search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மார்ச் 31 முதல் ரெட்மி நோட் 4 முன்பதிவு துவங்குகிறது
    X

    மார்ச் 31 முதல் ரெட்மி நோட் 4 முன்பதிவு துவங்குகிறது

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் முன்பதிவு மார்ச் 31 ஆம் தேதி துவங்குகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை அனாவரும் வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் பிளாஷ் விற்பனை முறை இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து சில நொடிகளில் ஸ்மாபர்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் சியோமி பிளாஷ் விற்பனை முறையை வெகுவாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கென சியோமியின் Mi.com தளத்தில் தனது சாதனங்களை முன்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. 

    அதன் படி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் மார்ச் 31 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் போது சாதனத்திற்கான கட்டணத்தை செலுத்தினால் ஐந்து நாட்களுக்குள் ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும். 

    எனினும் சாதனத்திற்கு கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்படவில்லை, மேலும் ஒரு முறை ஒரே ஸ்மார்ட்போன் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். முன்னதாக சியோமி ரெட்மி நோட் 4 ஆஃப்லைன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இம்முறை முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. 



    சிறப்பசங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 2ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    மூன்று மாடல்களிலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்க 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 கொண்டு இயங்கும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    டூயல் சிம் ஸ்லாட், வை-பை, ஜிபிஎஸ், ப்ளூடூத், இன்ப்ராரெட், 3ஜி, 4ஜி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட்போனை மற்றவர்கள் இயக்காதபடி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். 
    Next Story
    ×