search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    2017 ஐபோனில் 3 ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு புது அம்சங்கள்
    X

    2017 ஐபோனில் 3 ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு புது அம்சங்கள்

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிடுவது ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை இந்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களுக்கு இரண்டு அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் இதில் 5.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் 2017-இல் வெளியாகும் மூன்று ஐபோன்களிலும் 3ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள ஐபோன் 7-இல் 2 ஜிபி ரேம் மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடலில் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.  

    மெமரியை பொருத்த வரை 3ஜிபி ரேம், 4.7 இன்ச், 5.5 இன்ச் திரை மற்றும் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போன்றே 32, 128, 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் 5.8 இன்ச் மாடல் 64 மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவை கூடுதல் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.    



    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 'ஐபோன் எடிஷன்' என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து 70 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களை வாங்க ஆப்பிள் முன்பதிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியானது. இத்துடன் புதிய ஐபோன் 8-இல் 3D செல்ஃபி கேமரா, எம்பெடெட் கைரேகை ஸ்கேனர் மற்றும் உயர்-ரக ஃபேஷியல் ரெகக்னீஷன் வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    விலையை பொருத்த வரை புதிய ஐபோன் 8, 850 டாலர்கள் முதல் 900 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,100 முதல் ரூ.58,400 துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி ஐபோன் 8 தயாரிப்பு கட்டணமானது அதிகபட்சம் 70 முதல் 80 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,500 முதல் ரூ.5,100 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×