search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.15000 பட்ஜெட்டில் சூப்பர் கேமரா கொண்டுள்ள ஸ்மார்ட்போன்கள்
    X

    ரூ.15000 பட்ஜெட்டில் சூப்பர் கேமரா கொண்டுள்ள ஸ்மார்ட்போன்கள்

    இந்தியாவில் 15000 ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இன்று ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகம் கவனிக்கும் அம்சமாக அதன் கேமரா இருக்கிறது. சிறப்பான கேமரா இருக்கும் ஸ்மார்டபோன்களையே பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களிலும் அதன் விலைக்கு ஏற்ப கேமரா லென்ஸ்கள் வழங்கப்படுகிறது. எனினும் இன்றைய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலேயே சிறப்பான கேமரா வழங்கப்படுகிறது.

    இங்கு 15000 ரூபாய் விலையில் சிறந்த கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பற்றி பார்ப்போம்.

    ஹானர் 6X

    இந்தியாவில் ஹானர் 6X ரூ.12,999 முதல் துவங்குகிறது. ஹானர் 6X ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 எம்பி மாட்யூல் ஒன்றும் 2 எம்பி மாட்யூல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி ரெடமி நோட் 4

    இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகின்றது. இதில் 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி கேமராவுடன் பல்வேறு கேமரா சென்சார் மற்றும் புகைப்படங்களை அழகாக்கும் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    கூல்பேட் நோட் 3S

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூல்பேட் நிறுவனத்தின் நோட் 3S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா மூலம் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கூல்பேட் நோட் 5

    கூல்பேட் நிறுவனத்தின் நோட் 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 5P லென்ஸ் மற்றும் ஃபுல் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைடு ஆங்கில் லென்ஸ் கொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    லெனோவோ K6 பவர்

    லெனோவோ K6 பவர் இந்தியாவில் ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களை அழகாக்க அம்சங்கள் மற்றும் ஃபுல் எச்டி தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×