search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசுஸ் சென்போன் கோ புதிய பதிப்பு இந்தியாவில் வெளியானது
    X

    அசுஸ் சென்போன் கோ புதிய பதிப்பு இந்தியாவில் வெளியானது

    அசுஸ் நிறுவனத்தின் சென்போன் கோ புதிய பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அசுஸ் சென்போன் கோ புதிய பதிப்பு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சென்போன் கோ அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் அதிசிறந்த கேமரா வழங்கப்பட்டிருந்தது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை சென்போன் கோ ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் எச்டி IPS டிஸ்ப்ளே, குவால்காம் 8916 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    3010 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சென்போன் கோ 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத், வை-பை, டூயல் சிம் ஸ்லாட், யுஎஸ்பி 2.0 மற்றும் 2ஜி, 3ஜி, 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.  

    இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அசுஸ் சென்போன் கோ ஸ்மார்ட்போன் ரூ.8,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×