search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏப்ரலில் வெளியாகும் சியோமி Mi6: முழு தகவல்கள்
    X

    ஏப்ரலில் வெளியாகும் சியோமி Mi6: முழு தகவல்கள்

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Mi6 ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிளையில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.
    பீஜிங:

    2017 ஆம் ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கும் சியோமி Mi 6 ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி முன்னதாக வெளியிட்ட நோட் 3 மற்றும் நோட் 3s பிரைம் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சியோமியின் புதுவரவு ஸ்மார்ட்போனாக Mi6 உள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 5.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ், 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மற்ற மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்படலாம், டாப் மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் புகைப்படங்களை எடுக்க 19 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி Mi6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ.19,399 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×