search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அதிக சக்திவாய்வந்த K5 நோட் அறிமுகம்: லெனோவோ அதிரடி
    X

    அதிக சக்திவாய்வந்த K5 நோட் அறிமுகம்: லெனோவோ அதிரடி

    லெனோவோ நிறுவனம் தனது K5 நோட் ஸ்மார்ட்போனின் சக்திவாய்ந்த பதிப்பினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான லெனோவோ K5 நோட் இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    லெனோவோ நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட K5 நோட் ஸ்மார்ட்போனின் சக்திவாய்ந்த பதிப்பினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ள K5 நோட் ஸ்மார்ட்போன் ரூ.13,499 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை லெனோவோ K5 நோட் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P10 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    இன்டெர்னல் மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வசதியும் டால்பி அட்மாஸ் சவுண்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக சிறப்பான ஆடியோ அனுபவம் கிடைக்கும்.   

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×