search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ரெட்மி ப்ரோ 2: ரகசியமாக வெளியான சிறப்பம்சங்கள்
    X

    சியோமி ரெட்மி ப்ரோ 2: ரகசியமாக வெளியான சிறப்பம்சங்கள்

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி ரெட்மி ப்ரோ 2 அம்சங்களை விரிவாக பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போனினை சீனாவில் வெளியிட்டது. டூயல் கேமரா அமைப்பு மற்றும் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி ப்ரோ 2 என பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை பொருத்த வரை 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதே போல் ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போன் மற்றொரு மாடலிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. இரண்டாவது மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

    முந்தைய ஸ்மார்ட்போன் போன்று இல்லாமல் ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 66x சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக வெளியிடப்பட்ட ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ X20 சிப்செட் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 12 எம்பி சோனி IMX362 சென்சார் மற்றும் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்த ஸ்மார்ட்போனில் முந்தைய பதிப்பில் வழங்கப்பட்டதை விட சிறப்பான கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இத்துடன் சியோமி ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.

    விலையை பொருத்த வரை 4ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ.15,691 என்றும் 6ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ.17,654 என விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
    Next Story
    ×