search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்ஜி G6 ஸ்மார்ட்போன்: புது தகவல்கள் வெளியானது
    X

    எல்ஜி G6 ஸ்மார்ட்போன்: புது தகவல்கள் வெளியானது

    எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான G6 சாதனத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    சியோல்:

    எல்ஜி நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் G6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகின. இந்நிலையில் புதிதாய் வெளியாகியிருக்கும் புகைப்படம் இந்த ஸ்மார்ட்போனின் இறுதி வடிவமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

    அப்படியாக இம்முறை வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் முன்னதாக வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. எல்ஜி G6 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை இடம் பெறும் என தெரியவந்துள்ளது. கருப்பு நிறம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ஜெட் பிளாக் நிறம் கொண்ட சாதனம் லிமிட்டெட் எடிஷனாக வெளியிடப்படலாம் என தெரிகின்றது.  

    உலக தொழில்நுட்ப சந்தையில் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் எல்ஜி G6 பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் எல்ஜி G6 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை கொண்ட முதல் கூகுள் அல்லாத ஸ்மர்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. வாட்டர் ப்ரூஃப் வசதி மற்றும் கழற்ற முடியாத பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.  
    Next Story
    ×