search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட்போனிற்கு முன்னதாக வீடியோவை வெளியிடும் சாம்சங்?
    X

    ஸ்மார்ட்போனிற்கு முன்னதாக வீடியோவை வெளியிடும் சாம்சங்?

    சாம்சங் நிறுவனம் இம்மாத இறுதியில் புதிய கேலக்ஸி டேப் S3 சாதனத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் வீடியோவையும் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சியோல்:

    இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி டேப் S3 சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 ஆம் தேதி சாம்சங் சாதனம் வெளியாக இருக்கிறது.

    இத்துடன் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிடும் முன் இம்மாத இறுதியில் அதன் முன்னோட்ட வீடியோவினை வெளிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.    

    சாம்சங் கேலக்ஸி S8 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி, சிறப்பம்சங்கள் மற்றும் சில தகவல்கள் இடம் பெறும் என கூறப்படுகின்றது. முன்னதாக சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த பல்வேறு சிறப்பம்சங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

    அப்படியாக புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் இரு வித அளவுகளில் 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் டூயல்-எட்ஜ் வளைந்த திரை வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஹோம் பட்டன் நீக்கப்பட்ட இந்த சாதனத்தில் கைரேகை ஸ்கேனர் சாதனத்தின் பின்புறம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    சாம்சங்-இன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளான பிக்ஸ்பி சேவை கொண்டிருக்கும் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் இன்டெர்னல் மெமரியை பொருத்த வரை 64 ஜிபியும் மெமரியை கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

    டூயல் கேமரா அமைப்பு கொண்ட கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3250 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், பெரிய திரை கொண்ட மாடல் 3750 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இவற்றின் விற்பனை ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 
    Next Story
    ×