search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்ஜி K3 (2017): வெளியீட்டு தேதி மற்றும் முழு சிறப்பம்சங்கள் அறிவிப்பு
    X

    எல்ஜி K3 (2017): வெளியீட்டு தேதி மற்றும் முழு சிறப்பம்சங்கள் அறிவிப்பு

    எல்ஜி நிறுவனத்தின் K3 (2017) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் முழு சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் புதுடெல்லியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த விழாவில் மத்திய தொலைதொடர்பு மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார். எல்ஜி நிறுவனம் இவ்விழாவில் 2017 ஆம் ஆண்டின் K-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவிற்கு முன்பு எல்ஜி நிறுவனம் ஐந்து K-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்படி எல்ஜி K3 (2017), எல்ஜி K4 (2017), எல்ஜி K8 (2017) மற்றும் எல்ஜி K10 (2017) ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. நடுத்தர வகையை சேர்ந்த எல்ஜி K-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வைடு ஆங்கில் லென்ஸ் கொண்ட கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  

    முன்னதாக இந்தியாவில் எல்ஜி நிறுவனம் எல்ஜி K7 எல்டிஇ மற்றும் எல்ஜி K10 எல்டிஇ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி K3 (2017) 4.5 இன்ச் 480x854 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    எல்ஜி K4 (2017) 5.0 இன்ச் 480x854 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. எல்ஜி K4 (2017) 5.0 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 1.5 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. எல்ஜி K10 (2017) 5.3 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×