search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்ஜி ஸ்டைலஸ் 3 அறிமுகம்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்
    X

    எல்ஜி ஸ்டைலஸ் 3 அறிமுகம்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

    எல்ஜி நிறுவனத்தின் ஸ்டைலஸ் 3 பேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஜி ஸ்டைலஸ் 3 சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
    சியோல்:

    எல்ஜி ஸ்டைலஸ் 3 பேப்லெட் சாதனம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு எல்ஜி வெளியிட்ட ஸ்டைலஸ் 2 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஸ்டைலஸ் 3 வெளியாகியுள்ளது. லெனோவோ இசட் 2 பிளஸ், ரெட்மி நோட் 4, மோட்டோ ஜி5 பிளஸ் உள்ளிட்ட சாதனங்களுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.7 இன்ச் எச்டி 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், வீடியோக்களை 1080 ரெசல்யூஷன் தரத்தில் பதிவு செய்யும் வசதியும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

    3200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்டைலஸ் 3, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட், டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டைலஸ் 3 சாதனத்துடன் பென் பாப் 2.0 வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சாதனத்துடன் புதிய  ஸ்டைலஸ் 3 சாதனத்தில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.   

    இத்தகைய சிறப்பம்சங்களை கொண்டுள்ள எல்ஜி ஸ்டைலஸ் 3 இந்தியாவில் ரூ.18,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எல்ஜி ஸ்டைலஸ் 3, இந்தியா முழுவதும் இயங்கி வரும் எல்ஜி விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×