search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எச்டிசியின் புதிய ஃபிளாக்‌ஷிப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
    X

    எச்டிசியின் புதிய ஃபிளாக்‌ஷிப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

    எச்டிசி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எச்டிசி யு அல்ட்ரா என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் எவை என்பதை பார்ப்போம்.
    புதுடெல்லி: 

    எச்டிசி நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. எச்டிசி யு அல்ட்ரா என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 6 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எச்டிசி நிறுவனம் யு பிளே என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. 

    எச்டிசி யு அல்ட்ரா மற்ரும் யு பிளே ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்டிசி யு அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 5.7 இன்ச் 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட QHD சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே, இரண்டாவது 2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.  

    இந்தியாவில் 64ஜிபி மெமரி கொண்ட யு அல்ட்ரா மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. 128 ஜிபி கொண்ட மாடல் சஃப்பையர் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 12 அல்ட்ரா பிக்சல் கேமரா மற்றும் 16 அல்ட்ரா பிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு கேமராக்களிலும் அழகிய புகைப்படங்களை எடுக்க பல்வேறு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.    



    எச்டிசி யு அல்ட்ரா 4ஜி எல்டிஇ, வோல்ட்இ, GPS/ A-GPS, ப்ளூடூத் 4.2, வை-பை, எச்டிசி கனெக்ட், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், எச்டிசி பூம் சவுண்டு மற்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.

    எச்டிசி யு பிளே ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 4ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P10 சிப்செட் வழங்கப்பட்டுள்லது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா பிக்சல் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    4ஜி எல்டிஇ, வோல்ட்இ, GPS/ A-GPS, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்தியாவில் எச்டிசி யு அல்ட்ரா ரூ. 59,990 மற்றும் எச்டிசி யு பிளே ரூ. 39,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×