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்.ஒஎஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. ஸ்மார்ட்போன் டிம்பர் பிளாக், ஷைனி கோல்டு, கேலக்ஸி வைட் மற்றும் க்ரிஸ்டல் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 6 ஆயிரத்து 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் டிசம்பர் 13-ம் தேதி துவங்குகிறது.

    இத்துடன் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5 ஆயிரத்து 669 என்று மாறிவிடும். 

    • ரியல்மி GT5 ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே 4500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் மிக மெல்லிய பெசல்கள் உள்ளன.

    ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. இது ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரியல்மி GT5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K BOE X1 AMOLED ஸ்கிரீன், 4500 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ப்ரோ XDR ஹை டைனமிக் டிஸ்ப்ளே, டால்பி விஷன், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், டிசி டிம்மிங், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20000 லெவல் டிம்மிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிக மெல்லிய பெசல்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான மெமரி வழங்கப்படுகிறது.

    ரியல்மி GT5 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2780x1264 பிக்சல் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி 3.2

    5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    சீன சந்தையில் புதிய ரியல்மி GT5 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரத்து 860 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 430 ஆகும்.

    • புதிய நத்திங் ஸ்மார்ட்போன் இந்த பெயரில் அறிமுகமாகலாம்.
    • இந்த ஸ்மார்ட்போன் இதுபோன்ற தோற்றம் கொண்டிருக்கலாம்.

    நத்திங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் போன் 2 என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நத்திங் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1 தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி நத்திங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 3 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படாது என டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

     

    நத்திங் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் AIN142 ஆக இருக்கிறது. இதுவே இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2a பெயரில் அறிமுகமாகும் என்பதை உணர்த்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் மற்றும் க்ளிம்ஃப் இண்டர்ஃபேஸ் நத்திங் போன் 1 மாடலில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் இதுவரை வெளியான ரெண்டர்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது.

    ஃபயர் போல்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் "லுமோஸ்" (Lumos) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சொலரிஸ் மற்றும் சொலெஸ் மாடல்களுடன் இணைகிறது. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் மாடலில் 1.91 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், உடல்நல அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள டிஸ்ப்ளே HD ஸ்கிரீன், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை பயன்படுத்த முடியும்.

    புதிய லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது. இதில் ஹார்ட் ரேட் டிராக்கிங், SpO2 டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதல் அம்சங்களாக ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், பில்ட்-இன் கேம்ஸ் உள்ளன.

    இவைதவிர வானிலை அப்டேட்கள், கால்குலேட்டர், மியூசிக், கேமரா கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரோஸ் கோல்டு, சில்வர், புளூ, பிளாக் மற்றும் கோல்டு என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் வலைத்தளங்களில் நவம்பர் 30-ம் தேதி துவங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1499 எனும் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது அறிமுக விலை என்பதால், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

    • இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் பிளஸ் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலில் 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரெட்மேஜிக் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ரெட்மேஜிக் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இரு மாடல்களிலும் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான மெமரி வழங்கப்படுகிறது. இவற்றில் 6.8 இன்ச் OLED BOE Q9+ ஸ்கிரீன், அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP அன்டர் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலில் 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடலில் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 165 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனினை 16 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

    ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.8 இன்ச் 2480x1116 பிக்சல் Full HD+ OLED டிஸ்ப்ளே

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    8 ஜி.பி., 12 ஜி.பி., 16 ஜி.பி., 24 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரெட்மேஜிக் ஒ.எஸ். 9

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    16MP அன்டர் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    9 ப்ரோ - 6500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சார்ஜிங்

    9 ப்ரோ பிளஸ் - 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 165 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடல் விலை 4399 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 52 ஆயிரத்து 270 என்று துவங்குகின்றன. ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 5499 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 341 என்று துவங்குகின்றன. சீனாவில் இவற்றின் விற்பனை நவம்பர் 28-ம் தேதி துவங்க உள்ளன.

    ×