search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்கின் முதல் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் : இன்று முதல் முன்பதிவு செய்யலாம்
    X

    சாம்சங்கின் முதல் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் : இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்யலாம். இதனை சாம்சங் நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது. இதன் விற்பனை நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி வரும் ஞாயிற்று கிழமை வரை ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு 12 மாதங்களுக்குள் ஒரு முறை மட்டும் திரையை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.    

    கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் 6ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்ன?

    டூயல்-சிம் கொண்டுள்ள C9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 6.0 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி AMOLED டிஸ்ப்ளே, 1.94 மற்றும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி C9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 64ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர், 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வை-பை, GPS, Glonass, Beidou, NFC, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×